அ.தி.மு.க.வின் பதவி நியமனங்களில் வெடிக்கும் அதிருப்தியில் திருச்சி மாவட்டம் முதல் இடத்தில் இருக்கிறது. திருச்சி எம்.பி. யும் மா.செ.வுமான குமார், மாவட்ட அமைச்சர்களான வெல்லமண்டி நட ராஜன், வளர்மதி ஆகி யோரின் ஆதரவாளர் களை அடியோடு புறக்கணிக்கிறார் என்கிறார்கள் கட்சிக்குள்ளேயே.
""மா.செ. ஆனவுடனேயே அமைச்சர் வெல்லமண்டி யின் ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் அன்பழகனை தூக்கிவிட்டு சோமுவை பொறுப்பாளரா நியமிச்சாரு குமார். கூட்டுறவு சங்க சேர்மன்களா இருந்த, அமைச்சரின் ஆட்களான பெருமாள், காஜா, சுரேஷ்குப்தா, ரமேஷ், தென்னூர் அப்பாஸ் ஆகியோரை தடாலடியா நீக்கிட்டாரு'' என்கிறார்கள்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன் மகன் ஜவஹர்லால் நேருவுக்காக மா.செ.விடம் பதவி கேட்கிறார் என்று நக்கீரன் செய்தி வெளியானதும், நம்மைத் தொடர்பு கொண்டார் ஜவஹர்லால் நேரு. “""உடல்நிலை ஒத்துழைக் காததால்தான் மா.செ.வாக பதவியிலிருந்த எங்க அப்பா விலகினார். குமார் அண்ணன் மா.செ.ஆனவுடன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தப்ப, "அண்ணே நம்ம ஜவஹருக்கு மாவட்ட அளவுல கட்சிப் பொறுப்பு கொடுத்துருவோம்'னு மா.செ. சொன்னப்பக்கூட, "சாஃப்ட்வேர் என்ஜினியர் படிச்ச அவனுக்கு எதுக்கு அரசியல். நான் குடும்ப அரசியல் பண்றேன்னு சொல்வார்கள். இருந்தாலும் அமைச்சர் வளர்மதியிடம் கன்சல்ட் பண்ணிட்டு, அவுங்க ஓ.கே.ன்னா எனக்கு ஆட்சேபணை இல்லை'ன்னு சொன்னவருதான் எங்க அப்பா. பதவி கேட்டு கெஞ்சியதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை'' என்கிறார்.
-கீரன்