ள்ளாட்சி மறைமுகத் தேர் தலில் நடந்தவை குறித்து நேரடியாகவே கொந்தளித் துள்ளனர் தமிழக வாழ்வுரி மைக் கட்சியினர். அதன் தலைவர் வேல்முருகனிடம் சென்னை மா.செ.க்கள்,”"தி.மு.க. கூட்டணியில் 2011-லிருந்தே நாம் இருக்கிறோம். அப்போது கிடைத்த மரியாதை கூட இப்போது இல்லை. வெறும் 20 வார்டுகள்தான் தி.மு.க. தந்தது. வடதமிழகம் உள்பட 120 தொகுதிகளில் நமக்கு கட்டமைப்பு உள்ளது. கூட்டணி தர்மத்திற்காக நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள். நாம் ஏமாற்றப்படுவதைப் புரிந்து இனி அரசியல் செய்ய வேண்டும்''’என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment

velmurugan

கன்னியாகுமரி மா.செ.க்களும் இப்படித்தான். மாவட்டத்திலுள்ள தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள். இதில் 4 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களையும் நாம் ஜெயித்திருக்கிறோம். தி.மு.க. 3 இடத் தையும் காங்கிரஸ் 1 இடத்தையும் தான் ஜெயித்தது. பேரூராட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் ஆதரவுடன் பா.ஜ.க. பிடித்துவிட் டது''’என்றனர் ஆதங்கமாக.

கடலூர் மா.செ.க்கள் பேசும்போது,’"திட்டக்குடி, விருத் தாச்சலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், புவனகிரி, உளுந் தூர்பேட்டை ஆகிய இடங்களில் நமக்கு கொடுத்த வார்டுகளி லெல்லாம் வெற்றி பெற்றுள்ளோம். வடமாவட்டங்கள் பலவற்றிலும் தி.மு.க. ஜெயிக்க வேலை பார்த்தோம். ஆனா, மேயர், சேர்மன், தலைவர் ஆகிய பதவிகளில் ஒன்று கூட நமக்கு தி.மு.க. கொடுக்காதது கூட்டணி தர்மம் கிடையாது. கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் விருப்பத்தை நிறைவேற்ற தி.மு.க. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.வும், கணேசனும் துடித்தார்களே தவிர, நம் கோரிக்கையை புறக்கணித்தனர். திட்டம் போட்டு நம்மை ஓரங்கட்டியிருக்கிறார்கள்''’என்றனர் காட்டமாக.

velmurugan

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சொல்லியும் தி.மு.க நிர்வாகிகள் போதுமான இடங்களை ஒதுக்காததால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் வேல்முருகன். கடந்தகால கசப்புகளை அவர் சொன்னபோது, அங்கிருந்த நகர்ப்புறத் துறை அமைச்சர் கே.என்.நேரு நான் பார்த் துக்கொள்கிறேன் என உறுதி தந்தார். தி.மு.க.வின் பேச்சுவார்த்தை குழுவும், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் தருவதற்கு வேல்முருகனிடம் ஒப்புதலளித்திருந்தது. ஆனால், போதிய அளவில் வார்டுகள் ஒதுக்கவில்லை. கடலூர் மேயர் கேட்டும் தரவில்லை. துணை மேயர் கேட்டபோது அதனை சிறுத்தை களுக்கு ஒதுக்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

எம்.ஆர்.கே. மாவட்டத்தில் புவனகிரி, குறிஞ்சிப்பாடியும், கணேசன் மாவட்டத்தில் பட்டாம் பாக்கம், விருத்தாச்சலத்திலும் துணைத்தலைவர் கேட்டார் வேல்முருகன். கொடுக்கவே இல்லை. வன்னியர் சமூகத் தலைவராக வேல்முருகன் வளர்ந்துவிடக்கூடாது என்று தி.மு.க தரப்பு நினைக்கிறது என்கிறார்கள் த.வா.க. நிர்வாகிகள்.