ணப்பாறை தி.மு.க. கிழக்கு ஒன்றிய நிர்வாகி எஸ்.ஏ.எஸ்.ஆரோக்கியசாமியைக் கட்டம் கட்டியிருக்கிறது கட்சித் தலைமை. இது அப்பகுதி தி.மு.க. வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisment

sa

இந்த ஆரோக்கிய சாமி செய்துவந்த அடாவடிகள் குறித்து, சில மாதங்களுக்கு முன்பே நக்கீரன் அதிரடிச் செய்தியை வெளியிட்டி ருந்தது. கடந்த 10 வருடங் களாக அவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுவருகிறார். மணப்பாறை ஆபிசர்ஸ் டவுன் பகுதியில் அலுவலகம் அமைத்து லாரி கள், ஜே.சி.பி.க்களை வைத்து தனது இல்லீகல் மணல் விற்பனையில் கொடிகட்டிப் பறந்துவந்தார். அவரது அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் பலவும் இவரது லாரிப் போக்குவரத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குமுறிவந்தனர். மேலும் அவரிடம் இருக்கும் லாரி டிரைவர்களும் குடித்துவிட்டு வந்து அப்பகுதி மக்களிடம் கலாட்டாவில் ஈடுபட்டு அவர்களது வெறுப்பைச் சம்பாதித்து வந்தனர்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக, ஆரோக்கியசாமியின் உறவினர் குணசீலி என்ற பெண்மணி மிரட்டப்பட, இந்த சம்பவத் தின் தொடர்ச்சியாக வழக் கறிஞரான மகன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து ஆரோக்கியசாமியின் லாரி, ஜேசிபி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்க, அது இரு தரப்பு மோதலாக வெடித்ததை அப்போது பதிவுசெய் திருந்தோம்.

s

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மணப்பாறை அருகே உள்ள முத்தபுடை யான்பட்டியில் ஒரு கும்பல் மணல் கடத்துவதாக, காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல்வர, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கே சென்று சோதனை நடத்தினர்.

Advertisment

அப்போது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி. மற்றும் இரு டிப்பர் லாரிகளை மடக்கிப் பறிமுதல் செய்ததோடு, அவற்றின் டிரை வர்கள் மனோகர், பவுன் சேகர், கார்த்திகேயன், ஆகிய மூவரையும் பிடித்து, மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனிப்படை பிடித்துக் கொடுத்த லாரி மற்றும் லாரி ஓட்டுநர் களை, அரசியல் அழுத்தம் காரண மாக இன்ஸ்பெக்டர் அன்பழகன் விடுவித்துவிட்டார்.

மணல் கடத்தலில் ஈடு பட்ட வாகனங்கள் விடுவிக்கப் பட்டது குறித்து, டி.ஜி.பி., வரை புகார் சென்றது. இதை யடுத்து, விடுவிக்கப்பட்ட வாகனங்களையும், டிரைவர்களை யும் மீண்டும் பிடிக்க மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தாவுக்கு மேலே இருந்து உத்தரவு வந்தது. அவர், மணல் கடத்தலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கிய சாமியிடம் பேசினார்.

அவரோ, "வாகனங்களையும், டிரைவர்களையும் ஒப்படைக்க முடியாது. உங்களால் முடிந்ததைப் பாருங்கள்'' என தெனாவெட்டாகக் கூற, டி.எஸ்.பி. பிருந்தா, இன்ஸ்பெக்டர் அன்பழகனுடன், முத்தபுடையான்பட்டியில் உள்ள ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்றார். அங்கே அன்று மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை, டிரைவர்களையும், வாகனங்களையும் ஒப்படைக்கும்படி, ஆரோக்கியசாமியிடம் கேட்டும், அவர் இறங்கிவரவில்லை. மேலும் ”உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’என்றும் சவால் விட்டார். இந்த பேச்சுவார்த்தை ஆரோக்கியசாமி வீட்டிலேயே நான்கு மணி நேரம் நடந்துள்ளது. மேலும் இது மணப்பாறை டி.எஸ்.பி., அலுவலகத்திலும் தொடர்ந்தது. அப்போது அங்குவந்த ஸ்ரீரங்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி, இரு தரப்புக்கும் இடையே "பஞ்சாயத்து' செய்துள்ளார். இதில், இரு பழைய வாகனங்களை மட்டும் ஒப்படைக்க ஆரோக்கியசாமி ஒப்புக்கொண்டார். வேறுவழியின்றி போலீசாரும் சம்மதித் தனர்.ஆயினும், 'டிரைவர்களை ஒப்படைக்க முடியாது' என ஒரேயடியாக மறுத்துவிட்டார் ஆரோக்கியசாமி.

இதையடுத்து மணல் கடத்தல் வழக்கில் ஒரு ஜே.சி.பி., மற்றும் டிப்பர் லாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, மனோகர், பவுன் சேகர் ஆகிய இரு டிரைவர் கள் தலைமறைவு எனவும், உரிமையாளர்கள் தலைமறைவு என்றும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 15-ஆம் தேதி இரவே இந்த விஷயம் தி.மு.க தலைமைக்கு கொண்டுசெல்லப்பட, ஆரோக்கிய சாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினா? பதவியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார். மேலும் தனிப்படை பிடித்துக் கொடுத்த லாரி மற்றும் ஓட்டுநர்களை விடுவித்த மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் அன்பழகனை, டி.ஐ.ஜி. பரிந்துரையின்படி, திருச்சி எஸ்.பி. முனைவர் மூர்த்தி, பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தலைமறைவு டிரைவர்களையும் ஆரோக்கியசாமியையும் பிடிக்க, டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

அடாவடி செய்துவருவது ஆளும்கட்சிக்காரர் என்ற போதும், அவரை விட்டுவிடாமல், அரசின் அதிரடி நடவடிக்கை பாரபட்சமின்றி பாயத் தொடங்கியிருப்பது, அப் பகுதி மக்களை சபாஷ் போட வைத்திருக்கிறது.