Advertisment

பெல்டால அடிக்காதிங்க அண்ணா...' சிரித்துக்கொண்டே ஆஜரான பொள்ளாச்சி கொடூரன்கள்!

ss

ன்னும் சில தினங்களில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பினை இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள். வீடியோ கான்பிரன்ஸிங்கில் மட்டும் ஆஜராகி வந்தவர்கள், சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமையன்று நேரடியாக நீதிமன்றத்தில் சிரித்தபடி ஆஜராகியது வழக்கினை கேலிப் பொருளாக்கியுள்ளது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

Advertisment

dd

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று பெண் ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மிரட்டி வருவதாக பொள்ளாச்சி காவல் நிலையத் தில் புகாரளிக்க, "பெல்ட்டால அடிக்காதீங்க அண்ணா..' என்ற குரல் தமிழகத்தையே அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்க, புகார்தாரரை தவிர்த்து மேலும் பல இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது... தமிழ்நாட்டையே உலுக்கியது.

தொடர்ச்சியாக வ

தொடர்ச்சியாக வழக்கின் விசாரணையை முதலில் சி.பி.சி.ஐ.டி. கையிலெடுத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வழக்கு சி.பி.ஐ. வசமானது. இதில் குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரென்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண் குமார் ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்க... வழக்கு "பொள்ளாச்சி பாலியல் வழக்காக' மாறி, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதுவரை வழக்கின்போது குற்றவாளி களாக கருதப்படுபவர்கள் வீடியோ கான்பிரன் ஸிங்கில் மட்டும் ஆஜராகி பதிலளித்து வந்த நிலையில், மாறாக வெள்ளிக்கிழமையன்று நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களை சுமந்து வந்த வாகனம் ஒன்று வெள்ளிக்கிழமை சரியாக காலை 11:57 மணிக்கு கோவை நீதிமன்றத்தை வந்தடைந்தது. நேர்முகத் தேர்விற்கு, பெண் பார்க்கும் படலத்திற்கு செல்வதை போல் க்ளீன் சேவ், வாரிய தலை என முழு ஒப்பனையுடன் சில்க் மற்றும் லினன் ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்தனர் அந்த வாகனத்தில் வழக்கிற்காக வந்தவர்கள். "என்ன செய்யப் போகிறீர் கள்?' என்பதுபோல் பலர் எந்தவொரு முகமாற்றம் செய்யாமல் நேரடியாக புகைப்படத்திற்கு "போஸ்' கொடுத்தனர். எப்படியும் நாம் தப்பித்து விடுவோம் என்பதுபோலவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிரித்துப் பேசி அளவளாவினர். சரியாக 11:28 மணிக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 9 நபர்களும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் சந்திரமோகன் ஆஜராக குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களைத் தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

dd

Advertisment

"கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப் பட்ட சோதனையின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் ஏராளமான வீடி யோக்களைக் கைப்பற்றினர். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், வரிசையாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காண்பித்து உறுதிசெய்த நீதிமன்றம், சி.பி.ஐ. கைப்பற்றிய சில்வர் கலர் ஹூண்டாய் வெர்னா, க்ரே கலர் போர்டு, ஸ்க்யூஸ் கலர் போர்டு, வெள்ளை கலர் மாருதி 800, கறுப்புநிற போர்டு மற்றும் சில்வர் கலர் வோல்ஸ்வேகன் ஆகிய வாகனங்களை யாருடையது என்பதை உறுதி செய்தது. அதுபோல் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சமர்ப்பித்ததும் நிச்சயம் பிரளயத்தை உருவாக்கும்'' என்றார் நீதிமன்ற ஊழியர் ஒருவர்.

இதேவேளையில், சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களைக் கேட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 9 நபர்களும் மனுத்தாக்கல் செய்தனர். முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்து நக்கீரன் ஊடகம் பல்வேறு செய்திகளையும் அரசியல் பின்புலங்களையும் அம்பலப்படுத்தியது. நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய் தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டவுடன், நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பி, 2019 மேலி21 அன்று அவரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

உளவு அதிகாரி ஒருவரோ, "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் .61 சாட்சியங்கள், 69 சான்றாவணங்கள் இன்னார்தான் குற்றவாளிகள் என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. தரப்பால் முன் வைக்கப்பட்டன. அதுபோக கல்லூரி மாணவிகள் 4 பேர், வேலை தேடிய பெண், நகைக்கடையில், பியூட்டி பார்லரில் பணியாற்றிய பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலங் களும் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் தப்பிக்க முடியாது. வரும் ஏப்ரல் மாதத்தில் இது குறித்தான தீர்ப்பு வரவுள்ள நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கேட்டுள்ளனர். இது வழக்கினை இழுத்தடிக்கும் முயற்சிகளுள் ஒன்றாகும். இதேவேளையில் சி.பி.ஐ.யின் கூடுதல் ஆவணத்தின்படி பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்தானா..? அல்லது இன்னும் சிலர் உள்ளனரா..? பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளும் சேர்க்கப்பட்டுள்ளனரா.? என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது'' என்றார் அவர்.

வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்ட நிலையில்... பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் விருப்பம். என்ன செய்ய போகின்றது நீதித்துறை..?

nkn280224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe