கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் கோவிந்தராஜ். கடலூர் எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்குச் சொந்தமான ‘காயத்ரி கேஷ்யூஸ் தொழிற் சாலையில் பணியாற்றி வந்தவரின் திடீர் மரணம் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் நம்மிடம், "எனது அம்மா இறந்துவிட்டார். நான் 20 ஆண்டுகளாக சென்னையிலேயே வேலை செய்கிறேன். இந்த வீட்டில் எனது அப்பா மட்டுமே தனியாக வசித்து வந்தார். கடந்த 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, (விடிந்தால் 20-ஆம் தேதி திங்கள்) நன்றாக அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தேன். அதிகாலை 2:15 மணியளவில் எனது அப்பாவின் செல்போனிலிருந்து போன் வந்தது. ‘இந்த நேரத்தில் ஏன் போன் செய்றார்’ என்ற சந்தேகத்துடன் கால் அட்டண்ட் பண்ணினேன்.
கடலூர் எம்.பி. ரமேஷின் பி.ஏ. நடராஜன் பேசினார். ‘நீ கோவிந்தராஜின் மகன்தானே...? என கேட்டவர், "உன் அப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இப்போ அவரது உடல் பண்ருட்டி ஜி.ஹெச்ல இருக்கு''’என்று கூறினார். ‘என்ன நடந்தது? எங்கப்பா தற்கொலை செய்துகொள்ளமாட்டாரே…’ என்று நான் கேட்டுமுடிப்பதற்குள் அவர் போனை கட் பண்ணிவிட்டார். உடனே பண்ருட்டி ஜி.எச்.சுக்குப் போனோம். அங்கே 10 பேரு இருந்தாங்க, கோவிந்தராஜுவின் உடல் வராண்டாவில் போடப்பட்டிருந்தது. முகம், கழுத்து, உடல் முழுவதும் ரத்தக் காயங்கள்.
அப்பா கடலூர் எம்.பி ரமேஷ் பேக்டரியில் 7 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். எந்த கெட்ட பெயரும் இல்லை. கொரோனா காலத்தில் அவர் மட்டுமே ஆலையை பார்த்துக்கொண்டார். அவருக்கும், அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் குறைந்த சம்பளமே கொடுத்து வந்ததாகவும், ‘குறைவான சம்பளத்தில் எப்படி வேலை பார்க்க முடியும்?, "ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள்'’ என்று எம்.பி.யிடம் கேட்டிருக்கிறார். அதற்கு எம்.பி. ரமேஷ், ‘"நீ என்ன கோஷ்டி சேர்த்துக்கிட்டு பிரச்சினை பண்றியா?'… என்று மிரட்டியதாக எங்கப்பா என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இப்படி மற்ற தொழிலாளர்களுக்காகவும் வாதாடிய எங்க அப்பாவின் மீது வீண்பழி சுமத்தி எம்.பி.ரமேஷும், அவரது ஆட்களும் அடித்து சித்ரவதை செய்து, கொலை செய்திருக்கிறார் கள். இதனை மறைக்க எங்கப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்கள். விசாரணை தொடங்குவதற்குள் ளாகவே ‘போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும். கையெழுத்து போடு’ என போலீஸார் மிரட்டுகிறார்கள். அப்பாவின் மரணத்தில் உண்மை வெளிப்படவேண்டு மானால் சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என உயர்நீதி மன்றத்தில் மனு போட்டிருக் கிறோம்''”என்று கூறி அழுதார்.
இதுகுறித்து பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து கோ.ஜெகன், “"கோவிந்தராஜ் திருடியிருந்தால் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு புகாரளித் திருக்கலாமே? காவல்துறையும் நாடகமாடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவேதான் தமிழ்நாட்டில் இல்லாமல் புதுச்சேரி ஜிப்மரில் உடற்கூராய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எம்.பி.யின் நிறுவனத்தில் இதற்கு முன்பாகவும் 3 பேர் மர்மமான முறையில் மரணமடைந் துள்ளதாக புகார்கள் எழுகின்றன''’என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷிடம் கேட்டதற்கு, “"கோவிந்த ராஜ் படிப்படியாக, சுமார் 80 லட்சம் அளவுக்கு முந்திரி திருடியுள்ளார். அதை ஊர் பஞ்சாயத்தில் விசாரிக் கப்போகிறோம் என கூறினோம். அதனால் அவமானம் தாங்காமல் பாத்ரூமில் சென்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதுதான் நடந்தது. மற்றபடி நாங்கள் யாரும் அடிக்க வில்லை''’என்று கூறினார்.
எம்.பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன் மற்றும் அல்லாபிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் மீது குற்ற எண் 562/2021, ம/ள் 174(1) ஸ்ரீழ் ல்ஸ்ரீ என்ற பிரிவின் கீழ் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மரணமடைந்தவர் பா.ம.க என்பதாலும், அவர் பணியாற்றிய ஆலை உரிமையாளர் தி.மு.க. என்பதாலும் கடலூர் மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது.
_______________________________________
இறுதிச்சுற்று!
அதிரடிப் பயணம்! எதிரடி அறிவிப்பு!
கவர்னராகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் ஆர்.என்.ரவி, டெல்லிக்குப் பயணித்திருப்பது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பியுடனான ஆலோசனை, மணல் டைரியில் இந்நாள் மந்திரி உள்பட பலரது பெயர் போன்றவற்றை தனது இரண்டு நாள் பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆர்.என்.ரவி விவரிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முன், நாகலாந்து கவர்னராகவும், அங்குள்ள போராளி அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப் பவராகவும் ரவி இருந்து வந்தார். அவருடைய முன்னெடுப்பை அங்குள்ள சில அமைப்புகள் ஏற்காமல் இருந்தன. இந்நிலையில், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி, நாகலாந்து பேச்சுவார்த்தை பொறுப்பையும் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பதில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் டெல்லியில் விவாதிக்கப்பட இருக்கிறது. கவர்னரின் டெல்லிப் பயணம் உறுதியான முதல்நாளே, தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஙஹக்ங் ண்ய் ஒய்க்ண்ஹ என்பது போல ஙஹக்ங் ண்ய் பஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற நிலை ஏற்றுமதித்துறையில் உருவாக வேண்டும்''”என அறிவித்தது டெல்லிவரை அதிரடியைக் கிளப்பியுள்ளது.
-கீரன்