தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதற்றத்துக்கிடையே, அதன் பிறகான எம்.எல்.ஏக்களின் மூவ்வும் எடப்பாடிக்கு நெருக்கடியைத் தரும் என்கிறார்கள் ஆளுந்தரப்பில். தற்போதைய அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 116 (டி.டி.வி.யின் ஸ்லீப்பர் செல்களையும் சேர்த்து).
ஜெயலலிதா இருந்தவரை பெரும்பான்மை சமூகத்திற்கான உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டாலும் அதுகுறித்த முணுமுணுப்புகள்கூட, எந்த ஒரு சாதி எம்.எல்.ஏ.விடமும் எதிரொலிக்காது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முணுமுணுப்புகள் பெருகி அதிருப்தியாக வெடிக்கத் துவங்கி தற்போது உச்சத்தில் இருக்கிறது. அது ஆட்சியை காவு வாங்குமோ என கவலைப்படுகின்றனர் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.
அவர்களிடம் நாம் பேசியபோது, ""அ.தி.மு.க.விலிருக்கும் 116 எம்.எல்.ஏ.க்களும் சாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். இவர்களில் சமூக வாரியாக எடுத்துக்கொண்டால் பட்டியலினத்தவர்கள் முதலிடத்திலும், கொங்கு வேளாளர்கள் இரண்டாமிடத்திலும், வன்னியர்களும்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதற்றத்துக்கிடையே, அதன் பிறகான எம்.எல்.ஏக்களின் மூவ்வும் எடப்பாடிக்கு நெருக்கடியைத் தரும் என்கிறார்கள் ஆளுந்தரப்பில். தற்போதைய அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 116 (டி.டி.வி.யின் ஸ்லீப்பர் செல்களையும் சேர்த்து).
ஜெயலலிதா இருந்தவரை பெரும்பான்மை சமூகத்திற்கான உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டாலும் அதுகுறித்த முணுமுணுப்புகள்கூட, எந்த ஒரு சாதி எம்.எல்.ஏ.விடமும் எதிரொலிக்காது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முணுமுணுப்புகள் பெருகி அதிருப்தியாக வெடிக்கத் துவங்கி தற்போது உச்சத்தில் இருக்கிறது. அது ஆட்சியை காவு வாங்குமோ என கவலைப்படுகின்றனர் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.
அவர்களிடம் நாம் பேசியபோது, ""அ.தி.மு.க.விலிருக்கும் 116 எம்.எல்.ஏ.க்களும் சாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். இவர்களில் சமூக வாரியாக எடுத்துக்கொண்டால் பட்டியலினத்தவர்கள் முதலிடத்திலும், கொங்கு வேளாளர்கள் இரண்டாமிடத்திலும், வன்னியர்களும் முக்குலத்தோர்களும் அடுத்தடுத்த நிலையிலும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான்.
கடந்த சில மாதங்களாகவே அவரவர் சமூக எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி ரகசியமாக கூடிப் பேசுகின்றனர். அமைச்சர்களின் சொத்துகளையும் ஊழல்களையும் விவாதிக்கின்றனர். இதன் முடிவில், "கேபினெட்டை மாற்றச் சொல்லி முதல்வரை வலியுறுத்த வேண்டும். அமைச்சர்களாகவே இருப்பவர்கள் தொடர்ந்து அமைச்சர்களாகவே இருப்பது சரி இல்லை. அமைச்சரவையை மாற்றி சுழற்சி அடிப்படையில் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அமைச்சரவையை மாத்தணும்ங்கிற எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்பு சீரியசானால் ஆட்சிக்கு பிரச்சனைதான்'' என்கின்றனர்.
அ.தி.மு.க.வின் தலித் எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ‘இப்போதைய அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளும் இருக்கின்றன. ஆனா, அப்படி இருந்தும் எந்த அமைச்சரையும் நீக்க முதல்வரால் முடியவில்லை. காரணம் அவர் மீதும் ஊழல் புகார்கள் இருப்பதுதான். இதெல்லாம் கட்சியை அழிக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் புகார்கள் வந்த உடனேயே சம்பந்தப்பட்டவரை அமைச்சரவையிலிருந்து தூக்கியிருப்பார். அதனால் புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்திருக்கும். எடப்பாடியால் அப்படி செய்ய முடியவில்லை. இந்த ஆட்சியில் அமைச்சர்களும் அவர்களைச் சார்ந்த சில எம்.எல்.ஏக்களும் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். இது எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடியை முதல்வராக ஏற்க வேண்டும் என கூவத்தூரில் சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கியபோது, சில உத்தரவாதம் தரப்பட்டது. அதில் சில விசயங்கள்தான் நிறைவேறின. பல விசயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், மந்திரிகள் மட்டும் எல்லா வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தபிறகு, முதல்வரை சந்தித்து, அமைச்சரவையை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமையுங்கள். அப்போது, "அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் சுழற்சி முறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்' என வலியுறுத்தவிருக்கிறோம். அதற்கு முதல்வரின் ரியாக்ஷனைப் பார்த்து எங்களின் முடிவுகள் அமையும். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களிடமும் இந்த சிந்தனை இருக்கிறது'' என்கின்றனர் அழுத்தமாக.
உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, ""அமைச்சரவையில் இடம் வேண்டும்ங்கிற விருப்பம் எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் இருக்கிறது. எடப்பாடி முதல்வரான பிறகு ஒவ்வொரு அமைச்சரிடமும் அவரவர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி அவர்களை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்'' என அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது. தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், சீனியர் அமைச்சர்கள் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ள தவறிவிட்டனர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு மாதா மாதம் தருவதாக சொல்லப்பட்ட தொகை சமீப மாதங்களில் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், தொகுதியில் நடக்கும் காண்ட்ராக்ட்டுகள், துறை சார்ந்த புதிய நியமனங்கள், இடம்மாறுதல்கள் என பல விவகாரங்களில் எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசுகள் ஏற்கப்படவில்லை. இதனால் அமைச்சர்கள் மீது அதிருப்தியடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் குழு குழுவாக சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி ரகசிய மீட்டிங் நடத்தி ஒவ்வொரு அமைச்சரின் நெகட்டிவ் விசயங்களை அலசுவதுடன், "நாமும் அமைச்சராக வேண்டும். நம்முடைய ஆதரவில்தான் ஆட்சியே நிற்கிறது. தேர்தல் வந்தால் போட்டியிட மீண்டும் நமக்கு வாய்ப்புக்கிடைத்தாலும் ஜெயிப்போம்ங்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், அமைச்சராவதற்கு இதுதான் சந்தர்ப்பம். முதல்வரை சந்தித்து, "நீங்களே சம்பாதிப்பீங்களா, கேபினெட்டை மாற்றுங்கள்' என வற்புறுத்துவோம். "துணை முதல்வர்' ஓ.பி.எஸ்.ஸையும் வலியுறுத்துவோம். முடியாது' என அவர்கள் சொன்னால் என்ன செய்வதென்று அப்போது ஆலோசிப்போம்' என திட்டமிட்டுள்ளனர்.
சாதி ரீதியாக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்தால் அது எடப்பாடி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். எல்லா எம்.எல்.ஏ.க்களுக்குமே அமைச்சர் கனவு வந்திருக்கிறது. இது எங்கு போய் முடியப் போகிறதோ, தெரியவில்லை'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
-இரா.இளையசெல்வன்