Advertisment

அரசு ஊழியரைத் தாக்கிய தி.மு.க.வினர்! - போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் சங்கம்

dd

மீபத்தில், எம்.பி. திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்காக வும், காவல் நிலையத்திற்குள் புகுந்து அடிதடியில் ஈடுபட்ட தற்காகவும் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்தச் சுவடு மறைவதற்குள், திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு வருவாய் ஆய்வாளரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பிரபாகரன். அங்குள்ள பச்சமலை அடிவாரம் நரசிங்கபுரத்திலுள்ள பட்டா

மீபத்தில், எம்.பி. திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்காக வும், காவல் நிலையத்திற்குள் புகுந்து அடிதடியில் ஈடுபட்ட தற்காகவும் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்தச் சுவடு மறைவதற்குள், திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு வருவாய் ஆய்வாளரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பிரபாகரன். அங்குள்ள பச்சமலை அடிவாரம் நரசிங்கபுரத்திலுள்ள பட்டா நிலங்களில், முன்னனுமதி பெறா மல், சிலர் இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்திவந்துள்ள னர். இதுகுறித்து பல புகார்கள் வந்த நிலையில், தாசில்தார் வனஜா அறிவுறுத்தலின் பேரில், வருவாய் ஆய்வாளர் பச்சைமலை அடிவாரப் பகுதிக்குச் சென்று ஆய்வுமேற்கொண் டுள்ளார். அங்கே ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிக்கொண் டிருந்த ஓட்டுநர் கந்தசாமியிடம் பணியை நிறுத்தக்கூறி, ஜே.சி.பி.யின் சாவி, கந்தசாமியின் செல் போனை வாங்கமுயன்றபோது, அங்கு வந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன், ஜே.சி.பி. உரிமையாளர் தனபால், கொத்தனார் மணி ஆகியோர் ஆய்வாளர் பிரபா கரனை தகாத வார்த்தைகளால் திட்டி, கழுத்தில் கடித்து, சரமாரியாகத் தாக்கிக் காயப்படுத்தினர். அவருடைய ஆதர வாளர்களும் கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ff

இந்தத் தாக்குதலில் வலி தாங்கமுடியாமல் கூச்சலிட் டுள்ளார் பிரபாகரன். பொது மக்கள் வருவதைப் பார்த்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 4 பேரும் அங்கி ருந்து தப்பிச்சென்றனர். பெரு மாள்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரபாகரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதித்த னர். இந்த சம்பவம் குறித்து வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் துறையூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து, ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக டிரைவர் தனபால், மணிகண்டன், கந்தசாமி ஆகியோரை கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலிடத்திற்கு தெரியவந்ததையடுத்து, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட மகேஸ்வரன் கட்சியிலிருந்து "சஸ்பெண்ட்' செய்யப் படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

திருச்சி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தப் பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, "இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை, கட்சியிலுள்ள முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு காரணமாக இத்தகையவர்களைக் கண்டுகொள்வ தில்லை. எனவே ஆய்வுக்குச் செல்லும் வருவாய் ஆய்வாளர்களின் பாது காப்பை அரசு உறுதிசெய்யவேண்டும். அரசு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்' என்று கோரிக் கை விடுத்துள்ளனர்.

nkn030623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe