டாக்டர்கள் அரசின் சொத்து! பாதுகாப்பு அலட்சியம் கூடாது! மருத்துவர் எழிலன் பேட்டி!

dr

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு இந்தியாவை, அமெரிக்கா எதிர்பார்க்க வேண்டிய தேவை என்ன?

வளரும் நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மலேரியாவைக் குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயினைப் பயன் படுத்துகிறோம். இந்த மருந்து, கொரோனா தொற்றுள்ளவர் களுக்கு ஓரளவுக்கு பயனளிப்பதாக ட்ரம்புக்கு தெரிவிக்கப்பட்டதும், அதையே கொரோனா சிகிச்சைக்கான மருந்தாக அறிவித்தார். வளரும் நாடுகளில் மருந்துகளைப் பாதுகாக்க, முரசொலி மாறன் தோஹாவில் போட்ட ஒப்பந்தம் குறித்து, பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேள்வி யெழுப்பினார். காரணம், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பட்டியலில் இருந்த இந்த மருந்திற்கு சர்வதேச அளவில் டிமாண்ட் அதிகமாகும் என்பதால் தான். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஏப்ரல் 5ந்தேதி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது இந்திய அரசு. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியா மறுத்தால் பதிலடி கொடுப்போம் என்ற வார்த்தை யைப் பிரயோகித்தார். உடனே, இந்திய அரசும் பின்வாங்கிவிட்டது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு இந்தியாவை, அமெரிக்கா எதிர்பார்க்க வேண்டிய தேவை என்ன?

வளரும் நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மலேரியாவைக் குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயினைப் பயன் படுத்துகிறோம். இந்த மருந்து, கொரோனா தொற்றுள்ளவர் களுக்கு ஓரளவுக்கு பயனளிப்பதாக ட்ரம்புக்கு தெரிவிக்கப்பட்டதும், அதையே கொரோனா சிகிச்சைக்கான மருந்தாக அறிவித்தார். வளரும் நாடுகளில் மருந்துகளைப் பாதுகாக்க, முரசொலி மாறன் தோஹாவில் போட்ட ஒப்பந்தம் குறித்து, பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேள்வி யெழுப்பினார். காரணம், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பட்டியலில் இருந்த இந்த மருந்திற்கு சர்வதேச அளவில் டிமாண்ட் அதிகமாகும் என்பதால் தான். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஏப்ரல் 5ந்தேதி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது இந்திய அரசு. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியா மறுத்தால் பதிலடி கொடுப்போம் என்ற வார்த்தை யைப் பிரயோகித்தார். உடனே, இந்திய அரசும் பின்வாங்கிவிட்டது..

மனிதாபிமான அடிப்படையில் கொடுப்பதாக சொல்கிறார்களே?

அதுதான் மனமாற்றத்துக்குக் காரணம் என்றால், மனிதாபிமானம் இல்லாமல் ஏப்ரல் 5ந் தேதி மருந்துகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு ஏன் தடைவிதித்தது? இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உற்பத்தி யாகும் மருந்துகளை அவ்வளவு எளிதில் அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்காது. இப்போது தேவை இருப்பதால், நம்மிடம் கேட்கிறார்கள். அதுவும் மிரட்டல் தொனியில். இதே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கான 70 சதவீதம் மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்துதான் கொள்முதல் செய்கிறோம். அவர்களிடம் இதே தொனியில் பேசுவாரா ட்ரம்ப்.

இந்த மருந்தினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதால், நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

உண்மைதான். 46 டன் ஹைட்ராக்சி குளோரோகுயின் உற்பத்தித் திறன் நம்மிடம் உள்ளது. நம் மக்களுக்கு 25 டன் போதுமானது. நிறைய தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் அறிவிப்பும் நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கிறது. மேலும், அமெரிக்கா மட்டுமின்றி பூடான், பிரேசில் போன்ற நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதி செய்யவிருக்கிறோம். அதனால், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு குறைவுதான்.

கொரோனா தொற்று சமூகப் பரவல் அச்சம் இன்றளவும் நீடிக்கிறது. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

dr

நமது நக்கீரனிலேயே மார்ச் 2ந்தேதி இதுதொடர்பான விரிவான பேட்டியில், பல கேள்விகளை முன்வைத்திருந்தோம். இந்தக் கேள்விகளை ஆராய்ந்து செயல்படவே அரசுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண் காணித்து சோதனை செய்யும் அளவுக்கு, வெளி நாட்டில் இருந்து வந்தவர்களைச் செய்யவில்லை என்று தோன்றுகிறது. பக்கத்து மாநிலமான கேரளா கொரோனாவை பேரிடராக அறிவித்த போது, தமிழகத்தில் சட்டமன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்ததே. “நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, நோயாளிகளோடு தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவது, குணமடைந்த மக்களை எப்படி சமூகத்தில் புழங்கவிடுவது...’’இந்த மூன்று விஷயங்களுமே முக்கியமானவை. பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால் மட்டுமே தெளிவாகும். அது இல்லாமல் அனுமானத்தில் அடிப்படையில் செயல்பட்டதால்தான், அரசுகள் மாட்டிக்கொண்டன.

வளர்ந்த நாடுகளே இதில் திணறு கின்றனவே?

அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் திட்டமிடலில் தோற்றுவிட்டன. அதேசமயம், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் வேறுவிதமான வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்கள். இந்தியாவிடம் அதற்கான தகுதி இல்லையா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ முயற்சி செய்யவில்லை என்கிறேன்.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறதே?

நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதே தற்காப்பு உபகரணங்கள் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை யளிக்கும் மருத்துவர்களுக்கும் வழங்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்க மருத்துவர்களின் பாதுகாப்பில் எந்தவித அலட்சியமும் இருக்கக்கூடாது. அவர்கள் தமிழக அரசின் சொத்து. அவர்கள்தான், இதுபோன்ற பேரிடர் காலங்களில் முன்னால் நின்று பாதுகாக்கிறார்கள்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கியதிலும் சர்ச்சை கிளம்பி இருக்கிறதே?

கொரோனா தொற்றில் இந்தியளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கியது முற்றிலும் தவறானது. பொருளாதாரம் மற்றும் புவியியல் அடிப்படையில் நிதி ஒதுக்கும் நேரமா இது. மக்களிடம் வசூலித்த செஸ் வரியையோ, மாநிலங்களுக்குத் திரும்பித் தரவேண்டிய ஜி.எஸ்.டி. வரிப்பணத்தையோ பற்றி இப்போதுவரை மத்திய அரசு வாய்திறக்கவில்லை. உண்மையில், கல்வி, சுகாதாரம் போல பொருளாதார சுயநிர்ணயத்திலும் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே, மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை கொரோனா உணர்த்தி இருக்கிறது.

சந்திப்பு : பெலிக்ஸ்

தொகுப்பு : ச.ப.மதிவாணன்

nkn150420
இதையும் படியுங்கள்
Subscribe