Advertisment

ராங்கால் கண்காணிக்கப்படும் தி.மு.க எம்.எல்.ஏக்கள்! முதல்வருக்கு ஷாக் தந்த ரிப்போர்ட்!

ss

"ஹலோ தலைவரே, உளவுத்துறை சம்பந்தமான செய்தியோடு வந்திருக்கேன்.''

"அந்தத் துறை பற்றி நாம பல முறை பேசியிருக்கோம். இப்ப என்ன நியூஸ்?''

"தமிழகம் முழுக்க ஆளுங்கட்சித் தொகுதிகளில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அழைத்த, உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. சரவணன் உள்ளிட்டோர் கொண்ட குழு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை எப்படி இருக்குது? அவர்கள் என்னென்ன தவறுகளைச் செய்யறாங்க? அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன இருக்குன்னு விசாரிச்சி, ரிப்போர்ட் தயாரிக்குதாம்.''

"முதல்வர் துறையாச்சே.. அவர் ரியாக்ஷன் என்ன?''

Advertisment

stalin

"மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதற்காக மாவட்டவாரியாக சுற்றுப் பயணம் செய்து வரும் முதல்வரின் காதுக்கு, இந்தத் தகவல் போயிருக்கு. அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறை உயரதிகாரிகள் சிலரை அழைத்து சீக்ரெட் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, தமிழக உளவுத்துறை ராஜ் பவனுக்காகத்தான் இந்த ரிப்போர்ட்டை எடுக்குதாங்குற சந்தேகமும் அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்டி ருக்கு. இந்த செயல்பாட்டுக்கு தன் கண்டனத்தையும் அதிருப்தியையும் அவர்களி டம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர், சமீபகாலமாகவே உளவுத்துறையின் போக்கு சரில்லை. இதை அனுமதிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக் காங்க. இதனால் விரைவில் உளவுத்துறையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்ற பேச்சு ஐ.பி.எஸ். வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.''”

"ராஜ்பவனின் நடவடிக்கைகள், சந்தேகத் துக்குத் தூபம் போடற மாதிரி இருக்குதே?''”

rr

Advertisment

"ஆமாங்க தலைவரே, தி.ம

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. அரசுக்கு எதிரான தகவலைத் தொடர்ந்து கவர்னருக்கு அனுப்புவதை பா.ஜ.க. அண்ணாமலையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி, அவர் அனுப்பும் தகவல்களோடு, தான் திரட்டி இருக்கும் செய்திகள் ஒத்துப்போகுதான்னு சரிபார்த்து, அதன் பிறகே, அதை வாரம்தோறும் டெல்லிக்கு கவர்னர் அனுப்புகிறாராம். அந்த வகையில் கவர்னர் சமீபத்தில் டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், நான் எந்தத் தகவலைக் கேட்டாலும், அரசு அதிகாரிகள் அதைத் தராமல் தாமதப்படுத்தறாங்கன்னு, தமிழக அரசு மீது ரிப்போர்ட் பண்ணியிருக் கிறாராம். இதையெல்லாம் தெரிந்துகொண்ட அரசு அதிகாரிகள், எந்தத் தகவலைக் கொடுத்தாலும், அதை தமிழக அரசுக்கு எதிரானதாக கவர்னர் மாற்றிக்கொள்கிறார் என்று புலம்பறாங்க. இந்த நிலையில் 8-ந் தேதி இரவு கவர்னர் ரவியை சந்தித்திருக்கிறார் பா.ஜ.க. அண்ணாமலை.''”

"ம்..''”

"தலைவரே.. முதல்வர் இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பல தரப்புப் பிரபலங்களையும், பொதுமக்களையும் சந்திப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குகிறார். அவரால் நேரடியாகக் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவும், உட்கட்சி விவகாரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் நேரம் போதலையாம். கட்சியின் ஒன்றிய அமைப்புத் தேர்தல் இன்னும் முழுசா முடியாத நிலையில், கட்சி விவகாரங் களைக் கவனிக்க துரைமுருகன், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, டிகே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை அமைத்திருக்கிறார். இவர்களும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பணிகள், கட்சி நிர்வாகத்தில் உள்ள மற்ற பணிகள்னு பிஸியா இருப்பதால், எளிதாக அணுகித் தங்கள் பிரச் சினைகளைச் சொல்ல முடிவதில்லையாம்.''”

"சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, மாஜி அ.தி.மு.க. மந்திரி வேலுமணி மீது ஊழல் வழக்கைப் பதிவு செய்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவருடன் சேர்ந்து ஊழலில் திளைத்தவர்கள் என்று 12 அதிகாரிகள் மீதும் வழக்கைத் தொடர்ந்திருக்கின்றனர். இவர்களில் 4 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். வழக்கில் சிக்கிய இந்த அதிகாரிகள் அனைவரையும் அந்தந்த இடத்திலேயே விட்டுவைக்கக் கூடாதுன்னு முடிவெடுத்த அரசு, அவர்களில் மதுரை மாநகராட்சியில் இருந்த அரசுவை கோவைக் கும், சேலம் மாநகராட்சியில் இருந்த அசோகனை திருவண்ணாமலைக்கும், ஈரோடு மாநகராட்சியில் இருந்த பாஸ்கரனை திருநெல்வேலிக்கும் என, அத்தனை பேரையும் டிரான்ஸ்பரில் தூக்கியடித்தது. இவர்களில் சென்னை மாநகராட்சியில் தலைமைப்பொறி யாளராக இருக்கும் நந்தகுமார் மட்டும் தனது செல்வாக்கால் இந்த நடவடிக்கையில் இருந்து தப்பித்திருக்கிறார். அவர் இப்போது, நான் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியையும், தலைமைப் பொறியாளர் பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரனையும் மாற்றிக்காட்டறேன்னு சவால் விட்டு வருகிறாராம்.''”

