மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாநகர, நகர, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் மக்கள் பணியாற்ற மதிப்பூதியம் வழங்குவதற்கான அரசாணை யை வெளியிட்டுள்ளது தமிழ் நாடு அரசு. இது மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களை அதிருப்தியடையச் செய் துள்ளது.
பொதுவாக, மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை மாதாந்திரக் கூட்டத்துக்கு வந்தால் படி வழங்கப்படும். நகர்ப்புற மக்கள் பிரதிநிதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதுப்போல் தங்களுக் கும் ஊதியம் வழங்கவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்க
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாநகர, நகர, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் மக்கள் பணியாற்ற மதிப்பூதியம் வழங்குவதற்கான அரசாணை யை வெளியிட்டுள்ளது தமிழ் நாடு அரசு. இது மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களை அதிருப்தியடையச் செய் துள்ளது.
பொதுவாக, மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை மாதாந்திரக் கூட்டத்துக்கு வந்தால் படி வழங்கப்படும். நகர்ப்புற மக்கள் பிரதிநிதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதுப்போல் தங்களுக் கும் ஊதியம் வழங்கவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். 2016ஆம் ஆண்டு, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்க, இதில் மாநில அரசுதான் முடிவெடுக்க முடியுமெனக்கூறி வழக்கை முடித்துவைத்தது நீதிமன்றம்.
இந்நிலையில், ஊதியம் வழங்க சட்டத்தில் இடமில்லை என்பதால் மதிப்பூதியம் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. மாதந் தோறும் மேயருக்கு 30 ஆயிரம், துணைமேயருக்கு 15 ஆயிரம், மாநக ரக் கவுன்சிலர்களுக்கு 10 ஆயிரம், நகரமன்றத் தலைவருக்கு 15 ஆயிரம், வைஸ்சேர்மனுக்கு 10 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு 5 ஆயிரம், பேரூராட்சி தலைவருக்கு 10 ஆயிரம், வைஸ்சேர்மனுக்கு 5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு 2500 ரூபாய் என வழங்க உத்தரவிட்டார் முதல்வர். இந்த அறிவிப்பில், மாவட்ட, ஒன்றிய சேர்மன்கள், கவுன்சிலர்களை ஏன் அரசாங்கம் ஒதுக்கியது என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட கவுன்சிலர் ஒருவர் நம்மிடம், "ஒரு மாவட்ட கவுன்சிலருக்கு வார்டில் 70 ஆயிரம் வாக்குகள் உள்ளது. 50 முதல் 60 கிராமங்கள் வரை உள்ளது. பொதுமக்களிடம் குறை கேட்க எங்கள் வாகனத்தில்தான் செல் கிறோம். இதற்கான பெட்ரோல் செலவே மாதம் 10 ஆயிரம் ஆகிறது. அதேபோல், கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் நாங்கள் நன்கொடை தந்தாக வேண்டியுள் ளது. ஆயிரம் வாக்குகள் உள்ள பேரூராட்சி கவுன் சிலருக்கு சம்பளம் வழங்கு கிறார்கள், இதை என்ன வென்று சொல்வது" என்றார்.
வேலூர், திருவண்ணா மலை மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களில் சிலர், "எங்க ளுக்கு மாதம் 400 ரூபாய் மதிப்பூதியம், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் கூட்டத்துக்கு 500 ரூபாய் படி தர்றாங்க. ஒரு ஒன்றிய கவுன்சிலரின் கீழ் 5 கிராம பஞ்சாயத்துகள் வருகின்றன. அம்மக்களைச் சந்திக்க வேண்டும். மாநகர, நகராட்சி கவுன்சிலர்களைப் போல் ஒன்றிய கவுன்சிலர் கள் லஞ்சமெல்லாம் கேட்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கூட ஒன்றிய கவுன்சிலர் களுக்கு கிடையாது. இப்படி அனைத்திலும் எங்களை ஒதுக்கிவைப்பது எப்படி சரி யாகும்?" எனக் கேட்கிறார் கள். இதற்கிடையே வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மதிப் பூதியம் வழங்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முதல்வர்தான் மனது வைக்க வேண்டும்.