Advertisment

இரட்டை கொலை! விவசாயிகளை குறிவைக்கும் கொடூர கும்பல்!

ss

ரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியின் புறநகர் முழுக்க விவசாயம்தான். அவரவர் தோட்டத் திலேயே வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளைப் பார்ப்பதுதான் அவர்களது முழுநாள் வேலை. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தோட்டத்தில் வீடுகள் இருக்கும். அப்படித்தான் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மேகறையான் என்ற பகுதியில் 75 வயதான விவசாயி ராமசாமியும் அவரது மனைவி பாக்கியமும் வசித்தார்கள். ராமசாமி தம்பதி யினருக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் கவிசங்கர், ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள முத்தூரில் மோட்டார் விற்பனைக்கடை வைத்து வசித்து வருகிறார். மகள் பானுமதி முத்தூரையடுத்த சக்கரைபாளையம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இருவருமே தங்களது பெற்றோர்களிடம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை செல்போனில் பேசுவது வழக்கம்..

Advertisment

ss

சென்ற 29ஆம் தேதி மதியம் மகள் பானுமதி பெற்றோரிடம் செல்பேசியில் பேசியிர

ரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியின் புறநகர் முழுக்க விவசாயம்தான். அவரவர் தோட்டத் திலேயே வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளைப் பார்ப்பதுதான் அவர்களது முழுநாள் வேலை. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தோட்டத்தில் வீடுகள் இருக்கும். அப்படித்தான் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மேகறையான் என்ற பகுதியில் 75 வயதான விவசாயி ராமசாமியும் அவரது மனைவி பாக்கியமும் வசித்தார்கள். ராமசாமி தம்பதி யினருக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் கவிசங்கர், ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள முத்தூரில் மோட்டார் விற்பனைக்கடை வைத்து வசித்து வருகிறார். மகள் பானுமதி முத்தூரையடுத்த சக்கரைபாளையம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இருவருமே தங்களது பெற்றோர்களிடம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை செல்போனில் பேசுவது வழக்கம்..

Advertisment

ss

சென்ற 29ஆம் தேதி மதியம் மகள் பானுமதி பெற்றோரிடம் செல்பேசியில் பேசியிருக்கிறார். அதன்பிறகு 30ஆம் தேதி, ஒன்றாம் தேதியில் செல்பேசியில் பலமுறை தொடர்புகொண்ட போதும் ரிங் மட்டுமே போயிருக்கிறது, யாரும் எடுக்கவில்லை. எனவே அருகேயுள்ள தோட்டத் தில் வசிக்கும் தங்களது உறவினரைத் தொடர்புகொண்டு, சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார். மே ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு அவர்களின் உறவினர், பானுமதியின் பெற்றோரின் வீட்டருகே செல்லும்போதே துர்நாற்றம் வீசியிருக்கிறது. ஏதோ நடந்திருக் கிறதென்று யூகித்தவர், சிவகிரி காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது, விவசாயி ராமசாமி வீட்டுக்குள்ளும், அவரது மனைவி பாக்கியம் வீட்டு வாசலிலும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்கள். இருவரும் கொல்லப்பட்டு மூன்று நாட்களானதால் அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசியுள்ளது. கொலை செய்யப்பட்ட தகவல், அப்பகுதி முழுக்கக் காட்டுத்தீயாய் பரவியது.

காவல்துறை மேற்கு மண்டல தலைவர் ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் போலீசாரும் குவிந்தனர். இருவரின் உடலையும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.

Advertisment

tw

இரட்டைக் கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள், "ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் செய்த கொலை இது. 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல்தான் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக கொலையாளிகள் வீட்டை நோட்டம் விட்டுள்ளனர். விவசாயி ராமசாமி மனைவி பாக்கியம் அம்மாள், இரவு 7 மணியளவில், வீட்டு வாசலையொட்டிய பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது பெரியவர் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருக்க, பெரியவரை இரும்பு ராடால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு பாக்கியம் அம்மாள் வீட்டுக்குள் நுழையும்போதே அவரையும் தாக்க... அவர் வாசலிலேயே சரிந்துள்ளார். இருவருமே உயிரிழந்த நிலையில், பாக்கியம் அம்மாள் அணிந்துள்ள ஏழு பவுன் தாலிக்கொடி, தோடு, அதேபோல் பெரியவர் ராமசாமி அணிந்திருந்த மோதிரங்களைக் கழற்றியெடுத்தவர்கள், வீட்டில் சல்லடைபோட்டுத் தேடி, கொஞ்சம் நகை மற்றும் ஒரு லட்சம் அளவிலான ரொக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க நகை, பணம் கொள்ளைக்காக நடந்த கொலைதான்'' என்றார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, சீமான் உள்ளிட்டோர் இரட்டைக்கொலையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஏற்கெனவே 2020-ல், அ.தி.மு.க. ஆட்சியில் நகைக்காகக் கொள்ளையடிக்கும் மூன்று சம்பவங்கள் இதேபோல நடந்துள்ளன. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் -குன்னாங்காட்டுவலசு, அரச்சலூர் -லிங்க கவுண்டன்வலசு, காங்கேயம் -மருதுறை பாரதிபுரம், காங்கேயம் லிரங்கம் பாளையம், சென்னிமலை -உப்பிலிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இதேபோல் கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2020 முதல் இப்போதுவரை ஒரே பாணியில் தனியாக தோட்டத்தில் வசித்துவரும் விவசாயிகள் 15 பேர்வரை நகைக்காகக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஓரிரு சம்பவங்களில் மட்டும் கொலையாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

tww

"கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்துவருகிறோம். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்துள்ளோம். அந்தப் பகுதியிலுள்ள 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா புட்டேஜ்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சென்ற ஒரு மாதத்திற்கு முன்பே கொலை செய்யப்பட்ட முதியவர் ராமசாமி வீட்டுக்குச் சென்று சி.சி.டி.வி. கேமரா வைக்கும்படி போலீசார் கூறியிருக்கிறார்கள். கொலை செய்து கொள்ளையடிக்கும் கும்பலின் தொடர் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது. விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவோம்'' என்றார் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. செந்தில்குமார். "கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளோம்'' என்றார் டி.ஜ.ஜி. சசிமோகன்.

"2020-லிருந்தே நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களைப் பட்டியலிட்டு, தனிப்புலனாய்வுக் குழுவை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும்'' என வேதனை யோடு கூறுகிறார்கள் ஈரோடு விவசாயிகள்.

nkn070525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe