Advertisment

ஜாமீன் வேணுமா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! காக்கிகள் முதல் வி.ஐ.பி.க்கள் வரை வேட்டையாடப்பட்ட காதலி!

dd

லைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் போக்சோவில் கைதுசெய்யப்பட்ட காதலனை மீட்கப் போராடும் காதலியை, "உன் லவ்வருக்கு ஜாமீன் நாங்களே வாங்கிக் கொடுத்துவிடுவோம். அதுக்கு பிரதியுபகாரமா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'' என தங்களுடைய சுயலாபத்திற்காக அப்பெண்ணை படுக்கையில் வீழ்த்தி வேட்டையாடியுள்ளனர் காக்கிகளும், வி.ஐ.பி.க்களும்.

Advertisment

ww

கடந்த நவம்பர் 5, 6 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கர்நாடகா மாநிலம் மைசூர் டவுன் பேருந்து நிலையம் அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சிறார் நீதிக் குழும உறுப்பினர்கள், குழந்தைகள் உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த கலந்தாய்வு பகல் அமர்வு, இரவு அமர்வு என நடைபெற்றது. இதில் போக்சோ சட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அலசப்பட்டன.

குறிப்பாக போக்சோ, ஊபா சட்டங்களில் குற்றஞ்சாட்டப் பட்டவரே தன்னைக் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவேண்டும்

லைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் போக்சோவில் கைதுசெய்யப்பட்ட காதலனை மீட்கப் போராடும் காதலியை, "உன் லவ்வருக்கு ஜாமீன் நாங்களே வாங்கிக் கொடுத்துவிடுவோம். அதுக்கு பிரதியுபகாரமா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'' என தங்களுடைய சுயலாபத்திற்காக அப்பெண்ணை படுக்கையில் வீழ்த்தி வேட்டையாடியுள்ளனர் காக்கிகளும், வி.ஐ.பி.க்களும்.

Advertisment

ww

கடந்த நவம்பர் 5, 6 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கர்நாடகா மாநிலம் மைசூர் டவுன் பேருந்து நிலையம் அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சிறார் நீதிக் குழும உறுப்பினர்கள், குழந்தைகள் உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த கலந்தாய்வு பகல் அமர்வு, இரவு அமர்வு என நடைபெற்றது. இதில் போக்சோ சட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அலசப்பட்டன.

குறிப்பாக போக்சோ, ஊபா சட்டங்களில் குற்றஞ்சாட்டப் பட்டவரே தன்னைக் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவேண்டும் என்பது பேசு பொருளாக மாற, "கர்நாடகா விலுள்ள அந்த மடத்தில் இருப் பவர்கள் அனைவரும் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டி ருக்கின்றார்கள்' என்றும், "மலைவாழ் ஆதிவாசி குடிகளில் திருமணத்திற்கு முந்தைய உறவு இருந்து அது குழந்தையாக மாறினால் திருமணம். இது போக்சோ சட்டத்திற்குள் அடங்காது' என்றும் ஒவ்வொருவரும் உரை யாற்றியிருக்கின்றார்கள்.

இதில் பகீர் கதைகளும் அடக்கம். அதில் சில நம் காது களுக்கும் எட்டியது.

"நீலகிரி மாவட்டத்தில் குடும்பங்களுக்கிடையே நடந்த வன்முறையில் தவறுதலாக வழுக்கி விழுந்து ஒருவன் இறக்க, மற்றொரு குடும்பத்தில் வயதான பாட்டி மற்றும் பெற்றோர் ஆகிய மூவரும் கொலைக் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். தன்னுடைய குடும்பத்தாரின் ஜாமீனுக்காக 16 வயதான அச்சிறுமி தனது தம்பியை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக உதவிகேட்டு அலைந்திருக்கிறாள். ஒருநாள் ரீசார்ஜ் கடையொன்றில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு அங்கிருந்தபடியே, ‘"ஜாமீன் சூரிட்டிக்காக ஆட்கள் தேவைப்படுது. ஒவ்வொரு சூரிட்டியும் ரூ.20 ஆயிரம் கேட்கிறாங்க... என்ன செய்றதுன்னே தெரியலை'’ என யாருக்கோ போன்செய்து புலம்பிய நிலையில்... 21 வயது நிரம்பிய அந்த ரீசார்ஜ் கடைக்காரர், தானே முன்வந்து ஜாமீனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திருக்கின்றார். இடையில் காதலாகி இருவரும் மிக நெருக்கமாகியுள்ளனர். ஜாமீனில் வெளிவந்த பெற்றோர் களுக்கு இது அரசல்புரசலாகத் தெரிய, காவல்துறையின் உதவியுடன் போக்சோ சட்டத்தினை காதலன்மேல் பிரயோகித்து சிறைக்கு அனுப்பியது மகளிர் காவல்துறை.

ww

தன்னுடைய காதலன் சிறைக்குச் சென்றது குறித்து தனக்குத் தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் உதவிகேட்க, அன்றிலிருந்து வேட்டையாடப்பட்டிருக்கின்றாள் அந்தச் சிறுமி. அதுபோக... "இவரு பெரிய ஆபீசரு... காப்பத்திடுவாரு'”என காக்கிகளும், "இவரு டவுனில் பெரிய ஆளு, இவர் நினைச்சா காப்பாத்திடுவாரு'’என வி.ஐ.பி.க்களும் அந்தச் சிறுமியை வேட்டையாடியுள்ளனர். இது போக்சோ சட்டத்தினால் ஏற்பட்ட மற்றொரு விளைவு'' என்கின்றது அந்த உண்மைக் கதை.

மற்றொரு கதையோ, "பெற்றோர்கள் இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி ஒருவர் மலைத்தோட்டங்களில் கூலி வேலை பார்த்துவந்திருக்கின்றார். 13-9-2022 அன்று குன்னூர் மார்க்கெட்டிற்கு சென்று சிம் கார்டு வாங்கிவிட்டு ஊர்க்காரர்களுடன் பேசிக்கொண்டு தன்னுடைய கிராமம் திரும்புகையில் அச்சிறுமிக்கு அசம்பாவிதம் ஏற்பட... காவல்துறைக்கு புகார் சென்றி ருக்கின்றது. காவல்துறையிடம், ‘இந்நிலைக்கு காரணம் என்னுடைய நண்பர்கள் கிடையாது. அவர்களே’ என சிலரை அடையாளம் காட்ட... மகளிர் காவல்துறையினர், "ஏம்மா, அதுதான் ஆச்சே... அவன் செய்தால் என்ன.? இவன் செய்தால் என்ன? நாங்க சொல்ற ஆளைத்தான் நீதிபதி முன்பு சொல்லணும்'’என மிரட்டியிருக் கின்றார்கள்.

இச்சிறுமி மறுக்கவே மகளிர் காவல்துறையைச் சேர்ந்த இருவர், சிறுமி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கும் சி.எம்.எஸ். காப்பகத்திற்கே வந்து "ஏன் அப்படிச் சொல்லவில்லை?' என அடித்துத் துவைத்திருக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நீதிபதிக்கு புகாரும் அனுப்பப்பட்டுள்ளது'' என் கின்றது.

இதுகுறித்து பேசிய ஊட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயனோ, "போக்சோ வழக்கு இரு தரப்பிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான் காப்பாற்றுகிறேன் என போலி சத்தியம் செய்து கொடுத்து அத்துமீறுகின்றனர் பலர். அதுபோல் இந்த சட்டம் குறிப்பாக ஆதிவாசி மக்களிடம் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இங்குள்ள சில ஆதிவாசி மக்களின் வழக்கப்படியான திருமணங்களை போக்சோ மூலம் எதிர்க்கின்றனர் காவல்துறையினர். ஆதிவாசி மக்களில் 21 வயது ஆணுக்கும், 17 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணத்தை போக்சோ வழக்காக காவல்துறையினர் பதிவுசெய்ய, உச்சநீதிமன்றமோ வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றது. சமூக சட்டக் காரணிகளை ஆய்வுசெய்து போக்சோ சட்டத்தை திருத்தி மேம்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடக்காது'' என்கின்றார் அவர்.

Advertisment

படம்: விவேக்

nkn121122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe