Advertisment

விருப்ப மனு போடாதே... எதிர்க்கும் எம்.எல்.ஏ.க்கள்!  -குமுறலில் தி.மு.க. நிர்வாகிகள்!

dmk


ளும்கட்சி யான எங்களுக்கு பல தொகுதிகள் நல்லா தான் இருக்கு, தி.மு.க. வுக்கு மக்கள் வாக்களிக்க விருப்பமாதான் இருக்காங்க. ஆனால் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், கட்சிக்காக வேலைசெய்யத் தயாராயிருக்காங்க. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் சிலருக்கு வேலைசெய்யத் தயாராக இல்லை. ஒருத்தர், இருவர் என்றால் சரிசெய்துவிடலாம், ஒவ்வொரு தொகுதியிலும் 3 கோஷ்டிகளாவது எதிர்க்கிறது. 

Advertisment


வேலூர் மாநகரச் செயலாளராகவும், வேலூர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள கார்த்தி மீது துணைமேயர், மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், மாநகர கவுன்சிலர்கள் என அனைவருமே அதிருப்தியில் உள்ளனர். மாநகர மேயராக சுஜாதா இருந்தாலும் அவரை டம்மியாக்கி முழுவதும் செயல்படுவது எம்.எல்.ஏ.தான். மாநகரப் பணிகளுக்கான கமிஷனைக்கூட கவுன்சிலர்களுக்குத் தருவதில்லை. இதுகுறித்து 4 முறை பஞ்சாயத்து அறிவாலயம் வரை நடந்துள்ளது. அதில் பெரியளவில் மாற்றமில்லை. அவர் மண்டலச் செயலாளர். அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளராக இருப்பதால் தனக்கு எப்படியும் சீட் வாங்கித் தந்துவிடுவார் என நம்பிக் கையாக உள்ளார். அவரை தோற்கடிக்கணும்னே மாநகர கவுன்சிலர்கள் நினைக்கறாங்க. 

Advertisment

அணைக்கட்டு தொகுதியின் எம்.எல். ஏ.வாக இருப்பவர் வேலூர் தெற்கு மாவட்டச்செயலாளர் நந்தகுமார். கே.வி.குப்பம் தொகுதியைச் சேர்ந்த இவருக்கு 2016-ல் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு தந்தபோது, அணைக்கட்டு தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்த அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்மீது தாக்குதல் நடத்தினர். 2021 தேர்தலில் பாபுவுக்கு சீட் வழங்கப்படும் என வாக்குறுதி தந்து சமாதானம் செய்யப்பட்டார். 2021-ல் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் என தலை


ளும்கட்சி யான எங்களுக்கு பல தொகுதிகள் நல்லா தான் இருக்கு, தி.மு.க. வுக்கு மக்கள் வாக்களிக்க விருப்பமாதான் இருக்காங்க. ஆனால் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், கட்சிக்காக வேலைசெய்யத் தயாராயிருக்காங்க. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் சிலருக்கு வேலைசெய்யத் தயாராக இல்லை. ஒருத்தர், இருவர் என்றால் சரிசெய்துவிடலாம், ஒவ்வொரு தொகுதியிலும் 3 கோஷ்டிகளாவது எதிர்க்கிறது. 

Advertisment


வேலூர் மாநகரச் செயலாளராகவும், வேலூர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள கார்த்தி மீது துணைமேயர், மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், மாநகர கவுன்சிலர்கள் என அனைவருமே அதிருப்தியில் உள்ளனர். மாநகர மேயராக சுஜாதா இருந்தாலும் அவரை டம்மியாக்கி முழுவதும் செயல்படுவது எம்.எல்.ஏ.தான். மாநகரப் பணிகளுக்கான கமிஷனைக்கூட கவுன்சிலர்களுக்குத் தருவதில்லை. இதுகுறித்து 4 முறை பஞ்சாயத்து அறிவாலயம் வரை நடந்துள்ளது. அதில் பெரியளவில் மாற்றமில்லை. அவர் மண்டலச் செயலாளர். அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளராக இருப்பதால் தனக்கு எப்படியும் சீட் வாங்கித் தந்துவிடுவார் என நம்பிக் கையாக உள்ளார். அவரை தோற்கடிக்கணும்னே மாநகர கவுன்சிலர்கள் நினைக்கறாங்க. 

