Advertisment

கட்சிக்காரன் சொல்வதைச் செய் இல்லேன்னா டிரான்ஸ்டர்! - அதிகாரிகளை மிரட்டிய மா.செ.!

aa

முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் செங்கோட்டையன் என கொங்கு லாபிமூலம் இந்த பதவிக்கு வந்துள்ளார்.

Advertisment

a

இந்நிலையில் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி தெற்கு மாவட்டம் முழுவதும் பயணம்செய்து இளைஞர்- இளம்பெண் பாசறைக்கான உறுப்பினர் சேர்க்கையை நடத்திவருகிறார். ஆகஸ்ட் 29-

முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் செங்கோட்டையன் என கொங்கு லாபிமூலம் இந்த பதவிக்கு வந்துள்ளார்.

Advertisment

a

இந்நிலையில் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி தெற்கு மாவட்டம் முழுவதும் பயணம்செய்து இளைஞர்- இளம்பெண் பாசறைக்கான உறுப்பினர் சேர்க்கையை நடத்திவருகிறார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தைத் தரும் நிகழ்ச்சியை ந.செ செந்தில் நடத்தினார். உறுப்பினர் சேர்க்கைக்காக 2-ஆவது வார்டுக்குச் சென்றவர் அங்கு பேசிய பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறுப்பினர் படிவம் தந்துவிட்டு மைக்பிடித்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ""அ.தி.மு.க. இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ந.செ, வட்டச் செயலாளர் சொன்னால் அதிகாரிகள் செய்யவில்லையென்று சொன்னார்கள். அ.தி.மு.க.வின் சாதாரண தொண்டன் ஒரு வேட்டி கட்டிக்கொண்டு வருபவன் ஒரு தகவலைச் சொன்னால் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாலும், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தாலும், நகராட்சி ஆணையாளராக இருந்தாலும், பொறியாளராக இருந்தாலும் செய்யவேண்டும் என்பது முதலமைச்சர் உத்தரவு. அதிகாரிகள், இயக்கத்தின் நண்பர்களை மதிக்கவேண்டும், இந்த நகர கழக நிர்வாகிகளை மதிக்கவேண்டும். பொதுமக்கள் சார்பில் சொல்லப்படும் எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு செய்துதரவேண்டும். கட்சிக்காரர்களின் உத்தரவுக்குக் கட்டுப்படாத எந்த அதிகாரியும் இந்த மாவட்டத்தில் பணியாற்றமுடியாது'' எனப் பேசியது வீடியோவாக பரவ அதிகாரிகளையும், அரசு ஊழியர்களையும் இது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisment

இதுபற்றி கட்சிப் பிரமுகர்கள் சிலர் நம்மிடம், ""அவரோட வழக்கமான ஸ்டைலே இதுதான். மா.செ. பதவியில் நியமனம் செய்யப்பட்ட மறுநாள், ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவருக்கு போன் செய்தவர் “எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சி மா.செ. என்கிற முறையில் என்னோட கமிஷன் எனக்கு வந்து சேரனும்'' எனக் கேட்டதாக சர்ச்சை கிளம்பியது.

தற்போது வெளிப்படையாக... "கட்சிக்காரன் சொல்ற வேலையை செய்யலன்னா, தூக்கியடிச் சிடுவோம்' என மிரட்டியிருப்பது அரசு ஊழியர்களை கோபமடையச் செய்துள்ளது. செப்டம்பர் 4-ஆம் தேதி முதல்வர் வரும்போது தங்களது எதிர்ப்பைக் காட்டலாமா அல்லது அதற்குப்பின்பு எதிர்ப்பு தெரிவிக்கலாமா என நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

-து.ராஜா

nkn050920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe