"சேலையில் வந்தால் பள்ளிக்கு வா! இல்லையெனில் இந்தப் பக்கம் வராதே..'' என் கின்ற ஆண் குரலும், அதற்கு, "சார்.. இது பர்தா. இங்கு வந்தவுடன் கழற்றி வைத்து விட்டுத்தான் வகுப்பறைக்குள் நுழைவேன். வரும்போதே பர்தா அணியக்கூடாது என்றால் எப்படி சார்..? அதுபோக இது குறித்து முன் அனுமதி வாங்கி யிருக்கின்றேன்'' என பெண் குரலுமாக தேனி மாவட்டம் முழுவதும் வாட்ஸப்பில் வைரலாகி வருகின்றது. அவரவர் மதம் அவருக்கு. இது என்ன புது வில்லங்கம்?
"அந்த ஆண் குரலுக்குச் சொந்தக் காரர் போடிநாயக்கனூர் ஜமீன் தாரிணி காமுலம்மாள் நினைவு பள்ளிகளின் தலைவர் செந்தில் தியாகராஜன். அந்த பெண் குரலுக்குச் சொந்தமானவர் போடிநாயக்கனூர் மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஆசிரியை ஒருவர்" எனக் காது கடித்தார் மாவட்ட உளவு அதிகாரி ஒருவர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ளது ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு பள்ளிகள். ஜமீன்தாரிணி காமுலம்மா வால் துவங்கப்பட்ட இந்த பள்ளிகள் தற்பொழுது ஜ.கா.நி. பிரமைரி பள்ளி, ஜ.கா.நி. ஹையர் செகண்டரி பள்ளி, ஜ.கா.நி. மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி என மூன்று பள்ளிகளாக வளர்ந்துள்ளன. இதில் பிரைமரி மற்றும் ஹையர் செகண்டரி பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகளாக இருக்கின்றன. பள்ளிகளை நிர்வாகம் செய்ய மொத்தம் 77 நிர்வாகக்குழு உறுப்பினர்களை கொண்டவர்கள் தலைவர், செயலாளர் என தேர்ந்தெடுத்தல் வேண்டும். இது கம்பெனி விதிகளின் படி நடை பெறுவதால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நிர்வாகிகள் தேர்தல் நடைபெறு கின்றது.
ஜ.கா.நி. பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரோ, "அந்த ஆசிரியை எல்.கே.ஜி. டூ 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளின் ஒருங் கிணைப்பாளரும், 11, 12-ஆம் வகுப்புகளின் ஆங்கில ஆசிரியையு மாக இங்கு பணியாற்றி வந்தார். இங்குள்ள பள்ளிச் செயலாளர் மூலம் அவர் இந்த பள்ளிக்கு நியமனமானார். ஆண் ஆசிரியர், பெண் ஆசிரியை என இரு பாலருக்கும் தனித்தனி ஸ்டாப்ஸ் ரூம் இருக்கும். வெளியிலிருந்து ஹிஜாப்போ, பர்தாவோ போட்டு வரும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் ஸ்டாப்ஸ் ரூமிற்கு வந்து அதனை கழற்றிவிட்டு தான் அடுத்த வேலை யைப் பார்ப்பார்கள்..? இந்த ஆசிரியையும் அவ்வாறுதான் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில்தான் இந்த பிரச்சனை உருவானது. பர்தா அணிந்து வரக்கூடாது. அணிந்துவந்தால் பள்ளியை விட்டு விலகிக்கொள் என்றிருக் கின்றார் தலைவர் செந்தில் தியாகராஜன். ஜ.கா.நி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண் முதல்வர் உள்ளார் மற்றும் பெண் உதவி முதல்வரும் உள்ளார். அவர்களிடம் முறையாகத் தெரிவித்து அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியைக்குத் தெரிவித்திருக்கலாமே..? அதை விடுத்து தலைவரே அழைத்து வன்மையாகப் பேசி யிருக்கின்றார். இந்த இஸ்லாமியப் பெண் ஆசிரியைக்கு அறிவுரை வழங்கும் முன்பு அந்த தலைவர், தன் முகத்தில் உள்ள அடையாளத்தை அகற்றிவிட்டு அறிவுரை வழங்கி இருந்தால் அது நியாயமானதாக இருக்கும். ஏனென்றால் ஒரு கல்வி ஸ்தாபனத்தில் மத அடையாளம் இருக்கக்கூடாது என்று விரும்பும் தலைவர் அந்த கல்வி ஸ்தாபனத்தில் தலைவராக இருக்கக்கூடிய தானே மத அடையாளங் களை சுய விளம்பரங்களாக தன் முகத்தில் வைத்துக்கொண்டு பிறரை குறைகூறி வன் மையாகப் பேசுவது ஏற்புடையதல்ல. இப் பொழுது அந்த ஆசிரி யை வேலையை ராஜி னாமா செய்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்ய மெட்ரிக் முதன் மைக்கல்வி அலுவலர் ஏனோ இன்றுவரை வரமாட்டேன் என அடம்பிடிக்கின்றார்..'' என்கின்றார் அவர்.
பர்தா ஆடியோ, ஆசிரியை ராஜினாமா குறித்து கருத்தறிய ஜ.கா.நி. பள்ளிகளின் தலைவர் செந்தில் தியாகராஜனை தொடர்பு கொண்டோம். "5 நிமிடம் கழித்துப் பேச லாமே.?'' என்றவர் மீண்டும் தொடர்புகொள் ளும்பொழுது, "நேரில் வாங்க. பேசிக்கொள் வோம்'' என்றார். ஜ.கா.நி. பள்ளிகளின் செயலாளர் இனாயத் உசேன்கானோ, "அந்தப் பெண் அவராக வேலை வேண்டாம் என ராஜினாமா செய்துவிட்டார். அந்த பெண்ணின் பெற்றோரிடம் விளக்கம் கூறிவிட்டோம். அந்த ஆடியோ யாரோ குரலை மாற்றிப் பேசியிருக்கலாம் அல்லவா?'' என முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
இது இப்படியிருக்க, "ஜ.கா.நி. பள்ளி களின் தலைவராக உள்ள செந்தில் தியாக ராஜன் இந்துத்வா அமைப்பின் பின்புலம் கொண்டவர் என்றும், இதற்கு முன்னதாக இந்த பள்ளிகளின் மாணவ- மாணவியரை தேனி மாவட்டம் வேதபுரீ சித்பவா நந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆலயத்திற்கு சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. "இது மத மோதலுக்குத் தூண்டலாக உள்ளது' என உளவுத்துறையின் ஒரு பிரிவு குறிப்பு எழுதிவைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தை தமிழ்நாட்டிலும் நுழைக்கப் பார்ப்பதை, தமிழக கல்வித்துறை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
-ராவணன்