rr

"வேலுமணி தரப்பில் கிடைத்துவரும் ஆவணங்கள் அதிகாரிகளையே திகைக்க வைக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு பக்கம் வேலு மணியின் ஊழல் விவகா ரங்களைத் தோண்டித் துருவி வருது. அதில் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு பங்களாவில் கிடைத்த ஆவணங்களில் சில, கொடநாடு பங்களா வில் கொள்ளை போன ஆவணங்களாக இருக்கலாம்னு நினைக்குதாம். இதில் சிலவற்றை ஒன்றிய அரசின் வரு மான வரித்துறைக்கும் இது கொடுத்திருக்கு தாம். அதேபோல் வரு மான வரித்துறையும் இன்னொரு பக்கம் வேலுமணி தரப்பைக் குடையுது. அவரோடு, அவருக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர், பிரபல கட்டுமான நிறுவன அதிபரான செய்யா துரை உள்ளிட்டவர்களைக் குறிவைத்து, தன் துழாவலை நடத்துது. வேலுமணி விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிரான ஆவணங்களும், கொட நாடு ரகசியங்களும் பதுங்கி இருக்குதாம்.''”

"மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்னு பா.ஜ.க. தரப்பில் இருந்து குரல் எழுந்திருக்கே?''”

"கடந்த 10-ஆம் தேதி வேலூரில் தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம், அண்ணாமலை தலைமையில் நடந்தது. பா.ஜ.க.வின் எதிர்கால செயல்திட்டங்கள், தி.மு.க. ஆட்சியின் நிர்வாகம், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்கள் உள்பட பல்வேறு விசயங்கள் இதில் விவாதிக்கப்பட்டி ருக்கு. அதேபோல், தமிழகத்தின் இயற்கை வேளாண் விஞ்ஞானியான மறைந்த நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றையும் இதில் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கிடையே மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்னு அ.தி.மு.க. ஏற்கனவே மோடியிடம் கோரிக்கை வைத்து வருகிறது. இறந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்குவது நிறுத்தப்பட்டிருந் தாலும், தமிழ்நாட்டு அரசியலில் உள்நுழைய விரும்பும் பா.ஜ.க. தரப்பு, நம்மாழ்வார் பெயரை பரிசீலிக்குதாம்.''”

"மீண்டும் கார்த்திக் சிதம்பரம் வீட்டை சி.பி.ஐ. முற்றுகையிட்டிருக்கே?''”

"சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் ரெய்டு நடத்தியது. இதில் கார்த்தியின் நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், கார்த்திக் சிதம்பரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப் பட்டனர். இவர்களில் பாஸ்கர் கைது செய்யப் பட்டார். இந்த நிலையில் மீண்டும் 9-ந் தேதி திடீரென கார்த்தியின் வீட்டில் அதிரடியாக நுழைந்தது சி.பி.ஐ.! கடந்த ரெய்டின் போது திறக்கப்படாத ஒரு பீரோவைக் குறிவைத்தே அவர்கள் வந்தனராம். அதற்கான சாவியை வைத்திருந்த கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி, வெளிநாட்டில் இருந்து திரும்பிய செய்தி கிடைத்துதான் அவர்கள் அதிரடியாக முற்றுகை இட்டிருக்கிறார்கள். அந்த பீரோவில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்த நிலையில், சீன விவகாரம் குறித்து மட்டும் எந்தத் துருப்பும் கிடைக்கலையாம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக் குழுவை நடத்துவதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருந்த எடப்பாடித் தரப்பு, இதற்கு எதிராக ஓ.பி.எஸ்., சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அதே 11-ந் தேதி காலை அறிவிக்கப்படும்னு சொல்லப் பட்டதால், முதல்நாள் இரவு முழுக்கத் தூங்காமல், சட்ட நெருக்கடி வந்தால் என்ன செய்வதுன்னு திரும்பத் திரும்பக் கூடி ஆலோசித்தபடியே இருந்தது. அதேபோல் இந்தமுறை பொதுக்குழுவுக்கு வரும் உறுப் பினர்களுக்கான அடையாள அட்டையை, நவீன தொழில் நுட்ப அடிப்படையில் கியூ ஆர் கோட் மூலம் உருவாக்கி இருந்ததால், இதைப் பரிசோதிப்பதற்காக 15 ஸ்கேனர்கள் வைக்கப்பட்டன. இவற்றை தொழில் நுட்ப ஆட்கள், முதல்நாள் இரவு முழுக்க சரிபார்த்தபடியே இருந்தனர்.''”

nkn130722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe