Advertisment

ஈரோடு வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு வாக்காளர்களின் சான்றிதழ்!

EVKS

ரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமாகிய திருமகன் ஈவெரா ஜனவரி 4-ல் மறைந்ததையொட்டி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியென்பதால் இடைத்தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கவேண்டுமென அவர்களது தரப்பில் கோரப்பட, அதையேற்று தி.மு.க. காங்கிரஸுக்கு ஒதுக்கியது.

Advertisment

மறைந்த திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்குமென தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்பட, காங்கிரஸும் அவ்விதமே சிந்தித்ததால் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

erode

மறுபுறம் எடப்பாடி தரப்பில், வாசன் தரப்பை சமாதானம் செய்து அ.தி.மு.க. போட்டியிடுவதாக அறிவித்தது. பா.ஜ.க. அதற்கு அதிருப்தி தெரிவித்தது. தேர்தல் சின்னம் முதல் வேட்பாளர் யார் என்பதுவரை பல்வேறு இக்கட்டு களுடன் அ.தி.மு.க களமிறங்கியது. பா.ஜ.க.வோடான பஞ்சாயத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதில் இரட்டை இலை சின்ன

ரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமாகிய திருமகன் ஈவெரா ஜனவரி 4-ல் மறைந்ததையொட்டி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியென்பதால் இடைத்தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கவேண்டுமென அவர்களது தரப்பில் கோரப்பட, அதையேற்று தி.மு.க. காங்கிரஸுக்கு ஒதுக்கியது.

Advertisment

மறைந்த திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்குமென தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்பட, காங்கிரஸும் அவ்விதமே சிந்தித்ததால் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

erode

மறுபுறம் எடப்பாடி தரப்பில், வாசன் தரப்பை சமாதானம் செய்து அ.தி.மு.க. போட்டியிடுவதாக அறிவித்தது. பா.ஜ.க. அதற்கு அதிருப்தி தெரிவித்தது. தேர்தல் சின்னம் முதல் வேட்பாளர் யார் என்பதுவரை பல்வேறு இக்கட்டு களுடன் அ.தி.மு.க களமிறங்கியது. பா.ஜ.க.வோடான பஞ்சாயத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதில் இரட்டை இலை சின்னம் உறுதியாக, அடுத்து வேட்பாளர் யாரென்ற தடுமாற்றத்தையும் எடப்பாடி பழனிசாமி சமாளித்து, தென்னரசு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Advertisment

நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும், தே.மு.தி.க. தரப்பில் ஆனந்தனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தேர்தல் பணிக்குழு அமைப்பது முதல் பிரச்சாரம் வரை ஆரம்பம் முதலே தி.மு.க. கூட்டணியின் கையே ஓங்கியிருந்தது. வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் தி.மு.க. வாக்குச் சேகரிக்கத் தொடங்கியிருந்தது. தி.மு.க. தரப்பின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மா.செ.க்கள் என ஒரு பெரிய கூட் டமே காங்கிரஸுக்கு வாக்குச் சேகரித்து அசத்தியது. இதுபோக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் உதயநிதி, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் என நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்களின் பிரச்சாரமும் இளங்கோவனுக்கு வலுச்சேர்த்தது.

மறுபுறம், அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கினார். தி.மு.க.வைப் போலவே முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மா.செ.க்கள் என பெரும்படையை தேர்தல் பணிக்கு அ.தி.மு.க. திரட்டியிருந்தது. ஆனால், பெரும்பகுதி தொகுதி மக்களை தி.மு.க. ஏற்கெனவே புக் செய்திருந்ததால், வேறுவழியின்றி பக்கத்துத் தொகுதி ஆட்களைத் திரட்டி கூட்டம் காண்பித்தார் எடப்பாடி. வெற்றி கைநழுவுவது உறுதியானதால் மேடைகளில் தி.மு.க.வை வசைபாடினார். வாக்காளர்களை அடைத்துவைத்திருப்பதாக குற்றம்சுமத்தினார். அதேசமயம், பா.ஜ.க.வினரை ஆரம்பம் முதலே பிரச்சாரத்தில் தவிர்ப்பதில் தெளிவாக இருந்தார்.

பிரச்சாரம் நடந்த ஒரு மாத காலமும் ஈரோடு கிழக்கு தொகுதி பெரும் திருவிழாவைக் கண்டது. இரு தரப்பினராலும் பூத் வாரியாக வாக்காளர்கள் கவனிக்கப்பட்டனர். கடைசி நேரக் கவனிப்பும் வளமாக இருந்தது. அதன் எதிரொலியாக கிட்டத்தட்ட 75 சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர்.

மார்ச் 2-ஆம் தேதி 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தொடக்கம் முதலே தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க. வேட்பாளரைவிட 5000 வாக்குகள் அதிகம் பெற்றார்.

ww

8-ம் சுற்று நிலவரப்படி, காங்கிரஸ், அ.தி.மு.க.வை விட 38,565 வாக்குகள் அதிகம் பெற்று 60,919 வாக்குகளுடன் வெற்றியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது. அ.தி.மு.க.வோ 22,354 வாக்குகளுடன் வெகுவாகப் பின்தங்கியிருந்தது. இதேரீதியில் மிச்சமுள்ள சுற்றுக்களும் வாக்குகள் கிடைத்தால் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். வேட்பாளர் 75,000 வாக்குகள் முன்னிலைபெற, அ.தி.மு.க.வோ சிரமப்பட்டே தனது டெபாஸிட்டைப் பெறவேண்டிய நிலை ஏற்படும்.

இதை மெய்ப்பிப்பதுபோல் 5-வது சுற்று வாக்கு எண்ணிக் கையின்போது அ.தி.மு.க. தரப்பில் யாரும் உடனில்லாததால் விரக்தி யடைந்து, வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினார்.

கொங்கு மண்டலமே தனது கட்டுப்பாட்டில்தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருந்த நிலையில், தனது தலைமையை நிரூபிப்பதற்கான மற்றொரு வாய்ப்பாகக் கருதி இந்த இடைத்தேர்தலை எதிர்கொண்டார். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் களத்தில் இறக்கியும் 400 கோடியைச் செலவிட்டும் வெற்றியைப் பறிகொடுத்திருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர். இடைத் தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் ஜெயிப்பது வழக்கம் தானே என்று எடுத்துக்கொண்டாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 58,000 வாக்குகள் வரை பெற்ற அ.தி.மு.க., தற்போது அதைவிட மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அ.தி.மு.க. தென்னரசு வசிக்கும் பகுதியிலேயே 5000 ஓட்டு தி.மு.க. கூடுதலாக பெற்றுள்ளது.

அதேசமயம், தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரோ, முன்பைவிடவும் கணிசமான கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணிப்பது, தி.மு.க. ஆட்சிக்கு வாக்காளர்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழாக அமைந்திருக்கிறது.

nkn040323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe