Advertisment

பலமான கூட்டணியாக தி.மு.க.! சிதறுதேங்காயாக அ.தி.மு.க.! -விறுவிறு இடைத்தேர்தல் களம்

ss

அ.தி.மு.க.வின் இரண்டு கோஷ்டிகளும் வேட்பாளரை அறிவித்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங் கியுள்ளது.

Advertisment

மேற்கு மண்டலத்தில் தனது பலத்தைக் காட்டுவதற்காக இத்தொகுதி இடைத்தேர்தலைப் பயன்படுத்த நினைத்த எடப்பாடிக்கு தொடக்கத்தில் இருந்த உற்சாகம் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அதற்குக் காரணம் கூட்டணிக் கட்சிகள் பின்வாங்கியதோடு பிரதான கட்சியான பாரதிய ஜனதா எடப் பாடியை மதிக்காமல் உதாசீனப்படுத்தி வந்ததுதான். இந்த நிலையில் தனது இமேஜுக்கு இது ஒரு கௌரவக் குறைச்சல் என்பதை உணர்ந்த எடப்பாடி, பா.ஜ.க. தயவை எதிர் பார்க்காமல் தனி ரூட் எடுக் கத் தொடங்கினார். அதன் பிறகும் வேட்பாளர் தேர்வு பெரும் சிக்கலாக அமைந்தது. முதலில் ஈரோடு மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வான கே.வி. ராமலிங்கத்தை போட்டியிடக் கூறினார் எடப்பாடி. அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தென்னரசு வைப் போட்டியிடக் கேட்டுக்கொண்டார். இருவருமே ஒருகட்டத்தில் பின்வாங்கினார்கள். பேசிப் பேசி தென்னரசுவையே போட்டியிட சம்மதிக்க வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

dd

முதலில் ஐந்து கோடி மட்டும்தான் செலவு செய்யமுடியும் என தென்னரசு கூற, சரி எல்லாத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என தென்னரசுவுக்கு தைரியம் கொடுத்து களத்தில் இறக்கிவிட்டார். இரண்டு முறை ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தென்னரசு மிகவும் எளிமையானவர். தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கவுண்டர் சமூகத்தின் உட்

அ.தி.மு.க.வின் இரண்டு கோஷ்டிகளும் வேட்பாளரை அறிவித்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங் கியுள்ளது.

Advertisment

மேற்கு மண்டலத்தில் தனது பலத்தைக் காட்டுவதற்காக இத்தொகுதி இடைத்தேர்தலைப் பயன்படுத்த நினைத்த எடப்பாடிக்கு தொடக்கத்தில் இருந்த உற்சாகம் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அதற்குக் காரணம் கூட்டணிக் கட்சிகள் பின்வாங்கியதோடு பிரதான கட்சியான பாரதிய ஜனதா எடப் பாடியை மதிக்காமல் உதாசீனப்படுத்தி வந்ததுதான். இந்த நிலையில் தனது இமேஜுக்கு இது ஒரு கௌரவக் குறைச்சல் என்பதை உணர்ந்த எடப்பாடி, பா.ஜ.க. தயவை எதிர் பார்க்காமல் தனி ரூட் எடுக் கத் தொடங்கினார். அதன் பிறகும் வேட்பாளர் தேர்வு பெரும் சிக்கலாக அமைந்தது. முதலில் ஈரோடு மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வான கே.வி. ராமலிங்கத்தை போட்டியிடக் கூறினார் எடப்பாடி. அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தென்னரசு வைப் போட்டியிடக் கேட்டுக்கொண்டார். இருவருமே ஒருகட்டத்தில் பின்வாங்கினார்கள். பேசிப் பேசி தென்னரசுவையே போட்டியிட சம்மதிக்க வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

dd

முதலில் ஐந்து கோடி மட்டும்தான் செலவு செய்யமுடியும் என தென்னரசு கூற, சரி எல்லாத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என தென்னரசுவுக்கு தைரியம் கொடுத்து களத்தில் இறக்கிவிட்டார். இரண்டு முறை ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தென்னரசு மிகவும் எளிமையானவர். தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவில் வருபவர். ஒருவகையில் எடப்பாடி அறிவித்த இந்த வேட்பாளர், எதிரணியான தி.மு.க. கூட்டணிக்கு ஓரளவு சவால் கொடுத்து கௌரவமான வாக்கு களைப் பெற வாய்ப் புள்ளவர் என அ.தி. மு.க.வினர் கூறுகிறார் கள்.

எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு, "ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் நான் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்குகிறேன். மக்களுக்கு நான் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பேன். உறுதியாக வெற்றிபெறுவேன்''’என நம்பிக்கை யாகப் பேசினாலும் மனதுக்குள் தன்னை எடப்பாடி பலியாடு ஆக்கிவிட்டார் என வருந்துகிறாராம்.

