Advertisment

தி.மு.க. Vs  அ.தி.மு.க. தேர்தல் களத்தில் மாநில உரிமைகளுக்கான யுத்தம்!

salin-eps


ழக்கமான தேர்தல் அதிகார அரசியலைக் கடந்து, ‘மாநில உரிமைகளை’ யார் பாதுகாக்கப் போகிறார்கள் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகத் தேர்தல் களம். ஒன்றிய அரசு என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அரசா? அல்லது தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்கும் அரசா? என்பதே இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

Advertisment

கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசின் பல முக்கிய முடிவுகளுக்குத் தமிழ்நாடு அரசு பெரிய எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, நீட் தேர்வை அனுமதித்தது, உதய் மின்திட்டத்தை ஏற்றுக்கொண்டது, ஜி.எஸ்.டி., ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்தது என, மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு  அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு உதவியது. மாநில உரிமைகள் பாதிப்புக்குள்ளான போதெல்லாம் அ.தி.மு.க.வின் மௌனம், அமைதியான ஒப்புதலாகவே’பார்க்


ழக்கமான தேர்தல் அதிகார அரசியலைக் கடந்து, ‘மாநில உரிமைகளை’ யார் பாதுகாக்கப் போகிறார்கள் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகத் தேர்தல் களம். ஒன்றிய அரசு என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அரசா? அல்லது தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்கும் அரசா? என்பதே இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

Advertisment

கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசின் பல முக்கிய முடிவுகளுக்குத் தமிழ்நாடு அரசு பெரிய எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, நீட் தேர்வை அனுமதித்தது, உதய் மின்திட்டத்தை ஏற்றுக்கொண்டது, ஜி.எஸ்.டி., ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்தது என, மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு  அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு உதவியது. மாநில உரிமைகள் பாதிப்புக்குள்ளான போதெல்லாம் அ.தி.மு.க.வின் மௌனம், அமைதியான ஒப்புதலாகவே’பார்க்கப்பட்டது. 

Advertisment

இது குறித்து விவாதிக்கும் அரசியல் விமர்சகர்கள், "2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஒன்றிய அரசுடன் உறவாடும் முறையில் மாற்றம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். ஒத்துழைப்பு என்ற பெயரில் மாநில நலன்களை விட்டுக்கொடுத்துத் தலையாட்டாமல்; எதிர்ப்பை சட்டபூர்வமாகவும், நிறுவனரீதியான போராட்டமாகவும் அணுகும் முறையைக் கையாண்டது தி.மு.க. அரசு.   

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, "பிஎம்ஸ்ரீ' திட்டத்தில் பள்ளிகளை இணைத்தால் மட்டுமே "சமக்ரா ஷிக்ஷா அபியான்' திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நிபந்தனை விதித்தது. ஆனால், பள்ளிக் கல்வி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே உண்டு என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதில் தி.மு.க.வின் உரிமைக்குரல் வெளிப்பட்டது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

"பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றுவது உள்பட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காமல் காலதாமதம் செய்துவந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது தமிழக அரசு. "மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்தது தவறானது, சட்டத்திற்குப் புறம்பானது' என்று  உச்சநீதிமன்றம்  அளித்த  தீர்ப்பு, தி.மு.க.வின் போராடும் குணத்தை வெளிப்படுத்தியது'' என்கிறார்கள் கல்வியாளர்கள். 

இதுமட்டுமல்ல, நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப் பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்' என்று அழுத்தமாக தமிழக அரசு வாதிட்டத்தில் ஒன்றிய அரசே ஒருகணம் திகைத்துப்போனது. 

ஆட்சியிலிருந்தபடியே ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணுகுமுறையை தி.மு.க. கையாண்டு வருவதும், "ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடு வதும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதற்கான தி.மு.க.வின் முக்கிய முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.  இந்தித் திணிப்பு, நிதிப்பகிர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்களில் மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வியெழுப்பும் மாநிலமாக தமிழ்நாடு மாறியிருப்பது, கடந்த ஐந்து ஆண்டுகளின் மிகமுக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.  

ஆக, ஒன்றிய மோடி அரசின் முடிவுகளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. ஆட்சிக்கால தமிழ்நாடு, அந்த முடிவுகளைக் கொள்கை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கேள்விக் குள்ளாக்கும் தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கால தமிழ்நாடு என இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளோடு தற்போதைய தேர்தல் களம் தயாராகிவருகிறது.  

இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடே இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.  இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை "தமிழ்நாடு ஸ்ள் என்.டி.ஏ' என்று சுட்டிக்காட்டிவருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது ஒரு கொள்கை யுத்தம் எனவும் தி.மு.க.வினர் குறிப்பிடுகின்றனர்.  

இதற்கு நேர்மாறாக "தேசிய நலன்', "ஒன்றிய அரசுடனான ஒத்துழைப்பு' போன்ற வாதங்களை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.  எனினும், கடந்த காலங் களில் அ.தி.மு.க. அரசு அளித்த இத்தகைய ஒத்துழைப்பால் மாநிலத்தின் உரிமைகள் எந்த அளவிற்குப் பறிக்கப்பட்டன என்பதும், தற்போது தி.மு.க. ஆட்சியில் அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதுமே அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. அந்த வகையில் வருகிற சட்டமன்றத் தேர்தல், நலத் திட்டங்களுக்காக அரசைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக மட்டும் இருக்கப்போவதில்லை. மாறாக, ’தமிழ்நாடு தன்னைத் தானே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளப்போகிறது?’ என்ற அடிப்படை அரசியல் கேள்விக்கான பதிலைத் தேடும் களமாகவே இருக்கப்போகிறது. 

அந்த வகையில், இந்த ‘"மாநில உரிமை யுத்தமே’ 2026 தேர்தல் களத்தில் மிகப்பிரதானமான இடத்தைப் பிடித்திருக்கிறது' என்கிறது உளவுத்துறையின் சர்வே! 

nkn070226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe