நாகை பேருந்து நிலையத்தை ஒட்டியே பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. நாகை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்கள், பேருந்து களில் வந்திறங்கி சிகிச்சை பெற்றுச்செல்ல ஏதுவாக இருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நாகைக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத் துவமனையை, நாகப்பட்டினத்தில் இடப்பற்றாக் குறை எனக்கூறி, நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு கொண்டுசென்றனர். மருத்துவக் கல்லூரிக்கான நிலம் கையகப்படுத்தியபோது பலத்த எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம், அ.தி.மு.க. அமைச்சரான ஓ.எஸ்.மணி யன், "நீங்க இப்படி எதிர்ப்பு தெரிவித்தால் இந்த மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறைக்கு போய்விடும்'' என சாதுர்யமாகப் பேசி போராட்டத்தை மழுங் கடிக்கச் செய்தார். கட்டடப்பணிகள் முடியும் தருவாயில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மருத்துவ மனைக்கான பூர்வாங்கப
நாகை பேருந்து நிலையத்தை ஒட்டியே பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. நாகை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்கள், பேருந்து களில் வந்திறங்கி சிகிச்சை பெற்றுச்செல்ல ஏதுவாக இருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நாகைக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத் துவமனையை, நாகப்பட்டினத்தில் இடப்பற்றாக் குறை எனக்கூறி, நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு கொண்டுசென்றனர். மருத்துவக் கல்லூரிக்கான நிலம் கையகப்படுத்தியபோது பலத்த எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம், அ.தி.மு.க. அமைச்சரான ஓ.எஸ்.மணி யன், "நீங்க இப்படி எதிர்ப்பு தெரிவித்தால் இந்த மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறைக்கு போய்விடும்'' என சாதுர்யமாகப் பேசி போராட்டத்தை மழுங் கடிக்கச் செய்தார். கட்டடப்பணிகள் முடியும் தருவாயில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மருத்துவ மனைக்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்து கடந்த மார்ச் 4ஆம் தேதி, 700 நவீன படுக்கை வசதி களுடன் கூடிய ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலி மூலமாகத் திறந்துவைத்தார். ஆனால் மருத்துவக்கல்லூரிக்கு போக்குவரத்து வசதிகளோ, போதிய மருத்துவர்களோ, குடிநீர் வசதிகளோ இல்லாததோடு, முற்றிலுமாக நகரத்திற்கு அப்பால் இருப்பதால் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம்காட்டவில்லை. இச்சூழலில் நகரத்தின் மையப்பகுதியில் செயல்பட்டுவந்த நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திடீரென மூடியதால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவரும் நாகை முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், "அடிக்கடி இயற்கை பேரிடர் ஏற்படும் நாகைக்கு மருத்துவக்கல்லூரி வேண்டுமென்று கோரிக்கை வைத்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக, நிலத்தடி நீராதாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லாத கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்காக நிலம் எடுத்ததை அப்போதே நாங்கள் கண்டித்தோம். தற்போதுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைப் பகுதியிலேயே காலியாக உள்ள 12 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டு மெனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சுயநலத்துக்காக கடந்தகால ஆட்சியாளர்கள் எங்கள் கோரிக்கையைக் காதில் வாங்கவேயில்லை. ஒரத்தூரில் பேருந்து வசதியோ, ஒரு டீக்கடையோகூடக் கிடையாது. அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டுமானால் 300 ரூபாய் ஆகும். மருத்துவக்கல்லூரி அமைந்துவிட்டது, இனி அதை மாற்ற முடியாது. அதற்காக, இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனையை மூடுவது எவ்விதத்தில் நியாயம்? நாகை மாவட்டத்துக்கென இந்த மருத்துவமனையைத்தான் நம்பியுள்ளனர். இதைத் தமிழக முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும். இல்லை யெனில் பெரும்போராட்டங் களை அரசு சந்திக்க வேண்டியிருக்கும்'' என்றார் ஆவேசத்துடன்.
நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் பாஸ்கரன், "நாகையில் 80% பேர் தினக்கூலி தொழி லாளிகள். இவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையையே முழுமையாக நம்பியிருக்கின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிச்சயம் வேண்டும். அதே நேரம், நல்லபடியாக செயல்பட்டுவந்த தலைமை மருத்துவ மனையை மூடுவது இரக்கமற்ற செயல். இணை இயக்குனர் அலுவலகம் நாகையில்தான் இருக்கிறது. அவர் கட்டுப்பாட்டில் 4, 5 டாக்டர்களுடன் இந்த மருத்துவமனை செயல்படலாம். இங்கு முதலுதவி அவசர சிகிச்சை அளிக்கும்படியாவது செய்யலாம்ல'' என்றார்.
இதற்கிடையில், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் தலைமையில், வர்த்தகர்கள், பொதுமக்களும், அடுத்து மீனவர்களும், அடுத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, "நாகை தலைமை மருத்துவமனையில் தற்போது குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளனைத்தும் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரி வந்தவுடன் நீண்ட காலமாக செயல்பட்டுவந்த மருத்துவமனையை முற்றிலுமாகச் சீரழிப்பது வேதனை அளிக்கிறது. நாகையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உடனடி சிகிச்சைக்காக வரக்கூடிய இடமாக நாகை அரசு மருத்துவமனை இருந்தது. இன்று அவசர சிகிச்சை மூடப்பட்டுவிட்டதால் கிராமப்புற மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்'' என்கிறார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க நாகை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டோம். அவர் ஊரிலில்லை எனப் பொறுப்பிலிருக்கும் டி.ஆர்.ஓ. பேசினார். "தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை இயங்கச் செய்துள்ளோம். முற்றிலுமாகக் கொண்டு செல்லவில்லை. அதோடு புதிய மருத்துவக் கல்லூரிக்கு போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள் என அனைத்து ஆயத்தப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் முழுமை அடையும்'' என்றார். மருத்துவமனை விவகாரத்தில், மக்களின் உயிரோடு விளையாடாமல் இருக்கவேண்டும் எனக் குமுறுகிறார்கள் பொதுமக்கள்.