றிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் நடத்த முயற்சிப்பதாக ராஜ்பவன் மீது குற்றம்சாட்டுகிறார்கள் கோட்டை அதிகாரிகள். அரசுக்குத் தெரியாமலே அரசாங்கத்தில் கவர்னர் தலையிடுவது ஆளும் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

stalinதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மாவட்டங்களுக்கு செல்லும்போது மாவட்ட கலெக்டர் உள்பட முக்கிய அதிகாரிகள் பலரையும் அழைத்து விவாதிக்கிறார். கவர்னரின் இத்தகைய நடவடிக்கைகள், பல்வேறு சட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகார மில்லை; மாநில சுயாட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது அதிகார எல்லை மீறல்’ என குற்றம் சாட்டுவதுடன் அதனை கண்டித்து கவர்னரின் சுற்றுப்பயணத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது தி.மு.க.

இந்த நிலையில், கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் பணிகளைத் தடுக்க முயன்றால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உண்டு என தி.மு.க.வை குறிவைத்து எச்சரித்து அறிக்கை வெளியிட்டது ராஜ்பவன். மாநில சுயாட்சிக்கு சவால்விடும் கவர்னரின் ஆய்வுப்பணிகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய ஆளும் கட்சி அமைச்சர்களோ, "தமக்குள்ள சட்ட அதிகாரத்தின்படியே ஆளுநர் செயல்படுகிறார். அவரது சுற்றுப்பயணத்தில் எந்தத் தவறும் இல்லை'‘என சாமரம் வீசுகின்றனர். ஆனால் உள்ளுக்குள், கவர்னருக்கு எதிராக எதையும் செய்ய முடியாத ஆதங்கம் கோப மாக வெடித்தபடிதான் இருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே வாதப் பிரதிவாதங்கள் பலமாக எதிரொலிக்கின்றன என்கிற கோட்டை அதிகாரிகள் நம்மிடம், ‘’""டெல்லியில் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற பன்வாரிலால் புரோகித், மாநாடு முடிந்தும் 2 நாள் டெல்லியில் தங்கியிருந்தார். அப்போது பிரதமர் மோடி-புரோகித் சந்திப்பு நடந்தது. பிரதமர் அலுவலக அதிகாரிகளும் உடனிருந்தனர். அதில், தமிழகத்தின் ஆட்சி சூழல், அரசியல் சூழல் இரண்டையும் கவர்னரிடம் கேட்டறிந்தார் மோடி. "மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவது குறித்துதான் மாவட்டங்களில் ஆய்வு செய்கிறேன். அதற்கு எதிர்க்கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்கிறது. கறுப்புக்கொடிகளுக்கு பின்னணியில் ஆளும் கட்சியின் ஆதரவு இருக்கலாமென சந்தேகப்பட வேண்டியுள்ளது'’என தெரிவித்திருக்கிறார் புரோகித்.

Advertisment

governor-modi

இதுபற்றி தனது அதிகாரிகளுடன் விவாதித்த மோடி, கவர்னருக்குரிய அதிகாரத்தை தேவைப்படும்போது பயன்படுத்துங்கன்னு அறிவுறுத்தியிருக்காரு. சென்னை திரும்பிய கவர்னர், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுக்கிறார். அவரது ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்ள மாவட்ட கலெக்டருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டுமென தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிடுகிறார் கவர்னரின் செகரட்டரி ராஜகோபால். அதன்படி கலெக்டருக்கு உத்தரவிடுகிற கிரிஜா, ஆய்வுப்பணிகள் முறையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் ஃபாலோ பண்ணுங்கள் என வருவாய் நிர்வாக ஆணை யரையும் கேட்டுக்கொள்கிறார். ஆனால், இந்த விசயம் முதல்வர் எடப்பாடிக்கோ வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாருக்கோ தெரிவிக்கப்படவில்லை. நாமக்கல்லுக்கு கவர்னர் வருவதையறிந்து கறுப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் தி.மு.க. அனுமதி கேட்டபோதுதான், கவர்னரின் விசிட்டே அரசுக்குத் தெரிகிறது.

epsமேலும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடக்கக்கூடாது என கலெக்டருக்கு ஒரு உத்தரவும் பறந்துள்ளது. அதற்கேற்ப தி.மு.க.வினரை முன்னெச்சரிக்கையாக கைதுசெய்ய திட்ட மிட்டனர். ஆனால், காவல்துறை ஒத்துழைக்க வில்லை. இதனால் ராஜ்பவனில் டென்ஷன். இந்த நிலையில், நாமக்கல்லில் கவர்னரின் கான்வாய் நோக்கி கறுப்புக்கொடி வீசப்பட, 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் அவரது கோபம் கலெக்டரிடம் வெடித்திருக்கிறது. இதனையடுத்தே, கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்ய முடிவெடுத்து சிறையில் தள்ளினர்.

