சென்னை
சென்னை மாநகராட்சியின் 188-வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளரான மடிப்பாக்கம் செல்வம், அவரது கட்சி அலுவலகத்திற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தி.மு.க. வட்டாரத்தில் திடுக்கிடலை ஏற்படுத்தி யுள்ளது.
கொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்துக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு ரவுடி பேபின் மற்றும் சமீபத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட மயி லாப்பூர் ரவுடி சிவக்குமார் ஆகியோருடன் மடிப்பாக்கம் ராம் நகரில் நிலம் தொடர்பான மோதல் இருந்தது. செல்வம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக, இந்தக் கொலை, தொழில் போட்டியால் நடைபெற்ற ஒன்றா?… தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதவர்கள், அரசியல் காரணங்களால் நடத்திய கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் ரீதியில் செம்பாக்கம் ராதாகிருஷ்ணனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. செம்பாக்கம் ராதாகிருஷ்ணன் என்கிற ராதா சமீபத்தில் நடந
சென்னை
சென்னை மாநகராட்சியின் 188-வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளரான மடிப்பாக்கம் செல்வம், அவரது கட்சி அலுவலகத்திற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தி.மு.க. வட்டாரத்தில் திடுக்கிடலை ஏற்படுத்தி யுள்ளது.
கொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்துக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு ரவுடி பேபின் மற்றும் சமீபத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட மயி லாப்பூர் ரவுடி சிவக்குமார் ஆகியோருடன் மடிப்பாக்கம் ராம் நகரில் நிலம் தொடர்பான மோதல் இருந்தது. செல்வம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக, இந்தக் கொலை, தொழில் போட்டியால் நடைபெற்ற ஒன்றா?… தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதவர்கள், அரசியல் காரணங்களால் நடத்திய கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் ரீதியில் செம்பாக்கம் ராதாகிருஷ்ணனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. செம்பாக்கம் ராதாகிருஷ்ணன் என்கிற ராதா சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
செம்பாக்கம் ராதாவுக்கு பிரபல ரவுடி சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. 2022, நக்கீரன் ஜனவரி 26-28 இதழில், “"காவலர் ஆணையம்! போலீஸ் இனியாவது திருந் துமா?'’கட்டுரையில் ரவுடி மதுரபாலா மற்றும் சம்பவ செந்தில் பற்றிய செய்தி வெளியானது. மேலும் தி.மு.க. பிரமுகர் ஒருவரை, கொலை செய்யும் நோக்கில் பார்க் ஹோட்டலில் மதுரபாலாவும் சம்பவசெந்திலும் சந்தித்து ஸ்கெட்ச் போட்டு சதித் திட்டம் தீட்டிய விவகாரம் பற்றியும் அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது.
தேர்தல் பணிக்காக சால்வை அணிவிப்பதுபோல வந்த ஆறு பேர் கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட் டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில், இந்த வழக்கில் சி.சி.டி.வி. துணை யுடன் கொலையாளிகள் ஆறு பேரை அடையாளம் கண்ட போலீசார், வடசென்னையைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவனின் ஆட்களைத் தேடிவருகின்றனர். மேலும், சமீபத்தில் கொலையான வக்கீல் ராஜேஷின் கொலை விவ காரத்திலும் இதே கும்பல்தான் ஈடுபட்டதென காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையிலும் சென்னையிலும் தி.மு.க. பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தை அதிரச் செய்துள்ளது. உளவுத்துறை போலீசார் சரியான முறையில் செயல்பட்டு, இனியும் இதுபோன்ற கொலைகள் நடக்காமல் தடுக்கவேண்டும்.
நெல்லை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பான கட்டத்திலிருக்கும் சூழலில், நெல்லையின் பாளையில் நடந்த அரசியல் படுகொலை, அரசியல் வட்டாரத்தை உலுக்கியிருக்கிறது. பாளையின் தெற்கு பஜார் பகுதியை ஒட்டிய 35வது வார்டின் உச்சினி மாகாளி அம்மன் கோவிலைச் சேர்ந்த அபேமணி, தி.மு.க.வில் அந்த வார்டு கழகச் செயலாளராக இருப்பவர். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தன்னு டைய ஒர்க் ஷாப் வரு மானத்தின்மூலம், குடும் பத்தைக் கவனித்துக் கொண்டு, மக்கள் பணி களையும் செய்துவந்த தால் மக்களிடையே பிரபலமாக வளர்ந்திருக் கிறார். அதுமட்டுமல் லாது, தி.மு.க.வின் மாநகர மா.செ.வும் பாளை எம். எல்.ஏ.வுமான அப்துல் வகாப்பின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் இருந்துள்ளார். அவருடைய செல்வாக்கை அறிந்த மா.செ. வும், மாநகரக் கவுன்சிலர் வேட்பாளருக்கு அபே மணியை சிபாரிசு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், வார்டு வேட்பாளர் ஒதுக்கீட்டில் 35வது வார்டு பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், அபே மணி, தன் தாயாரை வேட்பாளராக முன்னிறுத்த, அதற்கும் ஒப்புதல் கிடைத்ததால் ஆரம்பகட்ட அறிமுக வாக்குச் சேகரிப்பை வீடு வீடாக நடத்தியிருக்கிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 29-ம் தேதி பாளை பஜாரிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பியிருக்கிறார் அபே மணி. அவரது வீட்டின் அருகே வரும் போது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல், அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டுத் தப்பியிருக் கின்றனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாயின் கண்ணெதிரிலேயே அபே மணி உயிரிழந்துள்ளார். சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்துவந்த மாநகரக் கமிஷனரான துரை குமார், மேற்கு மண்டல துணை கமிஷனர் சுரேஷ் குமார் உள் ளிட்ட போலீஸ் அதி காரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அபே மணியை வெட்டிச் சாய்த்த கும்பல், கொக்கிரகுளம் வழியாக தென்காசிச் சாலையில் விரைந்ததை சி.சி.டி.வி. காட்சிகள் காட்டிக்கொடுத்ததால் விசாரணையில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர மா.செ. வும் எம்.எல்.ஏ.வு மான அப்துல் வகாப், எக்ஸ் எம்.எல்.ஏ. எல்.எஸ் .லட்சுமணன் உள்ளிட்டோர் அபே மணியின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். "அபே மணியின் தாயார் வேட்பாளராகக் களமிறங் கியது பிடிக்காமல் கொலை நடந்ததா அல்லது டாஸ்மாக் பார் ஏலம் தொடர்பான பிரச்சனைகளா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. வெளி யூரிலிருந்து வாடகைக் கொலையாளிகள் வர வழைக்கப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது'' என் கின்றனர் தனிப்படையினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தொடக்கத்திலேயே நடந்த முதல் அரசியல் படுகொலை அரசியல் வட்டாரத்தை அலர்ட்டில் வைத்திருக்கிறது.