துரை சத்தியசாய் நகர் ஒரு காலத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் தி.மு.க.வின் அழகிரி வீடு அங்குதான் உள்ளது. 2011-க்குப் பின் மிகவும் அமைதியாக காணப்படும் அந்த பகுதியில் கடந்த 21-ம் தேதி, போலீஸ் அதிகாரிகள் வரிசையாக அழகிரி வீட்டிற்கு அருகில் நிற்க, அழகிரி மறுபடியும் தி.மு.க.வில் இணையப்போகிறாரோ என அங்கிருப்பவர்கள் நினைத்தனர். போலீஸ் அதிகாரிகளோ, "தினமலர்' நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களின் வீட்டருகிலுள்ள அவரது நண்பரும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான சுப்ரமணியத்தின் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து அழகிரி வீட்டின் எதிரிலுள்ள சாய்பாபா கோவிலைச் சுற்றிச்சுற்றி வந்து நன்றாக ஆய்வு செய்துவிட்டு விர்ரெனக் கிளம்ப, அந்த ஏரியாவே பரபரப்பானது.

rss

யார் வரப் போறாங்க, முதல்வரா இல்லை ஜனாதிபதியா இல்லை வேறெந்த வி.ஐ.பி.யுமா என்று மக்களிடம் ஆர்வமும் குழப்பமும் நீடித்த நிலையில், மாலையில் மாநகராட்சியிலிருந்து வந்த சுற்றறிக்கை யில், மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருவது தெரியவந்தது. அவர் வருகையையொட்டி, விமான நிலையத்திலிருந்து சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய் நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளைச் சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் மாநக ராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கை தீயாய் பரவ, அடுத்த சில நிமிடங்களில் மதுரை பாராளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அடுத்து இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூரிடமிருந்து கண்டனம் வர, சமூக வலைத்தளங்களும் கொதிப்படைந்தன.

Advertisment

உடனே மாநகராட்சி ஆணையர், "இது பொதுவான நடைமுறைதான். இசட் பிரிவு பாதுகாப்பு உள்ள வி.ஐ.பி. யார் வந்தாலும் இதுபோல சுற்றறிக்கை விடுவது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டதால் துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சிப் பணியி-ருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்'' என்று அறிக்கை விடவும் சர்ச்சை கொஞ்சம் அடங்கியது.

ff

மறுநாள் இரவு 9.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்திறங்கிய மோகன் பகவத்தை தென்மாவட்ட ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பிரமுகர்கள் வரவேற்கவும், சாதாரண உடையிலிருந்த நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழிநெடுகிலும் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட, சத்தியசாய் நகரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சுப்ரமணியன் வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் காலையில் அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள், அவ்வீட்டிலிருந்து 2 கி.மீ. முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட, வாக்குவாதம் ஏற் பட்டு அனைவரும் கலைந்துபோக, நாம் அந்த தெருவைப் புகைப்படம் எடுத்ததைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள், "யாருய்யா அது, கேமராவைப் பிடுங்கு'' என மிரட்ட, "ஏன் சார், ரோட்டிலிருந்துதானே படம் எடுக்கிறோம்'' என்று சொல்-விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

Advertisment

பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்கவிடாதபடி அப்படியென்ன பரம ரகசியம் என்று உளவுத்துறை காவலரிடம் விசாரித்தால், அவருக்கே அதன் மர்மம் தெரியவில்லை என்றார் பரிதாபமாக. அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சீனிவாசனிடம் விசாரிக்கும்படி கூறினர். அவரிடம் கேட்டபோது, "நான்கு நாட்கள் எங்களுக்குள் நடக்கும் ஆலோசனைக்கு எந்த பத்திரிகையாளருக்கும் அனுமதியில்லை. ஆலோசனைக் குப்பின் மதுரை லெட்சுமிசுந்தரம் ஹா-ல் மீட்டிங் என்று தகவல். அதுவும் உறுதி செய்யப்படவில்லை'' என்றார்.

நாம் விசாரித்தவரையில், மூன்று முக்கிய அஜண்டாவோடு ஆர்.எஸ்.எஸ். களமிறங்கியதாகத் தெரிகிறது. ”கன்னியாகுமரியில் தொடங்கி திருநெல்வே-, இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, சிவகங்கை, மதுரையைக் குறிவைத்து களமாடவுள்ளார்கள்.

அஜெண்டா 1: அ.தி.மு.க., தி.மு.க.வில் கோலோச்சும் முக்குலத்தோர் சமூகத்தை ஆர்.எஸ்.எஸ். பக்கம் திருப்புவதற்காக அனைத்து தேவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஷாகா பயிற்சியை அளிப்பதற்காக அந்த அமைப்புகளின் தலைவர்களை மட்டும் அழைத்திருக்கிறார்கள். தென் மாவட்ட கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். வகுப்பு நடத்தி. ஒரு கிராமத்துக்கு குறைந்தது 5 பேராவது இருக்கும்படி செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டதாகத் தகவல்.

அஜெண்டா 2: தென்மாவட்டங்களில் உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஒவ்வொரு அரசு துறைகளிலும் ஆர்.எஸ்.எஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்களுக்கு காவல் துறை மற்றும் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களை இணைப்பதற்கான பணி தரப்பட்டுள்ளது.

அஜெண்டா 3: தமிழகத்தில் இயங்கும் அரசு சாரா ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தனியார் என்.ஜி.ஓக்களை தென்தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் சேவையாற்றச்செய்து பொதுமக்களை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பக்கம் திருப்ப வேண்டும். இந்த விசிட்டுக்கு பா.ஜ.க. தலைவர்கள் எவரையும் அழைக்கவில்லை. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு நாளிதழ் எடுத்துச் செய்ததாகச் சொல்லப்படுகிறது என்றனர்.