Advertisment

இவை எதுவுமே, கோட்டையிலுள்ள முதல்வருக்கோ அமைச்சர்களுக்கோ தெரிவிக்கப்படாமலே நடந்தது. தி.மு.க.வினர் ரிமாண்ட் செய்யப்பட்டதை அறிந்து டென்ஷனான மு.க.ஸ்டாலினுக்கு, ஆளும்கட்சிக்கு இதில் தொடர்பில்லை. எல்லாம் ராஜ்பவன் உத்தரவு என தெரி விக்கப்பட்ட நிலையில்தான், கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற முழக்கத்துடன், ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார். எதிர்க்கட்சி தலைவரை ரிமாண்ட் செய்யும் துணிச்சல் ஆளும்கட்சிக்கு கிடையாது என்ப தால்தான் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சேர்த்து எச்சரிக்கை செய்யும் வகையில் 7 ஆண்டு சிறைத்தண்டனை அறிவிப்பை வெளியிட்டது ராஜ்பவன். அதாவது, ஆளுநர் மாளிகையை பாதுகாக்க மாநில அரசு அக்கறை காட்டவில்லை என முடிவு செய்து ராஜ்பவனே அதிகாரத்தை கையிலெடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது. அறிவிக்கப் படாத கவர்னர் ரூலை அமல்படுத்த முனைகிறது ராஜ்பவன்''‘என சுட்டிக்காட்டுகின்றனர்.

கவர்னரின் போக்கு குறித்து, தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசியபோது,"வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குரிய இடங்கள் கிடைக்காது என பா.ஜ.க. தலைமைக்கு ஏற்கனவே சொல்லியுள்ளது மத்திய உளவுத்துறை. பா.ஜ.க.வை விட்டு நழுவும் இடங்கள் காங்கிரசுக்கு சாதகமாகலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவில் வலுவான மாநில கட்சிகளின் ஆதரவில் காங்கிரசுக்கு கணிசமான வெற்றி கிடைத்துவிடக்கூடாது என்பதாலும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரசை வெளியேற்ற தி.மு.க.வை வலியுறுத்தியது பாஜக. ஆனால், தி.மு.க. கேட்கவில்லை. அதனால் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்படுத்த, மினி எமர்ஜென்சி ரேஞ்சுக்கு ராஜ்பவன் மூலமாக எச்சரிக்கை செய்கிறது பா.ஜ.க. தலைமை''‘என விவரிக்கிறார்.

இதற்கிடையே உள்துறை, நிதித்துறை, தொழில்துறை உள்பட முக்கியத் துறைகளில் ராஜ் பவன் தலையிட்டு பல்வேறு கேள்விகள் கேட்ப தாகவும், அதற்கேற்ப உத்தரவுகள் பிறப்பிப்பதாகவும் எடப்பாடி அரசு அதிருப்தியடைந்திருக்கிறது. இது பற்றி சீனியர் அமைச்சர்கள் கோபம் காட்டிய போது, ""பேரலல் கவர்மெண்டை நடத்த அவர்கள் நினைக்கிறார்கள். என்ன செய்வது? பல விசயங் களுக்காக அமைதியாக இருக்க வேண்டியதிருக் கிறது. பொறுமையாக இருங்கள். கோபப்படுவதால் எதுவும் சரியாகாது'' என சமாதானம் செய் திருக்கிறார் எடப்பாடி. ஆனால், ""ராஜ்பவன் மீதான கோபம் எங்களுக்கு அதிகரித்தபடியே இருக்கிறது'' என்கிறார்கள் அமைச்சர்களோடு தொடர்புடைய அ.தி.மு.க. பெருந்தலைகள்.

-இரா.இளையசெல்வன்

ப.சி. உறவினர் கொலை! திகில் பின்னணி!

pc-releationகாங்கிரசின் சீனியர் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினர் திருப்பூர் சிவமூர்த்தி படுகொலை செய்யப்பட்ட, அவரது உடலை ஓசூர் கெலவரப்பள்ளி அணையி லிருந்து போலீசார் மீட்டுள்ளனர். நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகளை திருமணம் முடித்தவர்தான் இந்த சிவமூர்த்தி. திருப்பூரில் சி.எஸ். கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பனியன் கம்பெனி நடத்தி வந்த சிவமூர்த்தி கொலை யானதன் பின்னணி குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நம்மிடம் விளக்கினர். “

""சிவமூர்த்தியின் அத்தை பத்மினி மீது, ஓட்டல் அபகரிப்பு வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில்... சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார் பத்மினி. பனியன் ஏற்றுமதி நிறு pc-releationவனங்களுக்கு ஆர்டர் எடுத்துக் கொடுக்கும் பையிங் ஏஜெண்டான விமலுக்கும் சிவமூர்த்திக்கும் பதினைந்து வருட பழக்கம். அடிக்கடி டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு ஜாலி டூர் அடிப்பார்கள். சிவமூர்த்திக்கும் அவரது பனியன் கம்பெனியில் வேலை செய்யும் புவனேஸ்வரிக்கும் இல்லீகல் காண்டாக்ட். இது புவனேஸ்வரியின் கணவர் சேத்து மடை மூர்த்திக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்த நிலையில்தான் தொழில்ரீதியாக நட்டமடைந்து கடனாளியான விமல், சிவமூர்த்தி யிடம் பண உதவி கேட்டபோது மறுத்திருக்கிறார்.

ஆத்திரத்தில் இருந்த சேத்துமடை மூர்த்தி, கடனில் தத்தளித்த விமல் ஆகிய இருவரின் கிரிமினல் மூளை வேலைசெய்ய... கூட்டாளிகளான மணிபாரதி, கவுதமன் துணையோடு சிவ மூர்த்தி கதையை முடித்து, ஆற்றில் வீசிவிட்டனர்''’என்றார்கள். சிவமூர்த்தி உடலுக்கு ப.சி. இறுதி மரியாதை செலுத்தினார்.

-அருள்குமார்