"ஹலோ தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை விரைவில் நடத்தும் மூடுக்கு தி.மு.க. அரசு வந்திருக்கு.''”
"கேபினட் கூட்டத்தை 20-ந் தேதி கூட்டியிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?''”
"ஆமாங்க தலைவரே, கேபினட் கூட்டத்தில் இதுவும் முக்கிய சப்ஜெக்ட்டாம். மாநிலத் தேர்தல் ஆணையரான பழனிக்குமார், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்வது மற்றும் ரிசர்வேசன் அடிப்படையி லான வார்டுகளைப் பிரிப்பது உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட்டிருக்கார். இது குறித்து, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அவர் இது தொடர் பாக தீவிர ஆலோசனையையும் நடத்தியிருக்கார்.''
"ம்...''”
"அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வர்ற 25-ஆம் தேதிக் குள் வார்டுகளை வரையறுத்தல், இடஒதுக்கீடு அடிப்படையில் அவற்றைப் பிரித்தல் உள் ளிட்ட பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்துவிட வேண்டும்னு முடிவெடுக்கப்பட்டி ருக்கு. மழையால் பணிகள் தடைப்பட்டதைக் குறிப்பிட்டதோடு, விரைவில், தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் முடித்துவிடுவோம்னு தேர்தல் ஆணையரிடம் அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதனால், அனேகமாக, டிசம்பர் முதல் வாரத்தில், தேர்தலுக்கான நோட்டிஃபிகேசன் வெளியாகலாம்னு தேர்தல் ஆணைய வட்டாரம் சொல்லுது.''”
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிற்க இப்பவே பா.ஜ.க. விருப்ப மனு வாங்கத் தயாராகுதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, வரும் 21-ந் தேதி முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிற கட்சிக்காரர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கப்போகுது. சென்னை யில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணா மலையும், மற்ற மாவட்டங்களில் மூத்த நிர்வாகிகளும் மனுக்களை வாங்க இருக்காங்க. அ.தி.மு.க. வுடன் இந்த முறையும் கூட்டணி யைத் தொடர விரும்புவதாக டெல்லித் தலைமைக்கு தகவல் அனுப்பியிருக்கிறாராம் அண்ணா மலை. அதேசமயம், 15 சதவீத இடங்களையாவது அ.தி.மு.க. விடம் இருந்து பெற்றாகணும்னு அவர் திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் அ.தி.மு.க.வோ, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு கவுன்சிலர் சீட்டை மட்டுமே பா.ஜ.க.வுக்கு ஒதுக்குவதுங்கிற முடிவில் இருக்குது. அமைச்சரவைக் கூட்டத்தில், மாநகராட்சிக்கான மேயர் தேர்தலை நேரடி யாக நடத்துவது பற்றியும் ஆலோசனையும் அடக்கம்.''”
"முதல்வரின் முகவரியை பார்த்தியாப்பா?''”
"ஆமாங்க தலைவரே, தலைமைச் செயலகத்தில், ’முதல்வரின் முகவரிங்கிற கவித்துவமான தலைப்பில் ஒரு புதிய துறையை தமிழக அரசு உருவாக்கி இருக்கு. அரசிடம் பொதுமக்கள் வைக்கும் பல்வேறு கோரிக்கை களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பல துறைகளை ஒருங்கிணைத்து, இந்தத் துறை உருவாக்கப்பட்டிருக்கு. குறிப்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு, குறை தீர்ப்பு மேலாண்மை, முதலமைச்சர் மையம், உங்கள் தொகுதியில் முதல்வர் உள்ளிட்டவை, முதல்கட்டமாக முதல்வரின் முகவரியோடு இணைக்கப்பட்டிருக்கு. பொதுத்துறையின் கீழ் இயங்கும், இதன் அலுவலராக ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கார்.''”
"அமைச்சர் ஒருவருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் இடையில் உரசல்னு கோட்டையில் செய்தி புகையுதே?''”
"தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும், அந்தத் துறையின் செய லாளரான ஹித்தேஷ்குமார் மக்வானாவுக்கும் இடையில் பனிப்போர் நடக்குதாம். அதனால் மக்வானாவை மாற்றாவிட்டால் என்னால் முழுமையாக பணிகளைக் கவனிக்க முடியாதுன்னு முதல்வர் ஸ்டாலினிடம் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறாராம் முத்துச்சாமி. இந்த விவகாரம் உயரதிகாரிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுது.''”
