தி.மு.க. வேட்பாளர்கள் யார்? கூட்டணி வேட்பாளர்கள் யார்? ஆளும்கட்சியின் அசுர வேகம்!

ss

"வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு!'’ என்ற இலக்குடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியோ, "அதுக்கும் மேல...'’ என்று உறுதிபட பேசியிருக்கிறார்.

இந்நிலையில், ‘"தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் யார் வேட்பாளர்?’ என்பதை 14 மாதங்களுக்கு முன்பாகவே அலசி ஆராய்ந்து, அடையாளம் கண்டு வைத்திருக்கிறது தி.மு.க.'’ என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட உ.பி.க்கள்.

எந்த அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து இப்போது பேசப்படுகிறது?

விருதுநகர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு வால், சிவகாசி மற்றும் விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிட வேண்டும்? யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும்? என்பது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது.

s

‘சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்க

‘சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு 1957 முதல் 2021 வரை நடைபெற்ற 15 தேர்தல்களில் 1971 மற்றும் 1989 ஆகிய இரண்டு தேர்தல்களில் மட்டுமே தி.மு.க. போட்டியிட்டது. கா.காளிமுத்துவும் பெ.சீனிவாசனும் சிவகாசி தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக தமிழ்நாடு சட்டமன்றம் சென்றனர். இத்தொகுதியில் தி.மு.க. வாக்கு வங்கி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதாலேயே, தொடர்ந்து போட்டியிடுவதைத் தவிர்த்துவந்தது.

நூற்றாண்டு விழா கண்ட சிவகாசி நகராட்சி, 100 வருடங்களில் 95 வருடங்கள் காங்கிரஸ் வசம் இருந்தது. 2011-2016ல் மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தது. சிவகாசி மாநகராட்சியானதும் 2022ல் நம்பிக்கை யுடன் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க. சங்கீதா இன்பம் தி.மு.க. மேயரானார். 2026 தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி 35 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.வை இங்கிருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

அப்படியென்றால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் சிட்டிங் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகனுக்கு சீட் இல்லையா? மக்களுடன் ஒட்டாத எம்.எல்.ஏ. என்று பெயரெடுத் திருக்கும் அசோகனின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றே பேச்சு அடிபடுகிறது. நாடார் சமுதாய வாக்கு வங்கியும்கூட, கடந்த தேர்தலைப் போல் அசோகனுக்குக் கை கொடுக்கும் மனநிலையில் இல்லை என்கிறார்கள்.

இன்னொரு காரணம், சிவகாசி தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் திட்டத்துடன் காய் நகர்த்திவரும் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் மோதி வெற்றிபெற தி.மு.க. வேட்பாளரை நிறுத்துவதே சரியாக இருக்கும். யாரைத் தேர்வு செய்யலாம்? மெஜாரிட்டி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மேயர் சங்கீதாவை சட்டமன்றத் தேர்தல் களத்தில் இறக்கிவிட வேண்டியது தான். எங்கு செல்வதாக இருந் தாலும், கணவரின் நிழலிலேயே பயணிப்பவர்களுக்கு மத்தியில், முடிந்தமட்டிலும் தனித்து இயங்கும் சங்கீதாவே சரியான தேர்வாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்மையாக அரசியல் பண்ணிவரும் சங்கீதாவால், அதிரடி அரசியல்வாதியான ராஜேந்திரபாலாஜியைச் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

சிவகாசியைப் பறித்த பிறகு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியைக் கொடுப்பது? பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் தொகுதியைக் கொடுத்துவிட வேண்டியதுதான். சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை எப்படி திருப்திப் படுத்துவது? விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

இந்நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சி இணைக்கப்பட்டுவிட்டது. ரோசல் பட்டி, சிவஞானபுரம், பாவாலி ஊராட்சிகளும் இணைகின்றன. அதனால், விருதுநகர் நகராட்சிக்கு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவரால்தான் சேர்மன் ஆகமுடியும் என்ற நிலை மாறிவிட்டது. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை விருதுநகர் நகர்மன்றத் தலைவர் ஆக்கிவிட வேண்டியதுதான். பின்னாளில் விருதுநகர் மாநகராட்சியாகி ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மேய ரானால், அதிருப்தி எல்லாம் காணாமல்போய்விடும். அதேநேரத்தில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சொக்கரின் மகன் ஸ்ரீராஜா சொக்கரை அக்கட்சி தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும். யாரை விருதுநகரில் வேட் பாளராக நிறுத்தவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி பார்த்துக்கொள்ளும்’ என்றெல் லாம் பேசியிருக்கின்றனர்.

இதேரீதியில்தான், தி.மு.க. வேட்பாளராக யாரை நிறுத்து வது? கூட்டணிக் கட்சி வேட் பாளராக யாரைக் களமிறக்கி னால் சரியாக இருக்கும்? எனப் பல மாவட்டங்களிலும் தி.மு.க. மா.செ.க்கள் ஆலோசனை நடத்தி, பட்டியலே தயாரித்து விட்டார்களாம்.

எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்வதென்று அ.தி.மு.க. போன்ற பிரதான கட்சிகள் திணறிவரும் நிலையில்... ஆளும்கட்சியான தி.மு.க. அசுர வேகத்தில் பயணிக்கிறது.

nkn120325
இதையும் படியுங்கள்
Subscribe