உதயநிதியின் திறமையை தொகுதிக்குள் சுருக்கிவிடக்கூடாது! -சுற்றுச்சூழல் அணி கார்த்திகேய சிவசேனாபதி!

uu

தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கான மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி, தமிழக அமைச்சரவையில் உதயநிதியைச் சேர்க்க வேண்டும் என சிறப்புத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நிலையில் கார்த்திகேய சிவசேனாபதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

dd

சுற்றுச்சூழல் அணியின் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதற்கு பிறகு அவர்கள் என்னென்ன பணிகளை முன்னெடுத்திருக்கிறார்கள்? எந்தமாதிரியான பணிகளைச் செய்திருக்கிறார்கள்? இதன் சாதக, பாதகங்கள் என்ன? இனி என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான திட்டங்களை அரசிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்? என்பத

தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கான மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி, தமிழக அமைச்சரவையில் உதயநிதியைச் சேர்க்க வேண்டும் என சிறப்புத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நிலையில் கார்த்திகேய சிவசேனாபதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

dd

சுற்றுச்சூழல் அணியின் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதற்கு பிறகு அவர்கள் என்னென்ன பணிகளை முன்னெடுத்திருக்கிறார்கள்? எந்தமாதிரியான பணிகளைச் செய்திருக்கிறார்கள்? இதன் சாதக, பாதகங்கள் என்ன? இனி என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான திட்டங்களை அரசிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்? என்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யவும் விவாதிக்கவுமான ஆலோசனைக் கூட்டம் இது. இதில் ஆக்கப்பூர்வமான, அவசியமான பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. சுற்றுச்சூழலில் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் (மு.க.ஸ்டாலின்) நோக்கத்தை அடைவதே எங்களின் இலக்கு!

என்ன மாதிரியான திட்டங்களை முன்னெடுக்கப் போகிறீர்கள்?

மாநிலம் முழுவதும் பசுமைச் சூழலை முன்னெடுக்கும் வகையில் தமிழகத்தின் பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டு வரும் பணிகளை மேலும் துரிதப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுகிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களையும் ஈடுபடுத்துதல், பொதுமக்களுக்கு தேவைப்படுகிற மரக்கன்றுகளை அணியின் சார்பில் வழங்குதல், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அரசு நிலங்களை அரசிடமிருந்து பெற்று அதில் மரக்கன்றுகளை நட்டு நிலத்தை வளமாக்குதல், கடலோரங்களில் சேரும் பிளாஸ்டிக், கண்ணாடி குப்பைகளை முழுமையாக அகற்றுதல் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுக்கிறோம். அதேசமயம், சட்டத்திற்கு புறம்பாகவோ, சுற்றுச்சூழல்களுக்கு எதிராகவோ அரசாங்கம் ஏதேனும் திட்டங்கள் கொண்டு வந்தால் அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தடுப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.

ff

சுற்றுச்சூழல் குறித்து வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறுகிறீர்களா?

சுற்றுச்சூழல் அணியின் மாநில பொறுப்புகளிலுள்ள பலர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்தான். குறிப்பாக, கார்த்திக்கேயேன், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களை கற்றுத்தரும் முனைவர். தற்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் வளங்களின் தன்மை, அதனை பாதுகாத்தல் குறித்தெல்லாம் விளக்கினார். அதேபோல அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் குறித்த சட்ட திட்டங்களையும், அதனைப் பயன்படுத்தி காற்று மற்றும் நீர் மாசுபடாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக விளக்கினார். ஆக, வல்லுநர்களின் ஆலோசனை களின்படியே இயங்குகிறோம்.

தமிழக அமைச்சரவையில் உதயநிதியை சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுவது சுற்றுச்சூழல் அணியின் கூட்டத்திற்கு அவசியமானதா?

தி.மு.க.வின் ஒரு அங்கம்தான் சுற்றுச்சூழல் அணி. அதன் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் நிறைவேற்றுவது இயல்பானதுதான். அதனால், இளைஞரணி யின் மாநில செயலாளரான உதயநிதியின் ஆற்றலும் திறமையும் அவரது தொகுதிக்குள் மட்டுமே சுருங்கிவிடக்கூடாது. தமிழக மக்களுக்கும், தி.மு.க. அரசுக்கும் பயன்பட வேண்டும் என்கிற தொலை நோக்குப் பார்வை யில் எங்களின் விருப்பத்தை முதல்வருக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

uu

அமைச்சரவையில் உதயநிதியை சேர்க்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுவது முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாகாதா?

சுற்றுச்சூழல் அணியின் வேண்டு கோளாகத்தான் பார்க்கப்படுமே தவிர, நிர்ப்பந்த மாகவோ, நெருக்கடியாகவோ பார்க்கப்படாது. எங்களின் மன ஓட்டங்களையும் எண்ணங்களையும் ஒரு தீர்மானத்தின் வடிவத்தில் வெளிப்படுத்தி யிருக்கிறோம்.

உங்களின் எண்ணங்களை கட்சியின் பொதுக்குழுவிலோ அல்லது முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தோ தெரியப்படுத்த வேண்டியதை சுற்றுச்சூழல் தொடர்பான கூட்டத்தில் தீர்மானமாகச் சொல்வது முரண்பாடாக இல்லையா?

எங்கள் கழகத்தின் தலைவரும் ஆட்சியின் தலைவரும் முதல்வர்தான். அதேபோல கழகத்தின் இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி. அந்த வகையில் கழகத்தின் அங்கமான ஒவ்வொரு அணிகளின் கூட்டங்களிலும் கழகம் சார்ந்த அரசியல் விருப்பங்களை தீர்மானங்களாக வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதுதான். கழகத்தையும் அதன் அணிகளையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், எங்கள் சுற்றுச்சூழல் அணியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினோர் இளைஞர்கள்தான். அதனால் உதயநிதிக்காக தீர்மானம் நிறைவேற்றுவது முரண்பாடு கிடையாது.

nkn190122
இதையும் படியுங்கள்
Subscribe