"மத்திய அரசு பணிக்கு டெபுடேசனில் சென்ற மக்வானாவை மாநில அரசுப் பணிக்கு கொண்டு வந்தது தி.மு.க. அரசுதானே?''”
“"ஆமாங்க தலைவரே... முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி யோட சிபாரிசில்தான் மக்வானா இங்கே வந்தார். மிகப்பெரிய துறையான வீட்டுவசதி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட மக்வானாவின் அணுகுமுறை, அரசியலிலும் அனுபவத்திலும் மிகவும் சீனியரான முத்து சாமிக்கு செட் ஆகலை. அவர் எந்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொன் னாலும், அதை கிடப்பில் போட்டுவிடுகிறாராம் மக்வானா. அமைச்சருக்குரிய மரியாதையும் மக்வானா கொடுப்பதில்லையாம். இதற்கு மேலும் புகைந்து -வெடிச்சிடக் கூடாதுன்னுதான் முதல்வரிடம், அமைச்சர் முத்துசாமி, மக்வானாவை பற்றி புகார் வாசித்திருக்கிறார்.''”
"முதல்வர் ஸ்டாலின் அண்மைக் காலமாகப் பயன்படுத்தும் புதிய கார், பலரையும் கவர்ந்து இழுக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, மழை வெள்ளத்தைப் பார்வை யிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னையில் அவர் பயன்படுத்திய சிவப்பு நிற, தார் ஜீப் பலரையும் கவர்ந்தது. அதன்பிறகு பல மாவட்டங்களுக்குமான பயணத்தில் முதல்வர் பயன்படுத்தியது, ’ஜாகுவார் லேண்ட் ரோவர் டிஃபண்டர்’ கார். இதற்கு முன் அவர் ’டொயோட்டா’ காரைத்தான் பயன்படுத்தி வந்தார். இப்போது அவர் பயன்படுத்தும் அந்த நவீன கார், ஏறத்தாழ 1 கோடியே 45 லட்சம் ரூபாய்வரை மதிப்புடையது. இது அரசு செலவில் வாங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த காரில் மிக நவீன அம்சங்கள் பலவும் இருக்குதாம்.''”
"மழை நீரை வடிய வைக்க நவீன டெக்னிக்குகள் எப்போது வருமாம்?''”
"மழை வெள்ளத்தின் போது சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் மூழ்கியதை முதல்வர் ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்கலையாம். தீவிரமாக அவரே நேரில் ஆய்வு செய்து, சென்னையின் மழைநீரை வடியவைத்த நிலையிலும் அவர், மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், ஜெ’மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஸ்ட்ராங் செய்த முன்னாள் காவல்துறை அதிகாரி நல்லம நாயுடு ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செய்யச் சென்றபோது கூட, அந்தப் பகுதிகளில் மழை நீர் நின்றதைப் பார்த்துத் திகைத்தாராம் ஸ்டாலின். சென்னையின் இந்த நிலைக்குக் காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த மெஹா ஊழல்தானாம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் நந்தகுமார், ஆட்சி மாறிய நிலையில் இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார். முதல்வர் ஸ்டாலின் மழைநீர் ஆய்வுக்குச் சென்றபோது கூட, இந்த நந்தகுமாரும் உடன் சென்றதுதான் கொடுமை என் கிறார்கள், மாநகராட்சித் தரப்பினரே. இவர் இப்போதும் செல்வாக்காகத் தொடரக் காரணம், இந்த துறை இல்லாத வேறு அமைச்சர் ஒருவருடனான நட்புதான்னும் அதே தரப்பு சொல்லுது.''”
"தமிழக அரசிடம் விவசாயிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்குதே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிப்பை உணர்ந்து விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு அறிவித் திருக்கிறார். ஆனால், இது போதுமானதல்லன்னு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன், விருத்தகிரி, ஆறுபாதி கல்யாணம், வெ.ஜீவக்குமார் உள்ளிட்ட பலரும் தெரிவிச் சிருக்காங்க. குறிப்பாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் ஒரு ஏக்கர் நெல் பயிரிட 29,775 ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது. தொடர் மழையால் அதை முற்றிலும் இழந்த விவசாயிகள் மீண்டும் பயிரிட, மறுபடியும் விதை, உழவு, நடவு, உரமிடுதல், களை பறித்தல், மருந்து தெளித்தல்னு எல்லத்தையும் செய்ய வேண்டி இருக்குது. எனவே, பயிர் நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 40,000 ருபாய் வழங்க வேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கு. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட பலரும் இதே கோரிக்கை வச்சிருக்காங்க. மழையால் வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாததைக் கூட்டணிக் கட்சித் தலைவரான முத்தரசன் சுட்டிக்காட்டி யிருக்காரு.''”
"காவல் துறையில் சலசலப்பு தெரியுதேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில், எடப்பாடிக் காகவும் வேலுமணிக்காகவும் கரன்ஸிக் கட்டுகளை களத்துக்குக் கொண்டு போறாங் கன்னு, அப்போதைய கொங்கு மண்டல டி.எஸ்.பி.க்களாக இருந்த அனிதா மீதும், பாலமுருகன் மீதும் தி.மு.க. தரப்பு குற்றம் சாட்டுச்சு. இதையொட்டி அனிதாவை போலீஸ் பயிற்சி மையத்துக்கும் பாலமுருகனை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் தூக்கியடிச்சிது. தி.மு.க. தரப்பாலேயே புகாருக்கு ஆளான பாலமுருகன், இப்ப, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.யா பவர்ஃபுல்லா வந்து உட்கார்ந்துட்டார். அதேபோல் அனிதாவும் கொங்குமண்டலத்தில் பவர்புல் போஸ்டுக்கு காய் நகர்த்துகிறாராம். இதுதான் அங்கே சல சலப்பை ஏற்படுத்திக் கிட்டு இருக்குது”
"ரெய்டுக்கு ஆளான அ.தி.மு.க. பிரமுகர் சேலம் இளங்கோவன், இப்ப ரிலாக்ஸா ஆயிட்டா ராமே?''”
"இளங்கோ வன் தரப்பில் இருந்து, எடப்பாடி தொடர்பான ஆவணங்களை அள்ளிச்சென் றது லஞ்ச ஒழிப் புத்துறை. அத னால் அவர் சிக்கலில் இருந்து தப்புவது கஷ்டம்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனா, இளங்கோவனோ, இப்ப ஹாயாய் இருக்கார். காரணம், கூட்டுறவு சங்க மாநிலத் தலைவராக இளங்கோவன் இருந்த காலத்தில், இப்போது அமைச்சராக இருக்கும் ஒருவர் சொன்ன அத் தனை பேருக்கும் கடன் தாராளமாகக் கிடைத்த தாம். அந்த நட்புணர்வின் பாதுகாப்பில் இருக்கும் தைரியத்தில்தான், இப்போது இளங் கோவன், என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு, கவலையற்று இருக்கிறாராம்”
"பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது அதிரடிக் குற்றச்சாட்டு ஒண்ணு எழுந்திருக்கே?''”
"அந்த விவரத்தை நான் சொல்றேன்.. தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க.விலேயே இருக்கும் சிலரது போன் தகவல்கள் அத்தனையையும் பிரைவேட் ஹேக்கர்ஸ் மூலம் திருடச்செய்து, அத்தனை பேரின் அந்தரங்கத் தகவல்களையும் சேகரிக்கிறாராம். இது தொடர்பான புகார், பா.ஜ.க. தலைமைக்கே போக... கட்சியின் மேலிடப் பார்வையாளர்களில் ஒருவரான சி.டி.ரவி., அண்ணாமலையிடம் இது குறித்து அண்மை யில் விசாரணை நடத்தி யிருக்கிறார். அண்ணா மலையோ, "நான் அப்படியெல்லாம் செய்யலை'ன்னு சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும், பல்வேறு கட்சியிலும் இருக்கும் வி.ஐ.பி.க்கள் அரண்டு போயிருக்காங்களாம். இப்போது அண்ணா மலையின் நடவடிக் கைகளை டெல்லி மேலிடம், தீவிரமாக கண்காணித்துக்கொண்டு இருக்கிறதாம்.''’