டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை யில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர் பிலுள்ள கும்பல் ஒன்று கேரளா வழியாக தமிழகத் தில் ஊடுருவவுள்ளதாக கொச்சியிலுள்ள ஒன்றிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலர்ட் செய்ய, அவர்களைப் பிடிக்க 6 முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் இரண்டு சொகுசு கார்களில், இருவேறு இடங்களில் நுழைந்த அந்த கும்பல், போலீஸ் வாகனங்களையும், தடுப்பு வேலிகளையும் இடித்துத் தள்ளிவிட்டு தலைமறைவாக, அந்த கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று, மறுநாளான ஒன்றாம் தேதி புத்தாண்டு தினத்தில் துப்பாக்கிமுனையில் 7 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர்.
பிடிபட்ட அந்த 7 பேரில் இரண்டு பெண்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள், ஒருவர் பி.டி.எஸ். மருத்துவம் படிக்கும் மாணவர், மற்ற 4 பேரும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிடிபட்டவர்களிட மிருந்து விலையுயர்ந்த 4 கிலோ எம்.டி.எம்.ஐ. போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து எர்ணாகுளம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர், "பிடிபட்ட 7 பேரும் கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஆன்சியா, மருத்துவர் ஹலீனா, பி.டி.எஸ். மாணவர் அஜித் மற்றும் ஐடி ஊழியர்களான அஸீம் மன்ஸீல், வினோத் தத்தன், அவினாஷ் மற்றும் ஷரிஷ் ஆகியோராவர். இதில், ஆன்சியாவோடும், ஹலீனாவோடும் சேர்ந்து மருத்துவம் படித்த சிலர். தமிழகத்தில் சென்னை, கோவை, வேலூர், கன்னியாகுமரி, புதுச்சேரியில் மருத்து வர்களாக உள்ளனர். இந்த கும்பலுக்கு தலைவி களே இந்த பெண் மருத்துவர்கள் தான். இவர் கள், கிர்கிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ் தான் நாடுகளிலுள்ள போதை கும்பல்களுக்கு ஏஜென்டுகளாக இருக்கிறார்கள். கப்பல்கள் மூலம் போதைப்பொருளை வரவழைத்து பிரபல போதைப்பொருள் ஏஜென்ட் பெங்க ளூரு காசிம் மூலம் அதை வாங்கிக்கொள்கிறார் கள். இந்த போதைப்பொருட்களை, ஐ.டி. ஊழி யர்கள், மாடலிங் துறையிலிருப்பவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல் இரவு விருந்துகளுக்கும் சப்ளை செய்கிறார்கள்.
தற்போதும்கூட நியூஇயர் பார்ட்டி களுக்கு சப்ளை செய்வதற்காகத்தான் பெங்களூரிலிருந்து ரயில் மூலம் எர்ணாகுளம் வந்து, அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். இவர்களில் ஒரு டீம் வந்த சொகுசு காரை ஆற்றிங்கல் டவுன்ஷாப்பில் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, செக்போஸ்ட் தடுப்பு வேலிகளையும், போலீஸ் வாகனத்தையும் இடித்துத்தள்ளி பறந்து தலைமறைவாயினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/06/drugs1-2026-01-06-11-00-55.jpg)
மறுநாளில், அதிகாலையிலிருந்து இரவு வரை வழிநெடுக 110 சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்து, நள்ளிரவு 2 மணிக்கு கணியா புரத்திலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப் பில் சுற்றிவளைத்து துப்பாக்கிமுனையில் சரணடைய வைத்தோம். இவர்கள், கேரளா பைபாஸ் எல்லையான செங்கவிளை வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர். இவர் களுக்காக செங்கவிளை எல்லையில் டாக்டர் ஸ்டிக்கருடன் தமிழ்நாடு பதிவெண் கொண்ட இரண்டு சொகுசு கார்கள் தயாராக இருந்ததாம்.
இவர்களிடமிருந்து கைப்பற்றிய 13 ஸ்மார்ட் போன்கள், 2 லேப்டாப்களில் போதைப்பொருள் நெட்வொர்க் விவரங்களை அள்ளியதில், தமிழகத்தி லுள்ள மருத்துவர்கள், ஐ.டி. ஊழியர்கள், சினிமா பிரபலங்களின் மேனேஜர்களின் பெயர்கள் இருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளாவிலிருந்து கிர்கிஸ் தான், பங்களாதேஷ், ஜார்ஜியா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் சிலரோடும் தொடர்பிலிருந்து தங்கள் தொழிலில் பயன்படுத்திய அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. இவர்கள் பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறார்கள். இவர்களால் சில இளம் மருத்துவ மாணவ, மாணவிகள் போதையால் சீரழிவதுதான் கஷ்டமாக உள்ளது''’என்றனர்.
இந்த போதை கும்பல் பற்றி லோக்கல் போலீசார் சிலர் கூறும்போது... “"இந்த கும்பலைச் சேர்ந்த வினோத் தத்தன் மற்றும் அஸீம் மன்ஸீலையும் 2018ல் விலையுயர்ந்த ஒன்றரைக் கிலோ போதைப்பொருளை கடத்தியபோது களக்கூட்டம் போலீஸ் கைது செய்தது. இருவருக்கும் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டது. தற்போது இவர்கள் ஜாமீனில் உள்ளனர். இதேபோல் ஏற்கெனவே டாக்டர் ஆன்சியா மீதும் போதைப்பொருள் வழக்கு உள்ளது.
இந்த கும்பலில் ஆள் மாறிக்கொண்டே இருப் பார்கள். இந்த 7 பேரில் ஒருத்தராவது அந்த கும்பலில் இருப்பார்கள். ஏற்கெனவே கடந்த ஆண்டு, தமிழ் நாட்டிலிருந்து சொகுசு காரில் வரும்போது எல்லையில் போலீசார் தடுத்தபோது நெய்யார் செக்போஸ்ட்டை இடித்துத் தள்ளிச்சென்றனர். இந்த மாதிரி கும்பலுக்கு தற்போது அடைக்கலமாக இருப்பது, இங்குள்ள மிகப் பெரிய அபார்ட்மென்ட்டுகள் தான். இப்போது அபார்ட்மென்டுகள் வாடகைக்கு விடப்படுவதால், அதை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் சப்ளை உட்பட பல தவறான தொழில்களுக்கு பயன்படுத்தி, தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டேயிருக்கிறார் கள். எந்த அபார்ட்மென்டுகளில் யார் வசிக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் இருக்கிறது''’என்றனர்.
இந்த மாதிரி போதைக்கும்பலால் அதை பயன்படுத்தும் ஆண்களும், பெண்களும் மட்டும் அழிவதில்லை, கலாச்சாரத்தையும் சேர்த்தேதான் அழிக்கிறார்கள். இதனால் காவல்துறை விழித்திருந்து அதுபோன்ற கும்பலையும், போதைப்பொருட்களையும் அழிக்க வேண்டுமென்கிறார்கள் போதைக்கு எதிரானவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/drugs-2026-01-06-11-00-45.jpg)