சுதந்திரம் வேண்டி புரட்சி நடந்த வேலூர் கோட்டையில் கலாச்சார காவலர்கள், காதலர்களுக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பாகி யுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vellore_35.jpg)
வேலூர் கோட்டைக்குள் அரசு அலுவலகங்கள், காவலர் பயிற்சிப் பள்ளி, கோவில், சர்ச், மசூதி என உள்ளன. தினமும் ஆயிரக்கணக் கான மக்கள் வருகிறார்கள். கோட்டையின் மதில் சுவர்கள் காதலர்கள் பொழுதுபோக்குவதற் கான இடமாக உள் ளது. கடந்த வாரம் தனது காதலனோடு வருகை தந்த இஸ் லாமிய இளம் பெண்களைக் குறிவைத்து களமிறங்கிய இளைஞர்கள் சிலர், அவர்களை வீடியோ எடுத்தபடி "நீ எப்படி காதலிக்க லாம், நீங்க என்ன ஊர்?, எந்த மசூதிக்குள்ள வர்றீங்க?'' என கேள்வியெழுப்பினர். வேலூர் பாகாயம், பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகளிலிருந்து கோட்டைக்கு காதல் செய்யவந்த ஜோடிகளை மடக்கி வீடியோ எடுத்துள்ளனர். அவர்கள் வேண்டாம், வேண்டாம் எனச்சொல்லியும் அதனைப் பொருட்படுத்தாமல் படமெடுத்து அத்துமீறியுள்ளனர்.
வீடியோ எடுத்தபடி ஒரு ஜோடியை மிரட்டியவனிடம், ஒரு இளம்பெண் "நாங்க காதலிக்கறதைக் கேட்கறதுக்கு நீ யார்?''’என கேள்வி எழுப்புகிறார்.
"உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை, ஆனால் நீ போட்டிருக்கற ஹிஜாப்புக்கும் எனக்கும் சம்பந்தமிருக்கு, அதனால் கேள்வி கேட்பேன்'' ’என்கிறார்.
"நான் போலிஸுக் குப் போவேன்'' என்றதும்...
அவர் நக்கலாக, "நீ எங்க வேணும்னாலும் போ, முஸ்லிமா இருந்துக்கிட்டு இப்படி செய்யறியே அது தப்பு''’என்கிறான். மற்றொரு வீடியோவில், “"எங்களை படம் பிடிக்காதீங்க''’எனச் சொல்லும் காதலனை வீடியோ எடுத்தவன் மிரட்டினான்.
இதுகுறித்த வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி, "பெண்களைப் பெற்ற தாய்- தகப்பன்களே உங்கள் மகள்கள் செய்வதைப் பாருங்கள்'' எனக் கூறியிருந்தனர். இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியது. இதனைப் பார்த்த செய்தியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vellore1_13.jpg)
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ராஜேஷ்கண்ணன், "இந்த வீடியோவை பரப்புவது சட்டப்படி குற்றம். இதனை யாரும் பரப்பக்கூடாது'' என அறிக்கை வெளியிட்டார். வீடியோ எடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற கேள்வியை எழுப்பினர். இந்த வீடியோக்கள் குறித்து வடக்கு மண் டல ஐ.ஜி., டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந் தும் எஸ்.பி.யிடம் கேள்வியெழுப்பினர். மார்ச் 30-ஆம் தேதி இந்த வீடியோ எடுத்த வர்கள் என வேலூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டாவைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர் வேலூர் வடக்கு காவல்நிலைய போலீஸார். கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் இரண்டுபேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் கல்லூரியில் படிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
"காதலர் தினத்தின்போது காதலர்களைக் குறிவைத்து இந்து அமைப்புகள் தாலியோடு கள மிறங்கி, கலாச்சாரக் காவலர்கள் என அடையாளப் படுத்திக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டது பல தரப்பிலும் எதிர்ப்புகளை உருவாக்கியது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய கலாச்சாரக் காவலர்கள் எனச் சொல்லிக்கொண்டு களமிறங்கி ஹிஜாப் அணிந்த இளம்பெண்களை குறிவைத்தவர்களை காவல்துறை தலையிட்டு அடக்கியுள்ளது. இந்து சமூக கலாச்சார காவலர்கள் எனச் சொல்லிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாயாத சட்டம், இஸ்லாமிய கலாச்சாரக் காவலர்கள் எனச் சொல்லிக்கொண்டவர் மீது பாய்வது சரியா?' என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் ஏஜாஸ் அகமத்திடம் பேசியபோது, "பொது இடத்தில் அநாகரிகமாக, அசிங்கமாக உட்கார்ந்திருந்தது தவறு. அதை சரிசெய்கிறோம் என களமிறங்கினால் அது சரியாக வராது. எத்தனை பேரை போய் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஒரு இயக்கத்தினாலோ, ஜமாத்தினாலோ எந்தத் தப்பையும் தடுக்க முடியாது. பெற்றோர்களைத் தவிர பிள்ளைகள் மீது யார் அதிக அக்கறைகாட்ட முடியும். ஒரு பெண்ணோ, பையனோ காதலிக்கிறார்கள் என்றால், அதனை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களிடம் தெரிவிக்கவேண்டுமே தவிர, இவர்களாக வீடியோ எடுத்து அதனை வெளி யிட்டது தவறு. இவர்களின் அக்கா, தங்கையாக இருந்தால் வீடியோ எடுத்து வெளியிடுவார்களா?. வேலூர் கோட்டைக்குள் மரத்தின்மீது அமர்ந்து காதலர்கள் அத்துமீறியதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளது ஒரு கும்பல். அதே கோட்டை பூங்காவில் காதலர்களில் காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்கள். இதைத் தடுக்கவேண்டிய காவல்துறை அதுபற்றி கண்டுகொள்வதேயில்லை. கோட்டைக்குள் கோவில், சர்ச், மசூதி உள்ளது. கோவில், சர்ச்சுக்குள் மக்கள் சென்று வழிபடுகிறார்கள். மசூதிக்குள் இஸ்லாமியர்கள் சென்று வழிபாடு நடத்தவிடாமல் கடந்த 15 வருடங்களாக 6 போலீசை டெண்ட் போட்டு தங்கவைத்துள்ளார்கள். ஆனால் அதே கோட்டைக்குள் சமூகக் குற்றங்கள் நடந்தபடியே இருக்கின்றன. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது காவல்துறையின் கடமை. இதுபற்றி மாவட்ட காவல்துறையிடம் முறையிட்டால் எங்களிடம் ஸ்ட்ரென்த் இல்லை''’என்கிறார்கள் என்றார்.
எந்த மதமாக இருந்தாலும், கலாச்சாரக் காவலர்கள் எனச் சொல்லிக்கொண்டு சட்டத்தைக் கையிலெடுப்பவர்களை முளையிலேயே தடுத்து ஒடுக்கவேண்டியது அரசின் கடமை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/vellore-t.jpg)