விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை அருகில் வள்ளலார் குடில் வைத்து ஆதரவற்ற முதியோர்கள், சிறுவர்களைப் பராமரித்து வருகிறார் இளையராஜா. இவருக்கு சொந்த ஊர் விருத்தாச்சலம் அருகிலுள்ள மணவாளநல்லூர். அப்பகுதியில் நிலம் மற்றும் செங்கல் சூளை உள்ளது. கடந்த எட்டாம் தேதி தனது நிலத்தில் பணிகளைப் பார்த்துவிட்டு தனது காரில் ஏறிய போது அவரை ஆறு பேர்கொண்ட கும்பல் தாக்க முயன்றது. அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல கார் கதவைத் திறக்கும்போது துப்பாக்கி யால் ஒருவர் சுட, இளையராஜாவின் முதுகுப் புறம் கீழ் தொடையில் குண்டு பாய்ந்தது. சுதாரித்துக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்ததும் கார் கண்ணாடியை இன்னொரு குண்டு துளைக்க, அதன் சிதறல்கள் இளையராஜாவின் தோள், கழுத்துப் பகுதிகளில் காயத்தை ஏற்படுத்தியது. அந்த பதட்டத்திலும் காரை தானே ஓட்டி தப்பித்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/viruthachalam_3.jpg)
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று இளைய ராஜாவிடம் விசாரித்தனர். "வேளாண்மை சம்பந்த மான ஒரு நிகழ்ச்சிக்காக எனது நிலத்தைப் பார்க்க வந்த அதிகாரிகளிடம் பேசி அனுப்பிவிட்டு, வீட்டுக்கு புறப்பட காருக்கு அருகில் சென்றேன். அப்போது மணவாளநல்லூரை சேர்ந்த ராஜ சேகர் மகன்கள் ஆடலரசன், புகழேந்தி ராஜா உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் மூன்று பைக் கில் வந்து என்னைச் சூழ்ந்துகொள்ள, ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். அதைப் பார்த்ததும் நான் காரில் ஏறித் தப்ப முயன்றேன். அதற்குள் ஆடலரசன் துப்பாக்கி யால் சுட்டதில் என் முதுகுப்புறம் கீழ்த்தொடை யில் பாய்ந்தது. மற்றொருவர் கையிலும் துப்பாக்கியைப் பார்த்து, பதட்டத்தோடு காருக்குள் ஏறி கதவை மூடியதும், கார் கண்ணாடி வழியாக என்னை நோக்கிச் சுட்டதில், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையெல்லாம் மீறி காரிலேயே தப்பிவந்து அட்மிட் ஆகியுள்ளேன்'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இளையராஜா.
இதையடுத்து டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைத் தீவிரமாகத் தேடத்தொடங்கி னர். இளையராஜா தற்போது சென்னை ராமச் சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரு கிறார்.
குடும்ப முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்தோம். மணவாளநல்லூரை பூர்வீகமாகக்கொண்ட மறைந்த தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு நாலு மகன்கள். அதே ஊரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு ஆறு மகன்கள். கலியபெருமாளுக்கும், எம்.எல்.ஏ. தியாகராஜனுக்கும் ஏற்பட்ட புகைச்சல் தான் தற் போது துப்பாக்கிச்சூடு வரை வந்துள்ளது. கலிய பெருமாளின் மகன் ராஜசேகர், பணி ஓய்வுபெற்ற வர் இவரது மனைவி மங்கையர்க்கரசி. இவர்களது மகன்கள் தான் புகழேந்தி ராஜா, ஆடலரசன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/viruthachalam1_1.jpg)
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மங்கையர்க்கரசி போட்டியிட்டுள்ளார். அதேபோல் தி.மு.க. சார்பில் எக்ஸ் எம்.எல்.ஏ. தியாகராஜன் மகன் நீதிராஜனும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். நீதிராஜன் வெற்றிபெற அவரது உடன்பிறந்த தம்பி இளைய ராஜா தேர்தல் பணி செய்துள்ளார். வெற்றிபெற்ற பிறகு இரு தரப்பினருக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளன. இதில் இளையராஜா தரப்பு, ராஜசேகர் குடும்பத்திற்கு எதிராக ஊருக்குள் பலரையும் களமிறக்கியதாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்ட ஆடலரசு மீது கடும் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிர்பிழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் இளையராஜா மீது ஆடலரசு புகாரளித்து வழக்கு போடப்பட்டுள்ளது. இதை யடுத்து இளையராஜாவை தீர்த்துக்கட்டுவதற்காக ஆடலரசு, அவரது சகோதரர் புகழேந்தி ராஜா மற் றும் அவரது நண்பர்கள் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
சம்பவம் நடந்த மறுநாளே சிதம்பரம் சாலையில் வாகன சோதனையில் சிக்கிய ஒரு கும்பல் போலீசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயல, அவர்களைச் சுற்றிவளைத்ததில், புகழேந்தி ராஜா, ஆடலரசு, விஜயகுமார், சரவணன், சதீஷ், அருண்குமார், வெங்கடேசன், சூரிய பிரகாஷ் ஆகிய 8 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், இரண்டு இரும்புக் கம்பி கள், ஒரு கார், இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர். முன்விரோதப் பகை காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டனர். இதற்காகவே 3 லட்ச ரூபாய் செலவில் இரண்டு துப்பாக்கிகள் வாங்கப்பட்டன. விஜயகுமார் சென் னையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் மகன் முகமது யூனிஸ் என்பவர் அறிமுகமாக, அவர் மூலமாக இரண்டு துப்பாக்கி கள் வாங்கியிருக்கிறார்கள். இதையடுத்து தனிப் படை போலீசார் சென்னைக்கு சென்று முகமது யூனிஸை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த சோட்டா என் பவரிடமிருந்து துப்பாக்கிகளை தவணை முறையில் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒன்பது பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
புகழேந்தி ராஜா, ஓ.பி.எஸ். அணியின் கடலூர் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செய லாளராக பதவி வகித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உள்ளதாக ஓ.பி. எஸ். அறிவித்துள்ளார். புகழேந்தி ராஜா, ஆட லரசு ஆகியோரின் பெற்றோர் இருவரும் தலை மறைவாகிவிட்டனர். போலீசாரின் விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/viruthachalam-t.jpg)