Advertisment

மூட நம்பிக்கைகளைப் பரப்பக்கூடாது! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

ss

ல்கலைக்கழகங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக்கல்லூரி கள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 3ஆம் தேதி, நேரு உள்விளையாட்டரங்கில் "மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisment

aa

முதல்வர் ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு, செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சுயநிதி

ல்கலைக்கழகங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக்கல்லூரி கள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 3ஆம் தேதி, நேரு உள்விளையாட்டரங்கில் "மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisment

aa

முதல்வர் ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு, செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சுயநிதி பொறி யியல் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவரும், ஆர்.எம்.கே. கல்விக் குழும நிறுவனத் தலைவரு மான ஆர்.எஸ்.முனிரத்தினம் வரவேற்புரையாற்றி னார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விழாவுக்கு தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசியபோது, "பொதுவாக பாராட்டு விழாவுக்கு நான் ஒப்புக்கொள்வது இல்லை. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்பதால் ஒப்புக்கொண்டேன். இங்கு நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். நாளைய தலைவர் கள் நீங்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள்... சி.எம். ஆகி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினால், ஆப்டரால் ஒன்றிய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப் பட்ட தற்காலிகமாக இங்கே தங்கியிருக் கின்ற ஒரு கவர்னர் அதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமென்றால் மக்கள் போடுகின்ற ஓட்டுக்கு என்ன மரியாதை?

பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள இடம் மாநில அரசுக்கு உரியது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, மாணவர் களுக்கு தேவையான வசதிகளை செய்வது மாநில அரசு. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கும் துணைவேந்தரை ஆளுநர் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் நீதிமன்றம் சென்றோம். பல ஆண்டு காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்டப்பட்டுள்ளது.

Advertisment

நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகம் உள் ளது. உலகத்துடன் போட்டிபோட நம் இளைஞர் கள் இன்னும் வளர்ந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான, முட்டாள்தனமான கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளைப் பரப்பும் இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அறிவியல்பூர்வமான பார்வை, சமூக நீதி ஆகிய இரண்டே அஜெண்டாதான் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சி நடத்துவதோ, இதற்கு எதிராகப் பேசுபவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால் இந்த அரசின் எதிர்வினை கடுமையாக இருக்கும்'' என்று கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார் முதல்வர்.

அவ்விழாவில் முதல்வர் கூறிய அறிவுரை கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களை சென்றடைய வேண்டுமென் பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், முதல்வரின் பேச்சு முழுவதையும் நூலாகப் பதிப்பித்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்துள்ளார்.

nkn100525
இதையும் படியுங்கள்
Subscribe