Advertisment

அணைக்கட்டு தொகுதியின் எம்.எல். ஏ.வாக இருப்பவர் வேலூர் தெற்கு மாவட்டச்செயலாளர் நந்தகுமார். கே.வி.குப்பம் தொகுதியைச் சேர்ந்த இவருக்கு 2016-ல் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு தந்தபோது, அணைக்கட்டு தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்த அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்மீது தாக்குதல் நடத்தினர். 2021 தேர்தலில் பாபுவுக்கு சீட் வழங்கப்படும் என வாக்குறுதி தந்து சமாதானம் செய்யப்பட்டார். 2021-ல் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் என தலைமை முடிவெடுத்ததால் மீண்டும் அணைக்கட்டு தொகுதியில் நந்தகுமாரே நின்று வெற்றிபெற்றார். மூன்றாவது முறையாக அணைக் கட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் நந்தகுமார். ‘"நான் காத்துக்கிட்டே இருக்கணுமா, எனக்கு வாய்ப்பில்லை'’ என மாவட்ட ஊராட்சி சேர்மனாக உள்ள ஒ.செ. பாபு கேள்வியெழுப்புகிறார். அவர் தனக்குத் தெரிந்த வழியில் சீட் வாங்க முயற்சித்துவருகிறார். பாபுவின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. மீது அதிருப்தியில் உள்ளனர்.  

dmk1

குடியாத்தம் சட்டமன்ற தனித் தொகுதியின் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன். இவர் குடியாத்தம் ஒ.செ. கல்லூர் ரவியின் தம்பி மனைவி. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆதரவாளர் என்பதால் அவருக்கு மீண்டும் சீட் வழங்கக்கூடாது என தெற்கு மாவட்டச்செயலாளர் நந்தகுமார் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி நிறுவன தலைவரான ஜார்ஜ், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை சந்தித்து தனித்தொகுதியில் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களை நிறுத்தக் கூடாது என கோரிக்கை மனு தந்துள்ளார். இதன் பின்னணியில் நந்தகுமார் தரப்பு உள்ளது. மீறி அவருக்கே சீட் தந்தால் துரைமுருகன் ஆதரவாளர் என்பதாலே தோற்கடிக்க முயற்சிசெய்வார்கள் என்கிறார்கள்.  

ஆம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான வில்வநாதனுக்கு எதிராக முன்னாள் மா.செ.வின் மகனும் மாதனூர் ஒன்றியக்குழு தலைவரும், ஒ.செ.வுமான சுரேஷ்குமார் வெளிப்படையாகவே எதிர்கோஷ்டியாக செயல்பட்டுவருகிறார். தன்னைச் செயல்படவிடவில்லை, சில கவுன்சிலர்களை வைத்து நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுத்துகிறார் என குற்றம்சாட்டினார், அறிவாலயம்வரை பஞ்சாயத்து சென்றும் முடியாமலே உள்ளது. 

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் தேவராஜுக்கு எதிராக அங்குள்ள ஒன்றியச்செயலாளர்கள் கவிதா தண்டபாணி, சதீஷ்குமார் போன்றவர்கள் முரண்பட்டுள்ளனர். அ.தி.மு.க. மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான வீரமணிக்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே நேரேட்டிவ் செட் செய்துவருகின்றனர். 

திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான நல்லதம்பிக்கு இரண்டாவது முறையாக சீட் தந்தபோது திருப்பத்தூர் நகரச்செயலாளர் ராஜேந்திரனும், அவரது ஆதரவாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இளைஞரணிச் செயலாளராக இருந்த உதயநிதி, அடுத்தமுறை வாய்ப்பு தரப்படும் என வாக்குறுதி தந்திருந்தார். அதனால் இந்த முறை எனக்கு சீட்டு வேண்டும் என முயற்சித்து வருகிறார் ராஜேந்திரன். இம்முறை அண்ணனுக்கு சீட் இல்லன்னா நாங்க யாரும் வேலை செய்யமாட் டோம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேபோல் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் அருணகிரி, "நான் சீட் கேட்டேன், எனக்கு தரல... என் தம்பிக்கு சீட் தர்றீங்க, என்னை கட்சியில இருந்து ஒதுக்கீட்டிங்க. இதுக்கெல் லாம் துரைமுருகனும், வேலுவும்தான் காரணம்' எனச்சொல்லி, "அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்கிற சாதிக்கட்சியைத் தொடங்கி தனித்து களம் காண்பேன், தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடிப்பேன் என வேலை செய்துவருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இரண்டாவது முறையாக உள்ள மு.பெ.கிரிக்கு எதி ராக தண்டராம்பட்டு செங்கம் தொகுதியிலுள்ள ஒன்றியச்செயலாளர்கள், நிர்வாகிகள் சிலர் நேரடி யாக தலைமைக்கே சில புகார்களை அனுப்பிவைத் துள்ளனர். மா.செ.வும், அமைச்சருமான எ.வ.வேலு விடம் நேரடியாகவும் புகார் தெரிவித்துள்ளனர். "எங்க ளை மதிப்பதில்லை, சாதி அரசியல் செய்கிறார், கட்சி நிர்வாகிகளை அவமானப் படுத்தி பேசுகிறார்' என அவருக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என பெரிய லாபியே நடந்துவருகிறது. 

கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனுக்கு எதிராக புதுப்பாளையம் ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சேர்மனுமான சுந்தரபாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புதுப்பாளையம் பேரூர் செயலாளர் மனோகரன் நேரடியாகவே முதலமைச்ச ரிடம் எம்.எல்.ஏ. குறித்து புகார் சொல்லியுள்ளார். அதேபோல் ஜவ்வாதுமலை ஒ.செ, கலசப் பாக்கம் ஒ.செ.க்களும் கடும் எதிர்ப்பு அதிருப்தியில் உள்ள னர். புகார்சொல்லியும் அது தீர்க்கப்படாமல் இருப்பதால், இவரே மீண்டும் எம்.எல். ஏ.வானால் தங்கள் அரசியல் வாழ்வை அழித்துவிடுவார் என அச்சத்தில் உள்ளனர். 

செய்யார் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜோதிக்கு எதிராக செய்யார் நகர மன்ற தலைவர் மோகனவேல் எதிர்ப் புக் காட்டிவருகிறார். வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தரணிவேந்தன் ஆதரவில் அயலக அணியின் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திகேயன் தீவிரமாக எதிர்ப்புக் காட்டிவருகின்றனர். 

இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரப்ப னுக்கு எதிராக மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ந.செ. ஏ.வி.சரவணன் எதிர்ப்பு தெரிவிக்க, திமிறி மேற்கு ஒ.செ.வும் சேர்மனுமான அசோக் தீவிரமாக எதிர்ப்பு காட்டிவருகின்றார். அதற்கு காரணம், அங்கன்வாடி, ரேஷன்கடை, பேருந்து ஓட்டுநர் வேலைகள் எதையும் கட்சிக்காரன் குடும்பத்துக்கோ, வாரிசுக்கோ தரவில்லை, ஒப்பந்தங்கள் எல்லாம் பினாமி பெயரில் எடுத்து சம்பாதித்து அந்த பணத்தை கொண்டுபோய் அடமானத்திலிருந்த தனது மாமனாரின் சொத்தை வாங்கிவிட்டார். அங்கங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டார். இப்படி சம்பாதித்தவர் கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்யவில்லை, இவரால் கட்சியினருக்கு என்ன லாபம்? 

இப்படித்தான் பல தொகுதிகளிலும் கோஷ்டிப் பிரச்சனைகள் உள்ளன. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவுள்ள இந்த கோஷ்டிகள் தீவிரமாக இருக்கக் காரணம், கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரம் கையிலிருப்பதால் கட்சி நிர்வாகிகளை அவ்வளவு அவமானப்படுத்தி னார்கள், இதுபற்றி மா.செ.க்களிடம் புலம்பியும், புகார்சொல்லியும் எம்.எல்.ஏ.க்களே முக்கியம் என கண்டுகொள்ளவில்லை. இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் தைரியம் வந்து நிர்வாகிகளை மிரட்டி, பொருளாதாரரீதியாக காலிசெய்தனர். தலைமையை எங்களால் நெருங்கமுடியாததால் அவர்கள் இப்போதும் அந்த அதிகார மமதையிலிருந்து கீழே இறங்கிவரவில்லை. கட்சியில் தற்போது விருப்ப மனு வாங்கப்படுகிறது. தகுதியாக உள்ள நிர்வாகிகள் தாங்களும் சீட் கேட்க விரும்புகின்றனர். அவர்களை தங்கள் அடிப் பொடிவழியாக மறைமுகமாக மிரட்டுகிறார்கள். "என் பேர்ல மனு போடு, அதுக்குப் பிறகு உன் பேர்ல போட்டுக்க' எனச் சலுகைதந்து மனு போடச்சொல்கிறார்கள். அப்படி செய்யலன்னா வெற்றிபெற்று வந்தபிறகு கட்சியிலிருந்து காலி செய்துடுவோம் என மிரட்டுகிறார்கள். 

2021-ல் விருப்பமனு செய்தவர்களை வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்ததும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், அமைச்சர்கள் மூலமாக கட்சியில் அவமானப்படுத்தி ஓரம்கட்டியும், ஒதுக்கவும் செய்துள்ளார்கள். இதனால் அவர்கள் மனதளவில் வெறுப்பாகி விட்டார்கள். இதெல்லாம் தலைமைக்கு தெரியுமோ தெரியாதோ? மா.செ.க்களுக்கு, அமைச்சர்களுக்கு, மண்டலப் பொறுப்பாளர்களுக்கு தெரியும். அதனையெல்லாம் கொஞ்சங்கூட சரிசெய்யவில்லை. தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளுக்கு லம்ப்பாக பணம் தந்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமென நினைக்கிறார்கள். வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துவந்து வாக்களிக்கவைப்பது கி.செ, வார்டு செயலாளர், வட்டச் செயலாளர், வாக்குச்சாவடி ஒருங் கிணைப்பாளர்கள்தான். அவர்களை வேலை வாங்குவது மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள்தான். அவர்களே அதிருப்தியில் இருந்தால் தேர்தல் வேலை எப்படி நடக்கும் என கேள்வி எழுப்புகின்றனர். 

nkn250226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe