கைவிடாத தி.மு.க... கரைசேர்ந்த சுதா! மயிலாடுதுறை வெற்றி ரகசியம்!

mayiladuthurai

dmk

தேர்தலுக்கு முதல் நாள்வரை இழுபறியில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெறுவார் என சொந்தக் கட்சிக்காரர்களே பேசிவந்த நிலையில், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி கூட்டணி பலத்தால் 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறார் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அறிமுக வேட்பாளர் சுதா.

தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் (தனி), மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார், சீர்காழி (தனி), மயிலாடுதுறை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி எப்பவுமே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதி. கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் வெற்றியை எளிதாகப் பெற்றுவிடும் தொகுதி என்பதால் எப்பாடுபட்டாவது மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் கேட்டுப் பெற்றுவிடும். கடந்த முறை தி.மு.க. நேரடியாகப் போட்டியிட, செ.ராமலிங்கம் 2,61,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்தமுறை இந்த தொகுதியை பிடிவாதமாக கேட்டுப்பெற்றது காங்கிரஸ். அதேநே

இந்தமுறை இந்த தொகுதியை பிடிவாதமாக கேட்டுப்பெற்றது காங்கிரஸ். அதேநேரம், வேட்பாளரை உடனடியாக அறிவிக்கமுடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல்நாள் இரவு சுதாவை வேட்பாளராக அறிவித்தனர். தமிழகத்திலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்று காங்கிரஸ்காரர்களே கிண்டலடித்தனர். அவசரகதியில் வேட்புமனு செய்தது, அறிமுகமில்லாத வேட்பாளர், பணபலமில்லாதவர் என பல்வேறு காரணங்களைக்கூறி காங்கிரஸ் கட்சியினர் புலம்பித்தீர்த்தனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளும் கிளம்பியது. சுதா துவண்டுபோகாமல் கூட்டணி பலம் தனக்கு கைகொடுக்கும் என முழுமையாக நம்பி பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில், ""எனக்குன்னு குடும்பம் இல்ல, உங்களை நம்பிவந்துட்டேன், இனிவரும் காலம் உங்களுடனே கழிச்சிட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்''’என பெண்களிடமும், பட்டியல் சமூகத்து மக்களிடமும், இஸ்லாமிய மக்களிடமும் கண்கலங்கிப் பேசியது பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற உதவிசெய்தது.

மயிலாடுதுறை தொகுதியைப் பொறுத்தவரை தலித் சமூகத்திற்கு அடுத்து வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிப்பதால், ஒவ்வொரு கட்சியும் வன்னியர்களையே வேட்பாளர்களாகத் தேர்வுசெய்தது.

இதனால் ஆரம்பத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என பேசப்பட்ட சுதா, இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற காரணம் என்ன என தேர்தல் பணிக்குழுவிலிருந்த தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம், ""மயிலாடுதுறை தொகுதியைப் பொறுத்தவரை வெற்றியை நிர்ணயிக்கிற சமூகமாக வன்னியர் சமூக மக்களின் வாக்குகள் இருப்பதாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் அது முற்றிலும் மாறிவிட்டது. தலித் சமூகத்தினரும், இஸ்லாமிய சமூகத்தவருமே வெற்றியை நிர்ணயித்துள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிக்கப்பட்டது அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை. அவர்கள் முழுமையாக களத்தில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அறிமுகமில்லாதவர், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர், செலவு செய்ய பணவசதியில்லாதவர் என பலவகையிலும் காங்கிரஸ்காரர்களே புரளியைக் கிளப்பினர். அதற்கேற்ப சுதாவிடம் எதிர்பார்த்த பணமும் கிடைக்கவில்லை. பெரிய அளவில் பூத் செலவுகள்கூட செய்யாமல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் என்பதுதான் நிதர்சன உண்மை.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்களான தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதனும், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜ்குமாரும் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யரின் ஆதரவாளர்கள் என்பதைத் தாண்டி, அவர்கள் எதிர்பார்த்த பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட்டால் பணம் புரளும் என எதிர்பார்த்திருந்தனர். மயிலாடுதுறை தி.மு.க. மாவட்டச் செயலாளர் தேர்தல் சமயத்தில் உடல்நலம் சரியில்லை என்றபோதும் பணத்தை இறக்கி கட்சிக்காரர்களை முடுக்கிவிட்டு வேலை வாங்கினார். சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தொகுதியில் சுழன்றடித்துக்கொண்டே இருந்தார். அதேபோல அரசு கொறடா கோவி.செழியனும், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரமும் தூக்கத்தை இழந்து வேலைபார்த்தனர்.

இவையெல்லாம் தாண்டி வி.சி.க.வினரும், இஸ்லாமியர்களும் கிராமப்புறங்களில் மோடியின் மோசடி அரசியலைக் கொண்டு சேர்த்தனர். அதோடு சுதாவின் பிரச்சாரமும் கிராமத்தில் எடுபட்டது. மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவரும், நகரச் செயலாளருமான செல்வராஜ் அதிக முக்கியத்துவம் கொடுக்கல. அதை நகர துணைச் செயலாளர்கள் பேலன்ஸ் செய்தனர். கடந்த தேர்தலைவிட, இந்தமுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்த தேர்தலில் 80,833 வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் ராமலிங்கம் 5,99,292 வாக்குகள் பெற்றார், இந்த முறை சுதா 5,18,459 வாக்குகளே பெற்றார். வாக்குகள் குறைவாகப் பெற தி.மு.க.வில் பொறுப்பிலுள்ள வன்னியர்கள் பா.ம.க. வேட்பாளரான மு.க.ஸ்டாலினுக்கு மறைமுகமாக ஆதரவுகொடுத்ததுதான் காரணம். தமிழக முதல்வரின் திட்டங்களும், மோடியின் எதிர்ப்பும், கூட்டணி பலமும் சுதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது''’என்கிறார்.

வலுவில்லாத கூட்டணியால் அ.தி.மு.க. வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளுடன் டெபாஸிட்டை மட்டும் கைப்பற்றிக் கொள்ள, டெபாஸிட் இழந்தாலும் 1,27,642 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் காளியம்மா கவனம் ஈர்த்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe