Advertisment

தனித் தொகுதிகளில் தடுமாறும் தி.மு.க. -பட்டியலிடும் நிர்வாகிகள்!

reserved

மிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி களில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கானது, 2 தொகுதிகள் பட்டியல் இனப் பழங்குடியினருக்கானது. "இந்த தனி தொகுதிகளில் அ.தி.மு.க. கவனம் செலுத்துவது போல தி.மு.க. செலுத்துவதில்லை' என சொந்தக் கட்சி நிர்வாகிகளே குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

ree

2011 தேர்தலில் 46 தனி தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தி.மு.க. -திருவிடைமருதூர் தொகுதியில் கோவி.செழியன், கூடலூர் தொகுதியில் திராவிடமணி என இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2016-ல் அதிமுக 32 இடங்களிலும், தி.மு.க. 14 இடங்களிலும் வெற்றிபெற்றது. இத்தனைக்கும் தி.மு.க.வில் ஆதிதிராவிடர் நல அணி உள்ளது, கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழகம் வரை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக பதவி உண்டு. மக்கள் மத்தியில் அறிமுகமான பல பட்டியலின பிரமுகர்கள் ஒவ்வொரு மாவட்டத் திலும் உண்டு. அப்படியிருந்தும் பொதுத் தொகு

மிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி களில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கானது, 2 தொகுதிகள் பட்டியல் இனப் பழங்குடியினருக்கானது. "இந்த தனி தொகுதிகளில் அ.தி.மு.க. கவனம் செலுத்துவது போல தி.மு.க. செலுத்துவதில்லை' என சொந்தக் கட்சி நிர்வாகிகளே குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

ree

2011 தேர்தலில் 46 தனி தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தி.மு.க. -திருவிடைமருதூர் தொகுதியில் கோவி.செழியன், கூடலூர் தொகுதியில் திராவிடமணி என இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2016-ல் அதிமுக 32 இடங்களிலும், தி.மு.க. 14 இடங்களிலும் வெற்றிபெற்றது. இத்தனைக்கும் தி.மு.க.வில் ஆதிதிராவிடர் நல அணி உள்ளது, கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழகம் வரை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக பதவி உண்டு. மக்கள் மத்தியில் அறிமுகமான பல பட்டியலின பிரமுகர்கள் ஒவ்வொரு மாவட்டத் திலும் உண்டு. அப்படியிருந்தும் பொதுத் தொகுதியில் கிடைக்கும் வெற்றி ஏன் தனித் தொகுதிகளில் தி.மு.க.வுக்கு கிடைப்பதில்லை.

Advertisment

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தனித் தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மக்களிடம் செல்வாக்கு உள்ளவரா, ஓரளவு படித்தவரா என்பதை மட்டும் பார்க்கிறது. அதற்குத் தகுதியான நபராக இருந்தால் சீட் தந்து, பொதுத் தொகுதி வேட்பாளருக்கு செலவு செய்வதைவிட கூடுதலான தொகையை கட்சியே செலவு செய்கிறது. அதோடு, அந்தத் தொகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்த கட்சி விசுவாசியான ஒரு பிரமுகரை அந்தத் தொகுதியின் பொறுப்பாளராக நியமித்துவிடுகிறது தலைமை. வேட்பாளரை வெற்றிபெறச் செய்யாவிட்டால் பொறுப்பாள ருக்கு சீட்டு கிழிந்துவிடும். வெற்றி பெற்றால், அந்த பொறுப்பாளர்தான் ஆக்டிங் எம்.எல்.ஏ..

தி.மு.க.வில் எப்படி? ""எங்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வு செய்வதிலேயே குளறுபடி தான். உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தனி தொகுதியில் 2016-ல் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் அமுலு. இவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டது குடியாத்தம் ஒ.செவான வன்னியரான கல்லூர் ரவியின் தம்பியை. "அமுலுவைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் சீட் தாருங்கள்' என கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை வைத்தபோது அதனை கண்டு கொள்ளவில்லை, தோல்விதான் கிடைத் தது. அதேபோல் தற்போதைய இராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனித் தொகுதி வேட்பாளராக முதலில் நிறுத்தப்பட்டவர் பவானி வடிவேல். அவர் பட்டியலின சாதிதான், ஆனால் அவரது கணவர் வன்னி யர். இங்கும் சர்ச்சையாகி வேட்பாளர் மாற்றப்பட்டார். இந்த குளறுபடியால் தோல்வி ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில், மக்களிடமோ கட்சியினரிடமோ பெரியளவில் அறிமுகமில்லாத டாக்டர் அன்பரசனுக்கு சீட் தரப்பட்டது. அதே தொகுதியில் மக்களிடம் பிரபல மானவரும் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தவருமான கீரை தமிழ்ராஜா சீட் கேட்டும் கிடைக்கவில்லை. தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தது.

தொகுதிக்கு சம்பந்தமேயில்லாதவர்களுக்கு சீட் தரும்போது, அங்கு ஏற்கனவே கட்சிக்காக உழைத்த பட்டியல் இன நிர்வாகிகளிடம் அதிருப்தி ஏற்படுகிறது. அது தேர்தல் பணிகளைப் பாதிக்கிறது. மாவட்டச் செயலாளர் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். திரு.வி.க.நகர் தொகுதியில் ஜெயித்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த தாயகம் கவியும், எழும்பூரில் ஜெயித்த ஆர்.கே.நகர் தொகுதிக்காரரான கே.எஸ்.ரவிச்சந்திரனையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், பூந்தமல்லியில் சீட் தரப்பட்ட பரந்தாமனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அங்கே மா.செ.வான ஆவடி நாசரே ஜெயிக்க முடியாத அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

பட்டியல் இன தொகுதியில் தலைமை எதிர்பார்க்கும் அளவுக்கு வசதியான கட்சி நிர்வாகிகள் இல்லையென்றால், தொகுதி மக்களிடம், கட்சியினரிடம் செல்வாக்கு பெற்ற ஒரு பட்டியல் இன நிர்வாகியை தேர்வுசெய்து அந்தத் தொகுதிக்கான தேர்தல் செலவை கட்சி தலைமையே ஏற்க வேண்டும், இதனைத்தான் அ.தி.மு.க. செய்கிறது. ஜெயிக்கிறது. எங்கள் கட்சியிலோ, செலவு செய்ய ஆள் இல்லை என்று சொல்லி, அந்த தொகுதியில் இருக்கும் கட்சியினரின் உழைப்பை மதிக்காமல் ஒதுக்குவது கட்சிக்குள்ளும், மக்களிடமும் அதிருப்திதான் உருவாகிறது. எளிதாக வெற்றி வாய்ப்புள்ள பொதுத் தொகுதியிலும் பட்டியல் இனத்தவரைப் பெரிய கட்சிகள் நிறுத்துவதில்லை அதனால், வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, தேர்தல் செலவுக்கு பணம் உள்ளதா என பொதுத்தொகுதி வேட்பாளர்களிடம் கேட்பதுபோல் தனித்தொகுதி வேட்பாளர்களிடம் கேட்காமல், சீட் கேட்பவர் கட்சி விசுவாசியா, நல்லவரா, படித்தவரா எனப் பார்த்து எங்கள் கட்சித் தலைமை தரவேண்டும். அப் போதுதான் தொடர்ச்சியாக பட்டியலின தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதை தி.மு.க.வால் தடுக்க முடியும்'' என்கின்றனர் கோரிக்கையாக.

ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என நினைக்கும் தி.மு.க. தலைமை இதனைக் கவனிக்குமா?

-து.ராஜா

nkn041120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe