டைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் உருவாக்கித் தந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் எதிர்ப்பால், சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பரபரப்பு அ.தி.மு.க.வில் நிலவியது. இதனை எப்படி சமாளிப்பது என பல்வேறு ஆலோசனைகளை நடத்தியபடி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லியை தொடர்புகொள்ளும் முயற்சிகள் ஏகத்துக்கும் நடந்தன.

பொதுக்குழுவின் பெரும்பான்மை எங்களிடமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பிலும் மனு போடப்பட்டது.

tt

Advertisment

இரு தரப்பு மனுக்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், "ஓ.பி.எஸ். தரப்பினரை உள்ளடக்கிய பொதுக் குழு கூட்டப்பட்டு, அதில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு கால அவகாசம் இல்லையெனில் கடிதம் மூலம் தேர்வினை நடத்தலாம். அதன் முடிவுகளை அ.தி.மு.க .அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று இடைக்காலமாக ஒரு தீர்ப்பு வழங்கியது உச்சநீதி மன்றம். இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு சாதகமாகவே இருந்தது. அதனை கொண் டாடி மகிழ்ந்தார்கள். அதேசமயம், தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ்., தனது ஆதரவாள ரான வைத்திலிங்கத்தின் மூலம் ஒரு அறிக்கையை வாசிக்க வைத்தார். குறிப்பாக, "இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவரை நாங்கள் ஆதரிப்போம்' என்று தெரிவித்தார் வைத்திலிங்கம்.

"பொதுவாக, தங்கள் தரப்பு செய்தி எதுவாக இருந்தாலும் அதனை ஓ.பி.எஸ். அறிவிப்பது தான் வழக்கம். இந்தமுறை வைத்திலிங்கத்தின் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததால், தீர்ப்பு கொடுத்த அதிர்ச்சி ஓ.பி.எஸ்.ஸை எந்த அளவுக்கு ஆக்ரமித்திருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்' என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர்.

இந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர் களின் ஆதரவைக் கேட்கும் படிவத்தை தயாரித்து உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தார் தமிழ்மகன் உசேன். ஓ.பி.எஸ். தரப்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. படிவத்தில் இருந்த வாசகங்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது.

Advertisment

உடனே பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து ஆலோசித்தார் ஓ.பி.எஸ். அந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ttஆலோசனை குறித்து நாம் விசாரித்தபோது, "தேர்தலில் வாக்குப் பதிவின்போது தபால் வாக்குகளில் எந்த நடைமுறை பின்பற்றப் படுகிறதோ, அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என்கிற தொனியில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது.

அதாவது, போட்டியிட விரும்புகிற வேட்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதில் எந்த வேட்பாளருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் பொது வேட்பாளர் என்பதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்.

ஆனால், எடப்பாடிக்காக தமிழ்மகன் உசேன் தயாரித்துள்ள படிவத்தில், எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவின் பெயர் மட்டும்தான் இருக்கிறது. அவரை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என டிக் அடிக்கச் சொல்லியும், ஏற்கவில்லையெனில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயரை குறிப்பிடுங்கள் என்றும் படிவத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் செய்துள்ள வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இடம்பெறவில்லை.

அந்த வகையில், "உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள நெறிமுறைகளுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாகவும் படிவத்தை தமிழ்மகன் உசேன் தயாரித்திருப்பதால் இதனை நிராகரிக்க வேண்டும் என்றும், இதை தேர்தல் ஆணையத் திலும் உச்சநீதிமன்றத்திலும் முறையிடலாம்' என்றும் ஆலோசனை வழங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இந்த ஆலோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், எடப்பாடிக்கு செக் வைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருப்ப தாக ஓ.பி.எஸ். உற்சாக மானார். ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட இந்த விசயங்களை அப்படியே தங்களின் அறிக்கையாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு, அதன்படி ஓ.பி.எஸ்.ஸின் அறிக்கை வெளியிடப்பட்டது.

tt

"எடப்பாடியின் தில்லுமுல்லுகளுக்கு கடிவாளம் போட முயற்சிக்கிறோம். எந்தளவுக்கு நீதி பரிபாலனையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அறம் வெல்லும்; அநீதி வீழும்'’என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வாசகங்களைச் சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒப்படைக் கப்பட்ட படிவங்களில் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடியின் வேட்பாளருக்கே இருக்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந் தேதிதான் கடைசிநாள் என்பதால், அதனை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கும் பணிகளை அவசரம் அவசமாக மேற்கொண்டார் தமிழ்மகன் உசேன்.

அதேசமயம், ஓ.பி.எஸ். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டி யிருப்பதால், அவர்கள் தரப்பில் வைக்கப்படும் எதிர்ப்பினை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற கவலை எடப்பாடியிடம் 6-ந் தேதி வரை தொற்றிக் கொண்டி ருந்தது. இதனால் கட்சியின் சீனியர் களிடமும் சட்ட வல்லுநர்களிடமும் விவாதித்தபடி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது சட்ட வல்லுநர்கள் சொன்ன சில விச யங்கள் எடப் பாடிக்கு அதிர்ச்சி யைக் கொடுத்திருக்கிறது.

இதுபற்றி நாம் விசா ரித்தபோது, "பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை கேட்கும் படிவத்தில் ஓ.பி.எஸ். தரப்பின் வேட் பாளர் பெயரையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதில் ஒருவரை பொதுக் குழு தேர்வு செய்வதுதான் சட்டத் தின் பார்வையில் சரியாக இருக்க முடி யும். தேர்தல் ஆணையம் நேர்மையாக இருந்தால், ஓ.பி.எஸ்.ஸின் முறையீட் டிற்கு பலன் கிடைக்கும். உங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களை ஏற்க மறுக்கமுடியும் என சட்ட வல்லுநர்கள் எடுத்துச் சொல்ல, அந்த நொடியில் எடப்பாடி அப்-செட்டானார்.

அப்போது, இந்த வேட்பாளரை ஏற்க மறுத்தால் தாங்கள் விரும்பிய வேட்பாளரை குறிப்பிடலாம் என படிவத்தில் சொல்லியிருக் கிறோமே என எடப்பாடி ஆர்கியூ பண்ணியிருக் கிறார். ஆனால், அதனை மறுத்த வழக்கறிஞர்கள், ஓ.பி.எஸ். தரப்பையும் உள்ளடக்கி பொதுவேட் பாளரைத் தேர்வு செய்யுங்கள் என்றுதான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது.

tt

அதனால், ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாள ரையும் இணைத்து அதனடிப்படையில்தான் பொது வேட்பாளரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு, ஓ.பி.எஸ். தரப்பின் வேட்பாளருக்கு வாய்ப்பே தரப்படவில்லையே! ஓ.பி.எஸ். தரப்பின் வேட்பாளர் பெயர் எங்கே? என்கிற கேள்வியை தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் கேட்டால், நம்மிடம் அழுத்தமான பதில் இருக்காது. அதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்கலாம் அல்லது முடக்கப்படலாம். ஆக, இரட்டை இலை சின்னத்தைப் பெற டெல்லியில் முயற்சியுங்கள் என சட்ட வல்லுநர்கள் ஆலோசனை சொல்ல, எடப்பாடிக்கு திக்...…திக்...கானது''” என்று நம்மிடம் விவரித்தனர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

அதேசமயம், அ.தி.மு.க.வின் சீனியர்களும், "பொதுக்குழுவில் 99 சதவீத மெஜாரிட்டி நம்மிடம்தான் இருக்கிறது. அப்படியிருக்கையில், ஓ.பி.எஸ்.ஸின் வேட்பாளர் பெயரையும் படிவத்தில் நாம் குறிப்பிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் நமது வேட்பாளருக்குத்தான் மெஜாரிட்டி கிடைக்கப்போகிறது. ஓ.பி.எஸ். தரப் பின் வேட்பாளரைத் தவிர்த்தது தவறு. சின்னத்தை கைப்பற்ற நமக்கு நல்லதொரு வாய்ப்பினை உச்சநீதிமன்றமே தந்த நிலையில் அதனை முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டோம்' என்று எடப்பாடியிடம் சங்கடப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னம் முடங்கக் கூடாதென்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகனை வாபஸ் பெறுவதாக ஓ.பி.எஸ். தரப்பு அறிவித்துள்ளது. இது பல சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.