மற்றொருபுறம் இன்னொரு கோஷ்டியான ஓ.பி.எஸ். தனது வேட்பாளராக செந்தில்முருகன் என்னும் இளைஞரை அறிவித்துள்ளார். இந்த செந்தில்முருகன், ஈரோடு தொகுதியில் பெரும்பான்மை சமூகமான முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. முடித்த இவர் லண்டனில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஈரோடு வந்தவர், இங்கிருந்து தனது பணியைத் தொடர்ந்து வருகிறார். செந்தில்முருகன் குடும்பத்தினர் ஓ.பி.எஸ்.ஸுக் குப் பழக்கமானவர்கள்.

erode

இந்தத் தேர்வு முதலியார் சமூக வாக்குகளைப் பெறும் நோக்கில் அறிவிக்கப் பட்டிருந்தாலும், பா.ஜ.க. போட்டியிட்டால் நாங்கள் வாபஸ் பெற்று, பா.ஜ.க.வை ஆதரிப்போம் என மீண்டும் தன் விசுவாசத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஓ.பி.எஸ். இது ஒருபுறமிருக்க, டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ள சிவப்பிரசாத்தும் முதலியார் சமூ கத்தைச் சேர்ந்தவர் தான். டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய மூவரும் சந்தித்து ஒரே வேட்பாளராக ஓ.பி.எஸ்.ஸின் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒரு கிசுகிசுப்பு தேர்தல் களத்தில் கேட்கிறது.

வேட்பாளர்கள் அறிவிப்பு, வாக்குச் சேகரிப்பு என தேர்தல் களத்தில் அடுத்தடுத்து சூடுகிளம்பிய நிலையில், பா.ஜ.க. தரப்பிலிருந்து யார் போட்டியிடப் போகிறார்?… அல்லது இடைத்தேர்தலை பா.ஜ.க. புறக்கணிக்கிறதா என்பதைப் பற்றிய உறுதியான, இறுதியான அறிவிப்பு எதனையும் காண முடியவில்லை.

இதற்கிடையே தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். பிப்ரவரி 3-ல் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனுத் தாக்கல் செய்தார். வழக்கம்போல் பத்துக்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் களம் காண்கிறார்.

தேர்தல் பணியில் தொடக்கத்தில் 13 அமைச்சர்கள், ஈரோடு பகுதியின் மாவட்டச் செயலாளர்கள் என குழுவாகக் களம் இறக்கிய தி.மு.க., அடுத்து அனைத்து அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் முழுவேகத்தில் களத்தில் செயலாற்றவைத்து, காங்கிரஸ் வெற்றிக்கு மிகப்பெரிய அடித் தளத்தைப் போட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. மாவட்டச் செய லாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பட்டாளம் கைச் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் தீவிரமாக வாக்கு சேகரித்து வரு கிறது.

erode

பிப்ரவரி 1-ஆம் தேதி தி.மு.க. கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சித் தலை வர்களையும் ஈரோடு வரவழைத்து மாபெரும் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டியது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்திலேயே ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டார்கள். கூட்டணி யில் உள்ள காங்கிரஸ் அழகிரி, கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. வைகோ, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், கொ.ம.தே.க. ஈஸ்வரன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் காதர், இவர்களோடு மக்கள் நீதி மையத்தின் சார்பில் அக்கட்சியின் நிர்வாகியான அருணாச்சலத்தை அனுப்பி வைத்தார் நடிகர் கமலஹாசன்.

தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த கூட் டணியாக பிரம்மாண்டம் காண்பிக்கும் அதேசமயம், மறுபுறம் எதிரணி அ.தி.மு.க. கூட்டணி, சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்ததுபோல் இல்லாமல் அக்கட்சி இரண்டாக, மூன்றாக பிளவுபட்டு நிற்க, பா.ஜ.க. அந்த மூன்று அணிகளுக்கும் ஆசி கொடுக்கிறது. மொத்தத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஒரு சிதறுதேங்காயாக சிதறிவிட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு மேலும் மேலும் பிரகாசமாகி வருகிறது.

நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களும் எதிர்பாராத பல்வேறு மாற்றங்களும் நிகழும் களமாக ஈரோடு இருப்பதால், அடுத்தென்ன நடக்கும் என்ற ஊடகங்களின் எதிர் பார்ப்பைப் போலவே வாக்காளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தபடியே செல்கிறது.

-ஜீவாதங்கவேல்

___________

இறுதிச் சுற்று!

dd

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோப்புசந்திரம் பகுதியில் எருது விடும் விழாவுக்கு ஊர் மக்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், பிப்ரவரி 2, வியாழனன்று காலையில், ஓசூரிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் நிலவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தை நிறுத்தச் சொல்லியும் மறுத்ததால், இளைஞர்களுக்கும், போலீசுக்குமிடையே விவாதம் முற்றி மோதலாக வெடித்தது. போலீஸ் தரப்பில் குறைவாக இருந்ததால், போலீசாரை கற்களால் தாக்கித் துரத்தியுள்ளனர். அதையடுத்து வரவழைக்கப்பட்ட அதிரடிப்படையினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 18க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர், எருது விடும் விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, காவல்துறையினரின் பாதுகாப்புடன் விழா நடைபெற்றது. -அருண்

"களத்தில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கிவைத்த முதல்வர், பிப்ரவரி 2ஆம் தேதி, வியாழனன்று காலையில் சத்துவாச்சாரியிலுள்ள அரசு பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என ஆய்வு மேற்கொண்டார். அடுத்ததாக, பீடி தொழிலாளர்களுக்கு அரசு சார்பாகக் கட்டித் தரப்படும் வீடுகள் எப்படியுள்ளன என்று பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைகளின் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, திட்டம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அவர் களுக்கு விளக்கமளித்தார்.

-கிங்

nkn040223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe