Advertisment

ஆபத்தான ஆலை வேண்டாம்! கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள்!

dd

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலிருக்கிறது ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.இ. மணல் ஆலை. குறும்பனை முதல் நீரோடி வரை 13 கடற்கரை கிராமங்களிலிருந்து மணலை அள்ளி, கனிமங்களைப் பிரித்தெடுப் பதற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளதாகத் தகவல் வெளிவர, இதனால் அச்சமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள், கேன்சரை உண்டாக்கும் இந்தத் திட்டம் வேண்டவே வேண்டாமென்று போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

Advertisment

fa

1965ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ஐ.ஆர்.இ. நிறுவனம், மணலிலிருந்து மோன சைட், கார்னெட், சிர்கான், இல்மனைட், ரூட் டைல் போன்றவற்றை பிரித்தெடுக்கிறது. இதில் வெளியாகும் நச்சுத்தன்மையால் குமரி மாவட் டத்தில் ஆயிரக்கணக்கானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், “"குறும்பனை முத

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலிருக்கிறது ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.இ. மணல் ஆலை. குறும்பனை முதல் நீரோடி வரை 13 கடற்கரை கிராமங்களிலிருந்து மணலை அள்ளி, கனிமங்களைப் பிரித்தெடுப் பதற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளதாகத் தகவல் வெளிவர, இதனால் அச்சமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள், கேன்சரை உண்டாக்கும் இந்தத் திட்டம் வேண்டவே வேண்டாமென்று போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

Advertisment

fa

1965ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ஐ.ஆர்.இ. நிறுவனம், மணலிலிருந்து மோன சைட், கார்னெட், சிர்கான், இல்மனைட், ரூட் டைல் போன்றவற்றை பிரித்தெடுக்கிறது. இதில் வெளியாகும் நச்சுத்தன்மையால் குமரி மாவட் டத்தில் ஆயிரக்கணக்கானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், “"குறும்பனை முதல் நீரோடிவரை 1,144,0618 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள அரிய வகை மணலை பிரித்தெடுப்பதற்காக ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தாது மணல் கொள்ளைத் திட்டம் மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மணலைப் பிரித்தெடுப்பதற்காகக் கடல்நீரை யும் நிலத்தடி நீரையும் ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சியெடுப்பார்கள். அதேபோல் மணல் ஆலையிலிருந்து வெளியாகும் கழிவு நீரையும் சுத்திகரிக்காமல் கடலில் விடுவார்கள். இதில் கடல்நீர் மாசுபட்டு நஞ்சாக மாறும்போது மீன்வளமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். இந்த மணலை அள்ளுவதால் கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தும் மணல் குன்று கள் அழிந்துவிடும். கடற்கரை, வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், வன நிலத்தை வனமில்லாத பயன்பாட்டுக்கு ஒதுக்குவது வனப்பாதுகாப்புச் சட்டப்படி குற்றச்செய லாகும். மக்களின் பயன்பாட்டிலிருக்கும் எதை யும் அழிக்கவோ, சிதைக்கவோ கூடாதென்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் மீறப்படுகின்றன. இந்த அரசுகள் கனிமக்கொள்ளை விசயத்தில் அறிவியலுக்கு முரணாகப் பொய் சொல்கின்றன. மக்களின் போராட்டத்தையடுத்து அக்டோபர் 1ஆம் தேதி நடத்தவிருந்த கருத்துக்கேட் புக் கூட்டத்தைத் தற்காலிக மாக நிறுத்தி வைத்திருக் கிறது''’என்றார்.

Advertisment

ff

தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக் சாண்டரோ, "ஏற்கனவே கனிமங்களைப் பிரித் தெடுப்பதால் கதிரியக்கம் ஏற்பட்டு கேன்சரால் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் மணலைப் பிரித்தெடுக்க அனுமதியளிப் பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற் கெனவே கடல் அரிப்பால் கடற்கரை நிலப் பரப்புகள் அழிந்துவிட்டன. இருக்கிற குறைந்த நிலப்பரப்பையும் அழித்து, மக்களின் வாழ்வாதா ரத்தையும் கெடுத்து, கதிர்வீச்சை உருவாக்கி, அதன்மூலம் இன்னும் ஆயிரக்கணக்கான மக்க ளுக்கு கேன்சரையும், பெண்களுக்கு கருச்சிதை வையும் உண்டாக்குவதுதான் இத்திட்டத்தின் விளைவாக இருக்கும். இதைத் தடுக்க இடிந்த கரை போராட்டத்தைப் போல, பெரிய அளவில் போராடுவோம்''’என்றார் அழுத்தமாக.

கடலோர மக்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ, "இந்தத் திட்டத்தை 2002-ல் ஒன்றிய அரசு கொண்டுவரும்போது அப்போ தைய பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர், மண்ணள்ளத் திட்டமிடும் பகுதியில் அதிகள வில் கல்வி நிறுவனங்களும், மும்மத வழிபாட் டுத்தலங்களும் இருப்பதாக அறிக்கை கொடுத் தார். அதன்பிறகு 2006-லும் இதேபோல் மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுத்தார். இந் நிலையில், 2013-ல், அரியவகை மணலை அள்ளு வதற்காக போலி பட்டாக்களுடன் இறங்கியது. அப்போது ஏற்பட்ட வன்முறையால் அந்நிறு வனம் பின்வாங்கியது. பொய் வழக்குகளும் போட்டது. மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. இன்னும் 80 ஆண்டுகளுக்கு தேவையான மணலை ஸ்டாக் வைத்திருக்கும் நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு ஒன்றிய அரசு சம்மதம் சொல்லியிருக்கிறது. பா.ஜ.க. தோல்விக்கு நாங்கள்தான் காரணமென்று மீனவ கிராமங்களை அச்சுறுத்துகிறார்கள்''’என்கிறார்.

cc

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மரிய ஜெனிபர், "ஏற்கனவே ஐ.ஆர்.இ. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து கதிர்வீச்சால் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துவரு கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக புற்றுநோய்க்கு தனியாக ஒரு மருத்துவமனை வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய, மாநில அரசுகள், குமரி மக்கள் நிரந்தர புற்றுநோயாளி களாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை இன்னும் அதிகரிக்கக்கூடிய திட்டத்தை நிறை வேற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள். கருத் துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தித்தான் வைத்திருக் கிறார்களே தவிர திட்டத்தை கைவிடவில்லை. மக்களின் உயிர்ப்பிரச்சனையில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்கீழ் எந்த அனுமதி யும் வழங்கக்கூடாது. நடப்பில் இருக்கக்கூடிய அனுமதியையும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார் கவலையாக.

மக்களை ரொம்பவே மிரள வைத்துக் கொண்டிருக்கிறது அந்த டேஞ்சரஸ் மணல் ஆலை!

nkn051024
இதையும் படியுங்கள்
Subscribe