திருப்பரங்குன்றத்தில், இரண்டாவது தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவ காரம், நீதிமன்ற விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்து அமைப்பினர் திருப் பரங்குன்றத்தை முற்றுகையிட்டு பிரச்சனை செய்தபோது எழுந்த பதட்ட சூழல், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக தணிந்துவரும் நிலை யில், ஓர் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்ப வம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Advertisment

திருப்பரங்குன்றம் தர்கா தூணில் தீபம் ஏற்றப்படாத காரணத்தினால் மனமுடைந்து, கடந்த 18ஆம் தேதி, மதுரை  அவுட்போஸ்ட் போலீஸ் பூத்திற்குள் சென்று பூர்ணசந்திரன் என்ற இளைஞர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த இளைஞர் தன் நண்பருக்கு பேசியதாக வெளி வந்த ஆடியோ வைரலாக, பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நகரெங்கும் கண்டன போஸ்டர்களை ஒட்டி போராட்டத்தில் இறங்கினர். பூர்ணசந்திரன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisment

மறுநாள் டிசம்பர் 19ஆம் தேதி, மருத் துவமனை மார்ச்சுவரி முன் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி விட்டு, 10 லட்சத்திற்கான காசோலையை பூர்ண சந்திரனின் மனைவி காந்திமதியிடம் வழங்கி னார். அதனைத் தொடர்ந்து, அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியம், பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் போன் றோர், மீண்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும்வரை உடலை வாங்க மாட்டோமென்று கோஷமெழுப்பினர். பதட்டம் அதிகரிக்க... சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. அரவிந்தன், துணை கமிஷனர் அனிதா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட னர். உடற்கூராய்வுக்குப் பின் பூர்ணசந்திரன் உடலை வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது அர்ஜுன் சம்பத், திருமாறன் மற்றும் இந்து அமைப்பினர், தரையிலமர்ந்து மறியல் செய்தனர்.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் களைப் பார்த்து அர்ஜுன் சம்பத், "திருப்பரங் குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம். அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்கவேண்டும். அடுத்து, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்'' என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

Advertisment

மற்றொரு பக் கம், தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரன் குடும்பத்தினர் அங்கே குவியத் தொடங்கினர். பூர்ணசந்திரனின் தாயார் காளீஸ்வரி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளிடம், "என் பையனின் சாவை வச்சு அரசியல் செய்யாதீங்க. என் மகனின் உடலை வாங்க விடுங்க. வழிய மறிச்சு உட்காராதீங்க தம்பி. உயிரை இழந்து நிற்கிறோம். உங்க அரசியலெல்லாம் இங்க வேணாம் தம்பி'' எனக்கூறி தரையில் விழுந்து கெஞ்சி, "என் மகன் உடல் வேண்டும்'' என கண்ணீர்விட்டுக் கதறினார். 

அதையும் மறுத்த அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினர், "பிணத்தை எடுக்க விடமாட்டோம். இது கோடான கோடி இந்து பக்தர்களின் வேண்டுகோள்'' என்று சொல்ல, அருகிலிருந்த இறந்தவரின் மாமா கோபமாகி, "அத்தை, ஏன் இவர்களி டம் கெஞ்சுகிறீர்கள்? இழப்பு நமக்கு. இவர் கள் யார்? நம் வீட்டு இழவில் அரசியல் செய்ய இவர்கள் யார்?" என்றபடி, "எல் லோரும் எந்திரிச்சி வெளியேறுகிறீர்களா, இல்லையா? நாங்களே ஒரு உயிரை இழந்து இருக்கிறோம். நீங்க யாரு? மரியாதையா போயிருங்க, அப்பறம் வேற மாதிரி ஆகிரும்'' என்று கோபப்பட... 

திருமாறன், அர்ஜுன் சம்பத் உள்ளிட் டோர் அவரை சமாதானம் செய்ய முற்பட... கூடியிருந்த உறவினர்கள் மேலும் கோப மாகி, "முதலில் எல்லோரும் வெளிய போங்க, இல்லையென்றால் விரட்ட வேண்டியிருக்கும்'' என்று ஆவேசமாக, அந்த இடம் கொஞ்சம் களேபரமாகி தள்ளுமுள்ளாகியது. வேறு வழியின்றி அர்ஜுன் சம்பத், திருமாறன் உள்ளிட்ட இந்து அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் அங்கே அரசியல் செய்ய முடியாத விரக்தியோடு வெளியேறினார்கள். 

விவகாரமாக்க வந்தவர்கள் சென்ற பின்னர், பூர்ணசந்திரன் உடல் உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சடங்குகள் செய்யப்பட்டு, பூணசந்திரனின் உடல் தகனம் நடைபெற்றது.