தி.மு.க.வை திணறடிக்கும் சாம்சங்! கூட்டணி சலசலப்பு!

ss

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் விவகாரம், ஒருபக்கம் சுமூக முடிவை நோக்கி நகர்ந்தாலும், ஆளும்கட்சியின் நெருக்குதலால் போராட்டம் நசுக்கப்படுவதாக கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் வைத்துவருகின்றன.

இந்தப் போராட்டம் தொடர்பாக காஞ்சி புரம் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சார்ந்த தோழர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். "சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக, 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகின்றனர். இந்தத் தொடர் போராட்டம் 32 நாளைக் கடந்து நடந்து கொண்டிருந்த சமயத்தில் சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, கடந்த 16.9.2024 அன்று கைதுசெய்து பொய் வழக்கு பதிவுசெய்தனர். இதைக் கண்டித்து அக்டோபர் 1-ஆம் தேதி தொழிலாளர்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் என் மீதும், தொழிலாளர்கள் 900 பேர் மீதும் கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழில

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் விவகாரம், ஒருபக்கம் சுமூக முடிவை நோக்கி நகர்ந்தாலும், ஆளும்கட்சியின் நெருக்குதலால் போராட்டம் நசுக்கப்படுவதாக கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் வைத்துவருகின்றன.

இந்தப் போராட்டம் தொடர்பாக காஞ்சி புரம் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சார்ந்த தோழர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். "சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக, 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகின்றனர். இந்தத் தொடர் போராட்டம் 32 நாளைக் கடந்து நடந்து கொண்டிருந்த சமயத்தில் சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, கடந்த 16.9.2024 அன்று கைதுசெய்து பொய் வழக்கு பதிவுசெய்தனர். இதைக் கண்டித்து அக்டோபர் 1-ஆம் தேதி தொழிலாளர்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் என் மீதும், தொழிலாளர்கள் 900 பேர் மீதும் கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து நாங்கள் சி.ஐ.டி.யு. சங்கத்தைத் துவங்கினோம். ஆனால் அரசுத் தரப்பு சங் கத்தை பதிவுசெய்ய எங்களுடன் ஒத்துழைக்க வில்லை''” என்கிறார்.

ss

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சௌந்தர ராஜனோ, "சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 16 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் பண பலத்தில் அவர்களே உருவாக்கிய சங்கம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. தொழி லாளர்களின் உரிமைக்காக கடந்த ஜூன் மாதம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சாம்சங் தொழிலாளர்கள் தொடங்கினர். அன்றிலிருந்து அந்த நிறுவனத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் தொழிலாளர்களை தனித்தனியாக மிரட்டி வந்தனர். நியாயமான கோரிக்கையை வைத்து தனது உரிமைக்காக போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் மீது சட்டத்துக்குப் புறம்பாக பொய் வழக்கைப் பதிவுசெய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் போராடும் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர்'' என்கிறார்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொழிற் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளிகள் 650 பேர் கைதுசெய்யப்பட்டு சுங்குவார்சத்திரத்திலுள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபம், குரு மஹால் போன்றவற்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தேதி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வன்னியரசு, அர்ஜுன் ரெட்டி ஆகியோர் தொழிலாளர்களைச் சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வரிடம் எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில் “"தொழிலாளர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தொழிற்சங்கத்தினர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது சங்கத்தை பதிவுசெய்வதில் சட்டச் சிக்கல் உள்ளது''’என்கிறார்.

சாம்சங் நிறுவனமோ, “தொழிலாளர் களின் ஊதிய உயர்வு, உணவுப் பிரச்சனை, குளிர்சாதன பஸ் வசதி போன்ற 14 கோரிக்கை களில் 13 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள கமிட்டியே செயல்படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளான முத்துக்குமார், சௌந்தரராஜன் போன்ற வெளிநபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு விருப்பமில்லை’என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் பற்றி நம்மிடம் பேசிய சாம்சங் நிறுவனத் தொழிலாளி ஒருவர், “"நாங்கள் முன்வைத்த கோரிக்கையை பூர்த்திசெய்வதாக நிறுவனம் தெரிவித்த நிலையில் தற்போது முதற்கட்டமாக மாத சம்பளத்தில் ஐந்தாயிரம் இந்த மாதத்திலிருந்து உயர்த்தித் தருவதாகவும், வரும் மார்ச் மாதத்தில் சாம்சங் ஊழியர்களை வைத்து அவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் பூர்த்திசெய்வதாகவும் கூறியுள்ளது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்தால் நொய்டா வுக்கோ, ஆந்திராவுக்கோ நிறுவனம் மாற்றப் படும் என்ற ஒரு தகவல் வெளிவருகிறது. அப்படி நடந்தால், இங்கே வேலை செய்யும் 2000 தொழிலாளர்கள் மற்றும் ஆயிரம் மறைமுகத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்''’என்றார்.

தொழிலாளர்கள் கைது பற்றி காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “"போராட்டம் என்ற பெயரில் அத்துமீறி நடந்துகொள்வதால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. போராட்டத்தின்போது மணிகண்டன் என்ற எஸ்.எஸ்.ஐ. வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்பட்டார். இதனால் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் 7 பேரை நீதிபதி உடனடியாக பிணையில் விடுவித்தார் இரண்டு பேர் தலைமறைவாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தப் போராட்டம் அனுமதியின்றி தொடர்வதால் தற்போது தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்''” என்று தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியோர் இந்த விஷயத்தை தி.மு.க. கையாளும் விதத்தில் அதிருப்தியடைந்துள்ளனர். சங்கம் தொடங்குவது தொழிலாளர் அடிப்படை உரிமைதானே?… அதை மறுதலிப்பது எந்த வகையில் நியாயம்? தொழிலாளர் மைய நோக்கைவிடவும், கார்ப்பரேட் நலநோக்கில் அரசு செயல்படுவதாக விமர்சித்துவருவதால் கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ளது.

nkn121024
இதையும் படியுங்கள்
Subscribe