அறிவுத் திருவிழாவின் மூன்றாவது அமர்வுக்கு, நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைவகித்துப் பேசியபோது, "இரு வண்ணக்கொடிக்கு வயது 75 என்று சொன்னால், இரு வண்ணக்கொடியை ஏந்திநிற்கும் கழகத்தின் வயதை அது குறிக்கிறது. வயது ஏறினாலும் இளமையாக இருப்பது, தமிழ்நாட்டில் மிகச்சிலவற்றுக்கு வாய்த்திருக் கிறது. நம் உயிரனைய இருக்கக்கூடிய தமிழ் மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த மொழி என்று நாம் அறியக்கூடிய நம் மொழி. அந்த மொழிக்கு இதுதான் வயது என்று வரையறுக்க முடியாததாக, அறுதி யிட்டுச் சொல்லமுடி யாததாக இருக்கிறது. நாகரிகத்தின் தொட் டில் என்று அறியப் படக்கூடிய கீழடியின் காலத்திலே, நாங்கள் எழுதப்படிக்கத் தெரிந்திருக்கும் மொழி எங்கள் மொழி என்று சொன் னாலும், இன்றைக் கும் இளமை குன்றாத மொழி நம் தமிழ் மொழி என்ற பெரு மை நமக்கெல்லாம் இருக்கிறது. வயது ஏற ஏற இளமை திரும்பு கிறது என்பதாக எப்படி நம் மொழி இருக்கிறதோ, அதேபோல் இளமை பெற்றிருக்கக்கூடிய ஒரு இயக்கம் இந்தியாவில் இருக்கிறதென்று சொன்னால், 75 ஆண்டுகள் கடந்தும் இளமையோடு இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகம்தான். இன்றைக்கும் அது இளமையோடு இருக்கின்ற காரணத்தால் தான் இந்த விழாவைக்கூட தாய்க்கழகம் நடத்தாமல் இளைஞரணி அதை நடத்துவதென்பது சாலப்பொருத்தமாக இருக்கும்.
தமிழ்நாட்டிலே மூலைமுடுக்கெல்லாம் நீங்கள் செல்வீர்களென்று சொன்னால், தலைவரோட காலடி படாத கிராமங்களே இல்லையென்று சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம், அத்தனை கிராமங்களிலும் அவரது கையால் ஏற்றிய இருவண்ணக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. 1980களிலே அவர் கழகத்தின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து, அவர் இந்த கொடியை ஏற்றிவைக்கும் பணியை செய்துவந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த கழகத்தின் இரு வர்ணக்கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் நாம் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். இன்று நேற்றல்ல நான்கு தலைமுறைகளாக தமிழ்நாட்டிலே நாம் ஏற்றிவைத்த கொடிதான் இன்றும் பட்டொளிவீசிப் பறந்துகொண்டிருக்கிறது'' எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
State Autonamy is our birth right என்ற தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி பேசுகையில், "சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்... நான்காண்டுகள் முடிந்துவிட்டது, ஐந்தாமாண்டு முடியப் போகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? எப்போது பார்த்தாலும் போராட்டம் போராட்டம் போராட்டம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே, கல்வியில் நிதி கேட்டும்... பேரிடர் மேலாண்மைக்கு நிதி கேட்டும்... செலுத்திய வரியை திரும்பத் தரவேண்டுமென்றும் போராட்டம் போராட்ட மென்று சொல்கிறீர்களே... 40 நாடாளுமன்ற உறுப்பினர் களையும் வைத்திருக்கிறீர் களே என்று எதிர்த்தரப்பி லிருந்து, அண்ணாவையும் திராவிடத்தையும் தனக்கு மேல் சுமையாக தூக்கித் திரிகின்ற எடப்பாடி பழனிச் சாமி இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர்களுக்கு சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/arivuthiruvella1-2025-11-24-16-57-36.jpg)
சுதந்திரத்துக்காக 30-40 ஆண்டுகள் போராடினாரே காந்தி, அவரை தட்டியெழுப்பிக் கேளுங்கள், 4 வருஷம் போதாதா? நாட்டையே தன் பின்னால் திரட்டியிருக்கும் உங்களுக்கு போராட 40 வருஷம் தேவையான்னு கேளுங்க! நீ கையில் வைத்திருக்கிறாயே கைத்தடி... அந்த கைத்தடிக்கு இன்றைக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதமென்று சொல்லுங்கள்! என்னை தயவுசெய்து எழுப்பாதேயென்று திரும்ப படுத்துக்கொள்வார்! பூலித்தேவன் 12 ஆண்டுகள் கோட்டையிலிருந்து போராட் டம் செய்தானாமே... பூலித்தேவனிடம் சென்று கேளுங்கள்... நான்கு வருஷம் உனக்கு பத்தாதா என்று! மருதுபாண்டியரிடம் கேளுங்கள்... ஜம்புத்தீவு பிரகடனம் என்று சொன்னீர்களே, இன்று அதே நாட்டில் உன்னு டைய பிள்ளைகள் நாங்கள், தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள்! ஏன் இந்த வரலாறு களையெல்லாம் சொல்லுகிறேனென்றால், நாம் இன்றைக்கு நடத்துகிற போராட்டமெல்லாம் 1949க்கு பிறகான போராட்டமென்று சுருக்கிப் பேசுகிறார்கள், அதற்கும் முன்பாக தமிழன் என்ற இனக்குழு வாழத்தொடங்கிய காலகட்டம் தொடங்கியே போராடத் தொடங்கியிருக்கிறோம்... நமக்கான உரிமைகளை பாதுகாத்து வந்திருக்கிறோம்'' என்று பேசினார்.
அடுத்ததாக, "ஆலயம் என்ன அவர்கள் சொத்தா?' என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி பேசுகை யில்,
"ஆலயம் என்ன அவர்கள் சொத்தா என்ற தலைப்பில் கருப்புச்சட்டை போட்டுக்கிட்டு மதிவதனி பேசலாமா? தி.க. காரங்கள பேச வச்சு தி.மு.க. வேடிக்கை பார்க்குதா? இந்துக்களே ஒன்றுகூடுங்கள்! அப்டீலாம் கூப்பிட முடியாது! ஏன்னா, முன்வரிசையில் பார்க்கிறேன், எங்க அண்ணன் ஒருத்தருக்கு நெத்தியில கேப்பே இல்ல! இந்தப்பக்கம் எங்க அண்ணே, மஞ்சள் சட்டையோட குங்குமத்தோட வந்து உட்கார்ந்திருக்காரு! அதனால இந்துக்க ளெல்லாம் இங்க இருக்காங்க! படிப்பு என்ன உன் வீட்டு சொத்தா? அரசு வேலை உன் சொத்தா? உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உன் தாத்தன் வீட்டு சொத்தா? எல்லா இடத்துக்கும் வருவோம் என்று கேட்ட இயக்கம்...ஆலயத்தை பற்றி ஏன் கேட்கணும்? சாகுற வரைக்கும் கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லைன்னு அழுத்தி சொல்லுகிறார். அப்படி சொன்ன பெரியார் ஏன் ஆலய உரிமையை பற்றி பேசணும்? கோவிலிருக்கு, சாமியிருக்கு... கும்பிடப் போகணுமா, வேணாமாங்கறது என்னுடைய சாய்ஸ்! ஆனால் கோவிலுக்குள் எல்லோரும் போக வேண்டுமென்பது அடிப்படை உரிமை! சுய மரியாதை! தன்மான உணர்ச்சி! அந்த தன்மான உணர்ச்சியை சாமி கும்பிடுறவங்க மட்டும் தான் கேட்கணும்னு எந்த சட்டமும் சொல்லல! சாமி கும்பிடுறவங்க கேட்டிருந்தாங்கன்னா, சாமி கும்பிடாத பெரியார் அமைதியா இருந் திருப்பாரு! சாமி கும்பிடுறவங்க கேட்கல... அதனால் பெரியார் கேட்டார்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/arivuthiruvella2-2025-11-24-16-57-46.jpg)
கோவில் பொதுச்சொத்து! கோவிலை கட்டியவர்கள் பொதுமக்கள்! கோவிலுக்கு மண்ணு சுமந்து, கல்லு சுமந்து சித்தாள் வேலை பார்த்தது நம்மாட்கள்! அப்படியான கோவிலுக்குள் உட்கார்ந்துக்கிட்டு, தெருவுக்குள் நடந்தாலே இவர்களுக்கு தீட்டாகிடுதாம்! தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று பெரியார் சொல்கிறார். அதைக் கேட்டு கலைஞர் பேசுகிறார். "எங்க ஐயா பெரியார் கடவுள் இல்லைன்னுட்டார். நாங்க என்ன சொல்றோம்னா, கும்பிடுறது தான் கும்பிடுற, தமிழ்ல கும்பிடுன்றோம்! வணங்குறதுதான் வணங்குற, தமிழில் வணங்குன்னு சொல்றோம்! என் மொழி தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?'ன்னு கேட்டவர் கலைஞர்! எந்த துணிச்சலில் கலைஞர் பேசினாரென்றால், "நான் அரசியல்வாதி... ரெண்டாவது! முதலமைச்ச ரென்பது ரெண்டாவது! நான் முதலில் மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர்!' என பேசினார் மதிவதனி!
"கட்டை விரலைக் கேட்டால் பட்டை உரியும்!' என்ற தலைப்பில் தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசும்போது, "என் ஏகலைவன் வித்தை கற்கும்போது இந்த சாஸ்திரம் அனுமதிக்க வில்லை. அவன் வில்லில் விஜயனையே வெல்வானென்று கட்டை விரலை காணிக்கை யாய் பெற்றதென்ன நியாயமா? எனக் கேட்டார், எம் இனத்தின் தலைவர்... கட்டை விரலோ காணிக்கையோ இந்நாளில் எவன் கேட்டாலும் பட்டை உரியும்... அவன் கட்டை சுடுகாட்டில் வேகுமென்றார்! இது ஏதோ கொலை செய்வதற்கான முயற்சியல்ல... பண்ணப் பழகடா பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை பண்ணப் பழகடா என்று பாவேந்தர் பாடினார். ஆண்டாண்டு காலமாய் ஒரு கூட்டம் எங்களைப் பார்த்து நீ காணிக்கையாய் உன் கட்டை விரலைக் கொடு என்று கேட்டபோது... ஆண்டாண்டு காலமாய் ஒரு கூட்டம் எம் மொழியைப் பார்த்து, உன் மொழி நீச பாஷை என்று சொன்ன போது... ஆண் டாண்டு காலமாய் ஒரு கூட்டம் எங்கள் கடவுளை வணங்குவதற்கு நீ தொட்டால் தீட்டென்று சொன்னபோது, எங்கள் தத்துவ மரபு மேலெழுந்து நின்றது! அந்த தத்துவ மரபு மேலெழுந்து நின்றதால்தான் எங்கள் தலைவர் கேட்டார், கட்டை விரலை காணிக்கையாய் கேட்டால் பட்டை உரியும் என்று! ஆம் உரித்திருக்கிறோம்! இனத்தால் உயர்ந்தவனென்று சொன்னபோது, திராவிடனை சக மனிதனாய் மதி என்று பட்டை உரித்திருக்கிறோம்! மொழிகளில் இந்தி தான் பெரிய மொழி என்று சொன்னபோது, இல்லையில்லை எங்கள் அன்னைத் தமிழுக்கு அந்த தகுதி இருக்கிற தென்று பட்டை உரித்திருக்கிறோம்! இந்திய ஒன்றிய அரசுதான் பெரிதென்று சொன்ன போது, தேசிய இன நிர்ணய உரிமையென்று நாங்கள் பட்டை உரித்திருக்கிறோம்!'' என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டார்!
(கருத்தரங்கம் தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/arivuthiruvella-2025-11-24-16-57-26.jpg)