விசாரணை என்ற பேரில் மிரட்டாதே!'' -காவல் துறைக்கு எதிராகத் திரண்ட பத்திரிகையாளர்கள்!

ss

சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஒன்றாகத் திரண்டு ஒருமித்த குரலில் காவல்துறைக்கு எதிராக ஒரு கண்டன போராட்டத்தை இதுவரை நடத்தியதில்லை.

அண்ணா பல்கலைக்கழகத் தில் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்நிகழ்வு குறித்த புகார் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீடியாக்கள் உட்பட அனைத்து இணைய வெளிகளிலும் வெளிப்பட்டது. அந்த பாலியல் விவகாரத்தை எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராம் அடங்கிய நீதிபதிகள் குழு சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதில் அவர்கள், ‘இந்த வழக்கில் ஞானசேகரன் என்கிற ஒரு நபர் மட்டும் குற்றவாளி’ என காவல்துறை அறிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் அந்தக் ‘குற்றம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி’ எனக் கேள்வி எழுப்பினார்கள்.

pressclub

ஐ.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகள் தொடர்பான கு

சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஒன்றாகத் திரண்டு ஒருமித்த குரலில் காவல்துறைக்கு எதிராக ஒரு கண்டன போராட்டத்தை இதுவரை நடத்தியதில்லை.

அண்ணா பல்கலைக்கழகத் தில் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்நிகழ்வு குறித்த புகார் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீடியாக்கள் உட்பட அனைத்து இணைய வெளிகளிலும் வெளிப்பட்டது. அந்த பாலியல் விவகாரத்தை எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராம் அடங்கிய நீதிபதிகள் குழு சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதில் அவர்கள், ‘இந்த வழக்கில் ஞானசேகரன் என்கிற ஒரு நபர் மட்டும் குற்றவாளி’ என காவல்துறை அறிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் அந்தக் ‘குற்றம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி’ எனக் கேள்வி எழுப்பினார்கள்.

pressclub

ஐ.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவானால் அதன் முதல் தகவல் அறிக்கையை இணைய தளங்களில் உடனடியாக வெளியிடுவதற்கு தடை ஒன்றை அமல் படுத்தியிருந்தார்கள். ஆனால், புதிய சட்டப் பிரிவான BNS-படி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும்போது அந்தத் தடையை தொழில்நுட்ப ரீதியாக கடைப்பிடிக்க முடிய வில்லை என தேசிய தகவல் அமைப்பு தெரிவித் திருந்தது. அதனால் அந்த முதல் தகவல் அறிக்கை இணைய தளங்களில் வெளியான சில நிமிடங்களில் பதினாலு பேர் பார்த்திருக்கிறார்கள். அதில் ஏழு பேர் பத்திரிகையாளர்கள். இவர்களைப் பற்றி விசாரித்த உயர் நீதிமன்றம், அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் கடந்து சென்றிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோதும் முதல் தகவல் அறிக்கை வெளிவந்ததைப் பற்றி கவலை தெரிவித்தார்களே தவிர, அதைப் பார்த்தவர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை.

உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் மேற்பார்வையில் பாக்யஸ்ரீ ஸ்நேகப்ரியா, அய்மன் ஜமால், எஸ்.பிருந்தா அடங்கிய அந்த சிறப்பு புலனாய்வுக் குழு, அந்த முதல் தகவல் அறிக்கை எப்படி ஊடகங்களுக்கு சென்றது என விசாரித்தது. அதற்காக அந்த அறிக்கையைப் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களின் செல்லுக்கு ‘வாட்ஸ் ஆப்பில் சம்மன் அனுப்பிய புலனாய்வுக் குழு, முதல் தகவல் அறிக்கை வெளியிட்டதன் மூலம் பத்திரிகையாளர்கள் ஆதாயம் அடைந் தார்களா? என்கிற கோணத்தில் விசாரித்தது. "உங்களது பேங்க் பேலன்ஸ் என்ன, உங்கள் மனைவியின் பேங்க் பேலன்ஸ் என்ன, நீங்கள் FIR-ஐ மற்றவர்களுக்கு விற்றீர்களா?'’என கேள்வி எழுப்பியது. அத்துடன் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறித்து வைத்துக்கொண்டது. செல்போன்களை தர மறுத்தவர்களிடம் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தது.

பத்திரிகையாளர்களுக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சந்தித்தது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களது உயர் அதிகாரியான தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலை சந்தித்து பத்திரிகையாளர்கள் முறையிட்டார்கள். சங்கர்ஜிவால் ‘"என்னால் எதுவும் செய்யமுடியாது'’என கைவிரித்து விட்டார். வெகுண்டெழுந்த பத்திரிகை யாளர்கள், பிப்ரவரி 1ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அத்துமீறிய நட வடிக்கைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சுரேஷ் வேதநாயகம் தலைமையில் பொதுச்செயலாளர் ஆசிப் முன்னிலையில் நடைபெற்ற அனல்பறந்த அந்த ஆர்ப்பாட்டத்தில்...

"விசாரணை என்ற பேரில் மிரட்டாதே!'

"சட்டத்திற்குப் புறம்பாக பத்திரிகையாளர்களை ஒடுக்காதே!'

"வாட்ஸ் ஆப்பில் சம்மன் அனுப்பாதே!'

"பத்திரிகை சுதந்திரத்தை நசுக்காதே!'”

-என ஆசிப் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சுரேஷ், “"பொதுவாக சாட்சியங்களை வைத்துதான் விசாரணை நடத்துவார்கள். எந்த சாட்சியமும் இல்லாமல் விசாரணைக்கு கூப்பிட்டு பத்திரிகை யாளர்களிடம் அவர்களுக்கு எதிரான சாட்சி யங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு ஆதாரம் திரட்டுகிறது. பொதுவெளியில் இருக்கும் ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்ட விரோதமான செயல் அல்ல. சம்பவம் நடந்த உடனே பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் இதுபற்றி ‘ட்வீட்’ போடுகிறார். அதுபற்றி தனக்குத் தெரியும் என்கிற வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டி ருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விசாரிக்காதது ஏன்?''’என கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆசிப், "பத்திரிகையாளர்களின் குடும்பத்தின் சொத்து விவரங்கள் பற்றி சிறப்புப் புலனாய்வுக்குழு கேள்வி எழுப்புவதற்கான உள்நோக்கம் சந்தேகத்துக்குரியது. பா.ஜ.க. மாநிலத் தலைவர், இந்த விவகாரம் குறித்து முதலில் சமூக வலைத்தளங்களில் எழுதினார். தொடரந்து குற்றவாளி ஞானசேகரனின் தொலைபேசித் தொடர்பு பற்றி தனக்குத் தெரியும் என்கிறார். அவரை அழைத்து விசாரிக்கும் தைரியமும் வீரமும் புலனாய்வுக் குழுவிற்கு இருக்கிறதா''’என்று கேள்வி எழுப்பினார்.

உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த விசாரணை சட்ட விரோதமானது என பத்திரிகையாளர்கள் பலரும் விளக்கினார்கள். மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும் என்கிற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது.

nkn050225
இதையும் படியுங்கள்
Subscribe