Advertisment

தி.மு.க. பிரமுகர் வழக்கில் திடீர் திருப்பம்! -திருவண்ணாமலை திடுக்!

ff

டந்த டிசம்பர் 27ஆம் தேதி திரு வண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த திருவண்ணா மலை மாவட்டம், தேசூர் காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதி கன்னத்தில் அறைந்தார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினரான ஸ்ரீதரின் துணைவியார் சிவசங்கரி. மேலும், ஸ்ரீதர், ராஜேஷ் ஆகியோரும் ஆய்வாளரைத் தாக்கினர். இதுகுறித்து ஆய்வாளர் தந்த புகாரின்கீழ், ஸ்ரீதர், சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் என மூவர் மீது நகர காவல்நில

டந்த டிசம்பர் 27ஆம் தேதி திரு வண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த திருவண்ணா மலை மாவட்டம், தேசூர் காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதி கன்னத்தில் அறைந்தார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினரான ஸ்ரீதரின் துணைவியார் சிவசங்கரி. மேலும், ஸ்ரீதர், ராஜேஷ் ஆகியோரும் ஆய்வாளரைத் தாக்கினர். இதுகுறித்து ஆய்வாளர் தந்த புகாரின்கீழ், ஸ்ரீதர், சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் என மூவர் மீது நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான செய்தியை ஏற்கெனவே நக்கீரனில் வெளியிட்டி ருந்தோம்.

Advertisment

tt

இவ் வழக்கில் கைதாகாமல் தப்புவதற்காக ஸ்ரீதரும், அவ ரது மனைவியும் தலைமறைவாக இருந்துவருகின்றனர். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஸ்ரீதர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.

இரண்டாவது முறையாக ஜனவரி 12ஆம் தேதி முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார் ஸ்ரீதர். இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்காக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆஜராகி 45 நிமிடங்கள் வாதாடினார். அப்போதும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு, ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் அன்பழகன், "காவல்துறை தரப்பில் விசாரணை முழுவதுமாக முடிந்துவிட்டது. என் கட்சிக்காரர் சமுதாயத்தில் முக்கியமானவர், அவர்மீது இதற்குமுன் எந்த குற்றவழக் கும் இல்லை. குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரும் இல்லை. அவரால் வழக்கில் எந்த தாக்கத்தையும் செலுத்த முடியாது. அதனால் கருணை கூர்ந்து என் கட்சிக் காரருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்'' என்று வாதிட்டார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, ஆய்வாளர் காந்திமதியின் கணவர் சரவணன், பா.ஜ.க. வழக்கறிஞர் சங்கர் மூலமாக நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். இறுதியில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். நம்மிடம் பேசிய சர வணன், "தாக் கப்பட்ட என் மனைவி மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார். எங்க கோவிலுக்குள்ள போலீஸ் நாய்கள யார் உள்ள வரச்சொன்னதுன்னு சொல்லி தாக்கியிருக்காங்க. என் மனைவி இதை சொல்லி அழுதார்.

அவமானத்தில் பணிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார். தாக்கியவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காததால் தான் நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளேன்'' என்றார்.

"இந்த வழக்கில், தி.மு.க. பிரமுகரான ஸ்ரீதர், தனக்காக வாதாட அ.தி.மு.க. வழக்கறிஞரை அழைத்திருப்பது, அங்குள்ள தி.மு.க. வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என கூறப்படுகிறது.

-கிங்

nkn030224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe