Advertisment

ராங்கால் தி.மு.க. பவர் சென்டர்களை சந்தித்த வேலுமணி! எடப்பாடி ஷாக்! கூடுதல் சீட் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்! தி.மு.க. சமாளிக்குமா?

ss

"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க, அனைத்து அரசியல் கட்சிகளிலும் பரபரப்பான காட்சிகளைப் பார்க்க முடிகிறது.''”

"ஆமாம்பா, இந்த நேரத்தில் தி.மு.க.வில் மாறன் சகோதரர்களான, கலாநிதி மற்றும் தயாநிதிக்கு இடையே சொத்து தொடர்பான சகோதர யுத்தமும் வெடித்திருக் கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அண்ணன் கலாநிதிக்கு, தம்பி தயாநிதி அனுப்பியுள்ள சட்டரீதியிலான நோட்டீஸ், அரசியல் ரீதியாகவும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. இது, இந்திய தொழிலதிபர்கள் வட்டாரத்திலும், பங்கு வர்த்தகம் தொடர்பான வட்டாரங்களிலும் கூட அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. கலாநிதிக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக் கிறார் தயாநிதி. ஸ்டாலினோ, ’இது உங்கள் தொழில்ரீதியிலான விவகாரம். இதில் நான் தலையிடுவது ஆரோக்கியமாக இருக்காது’என்று சொன்னா ராம். தி.மு.க.வில் இருக்கும் ஒருசில சீனியர்களோ, இந்த விவகாரத்தை ரசிக்கிறார்களாம். இந்த நிலையில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக இதில் இருக்கும் விசயங்கள் குறித்து, மத்திய நிதி அமைச்சகமும், மத்திய உளவுத்துறை யும் ஆராய்ந்து, பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சீக்ரெட் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். இதையறிந்த ஸ்டாலின், இப்போது மாறன் சகோதரர்களிடம் சமாதானம் பேச ஆரம்பித்திருக்கிறாராம்.''”

Advertisment

ss

"அரசியல் புள்ளிகள் பலரும் ஏலக்காய் வர்த்தகத்தில் முதலீடு செய்துவருகிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே.. பெரும்பாலான இந்நாள், முன்னாள் மந்திரிகள் தொடங்கி, பவர்ஃபுல் அரசியல் புள்ளிகள் பலரும் ஏலக்காய் வர்த்தகத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு, கொள்முதலில் எப்படி வணிகவரித்துறையை ஏமாற்றி, கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என வர்த்தக சூதாடிகள் வழிகாட்டுகிறார்கள். நாட்டின் ஏலக்காய் தேவைக்கு, கேரளா இடுக்கி மாவட்டம் 70 சதவிகிதமும், தேனி மாவட்டம் 30 சதவிகிதமும் உற்பத்தி செய்து தருகின்றன. தமிழக அளவில் ஏலக்காய் ஏலம், போடியில்தான் நடைபெறுகிறது. இதில் பலரும் இறந்தவர்களின் பெயர்களில் நிறுவனங்களை ஆரம்பித்து, வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல், குறுக்கு வழியில் மோசடியில் ஈடுபட்டு கோடி கோடியாய் சுருட்டி வருகின்றனர். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இது குறித்து வழக்குகள் பல பதிவாகி இருந்தாலும், வரி ஏய்ப்பு மெகா மோசடி இன்றுவரை தொடர்கிறது. இந்த வர்த்தக சூதாட்டத்தை தலைமையேற்றுச் செய்வது போடியிலுள்ள "சிவனின்' பெயர் கொண்டவர். இவர் மூலமாகத்தான் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட சில அரசியல் புள்ளிகள் பணத்தை முதலீடு செய்து, வருமான வரித்துறையை ஏமாற்றி வருகிறார்களாம்.''”

Advertisment

"தி.மு.க. தலைமையில் சில மாற்றங்களை ஏற் படுத்த அக்கட்சித் தலை மை முயற்சிக்கிறது என் றும் தகவல் வருகிறதே?''”

"கட்சியின் முக் கிய

"கட்சியின் முக் கிய பதவிகளில் மாற்றம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். கட்சியின் தலைமைப் பொறுப்பு களில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் முக்கியமானவை. அதிகாரமிக்கவை. கட்சி யின் அனைத்துச் செயல் பாடுகளும் தலைவரின் உத்தரவின்படி, பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வெளியாகும். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் தலைவரும் பொதுச்செயலாளரும் ஆலோசித்து, விவாதித்து இறுதி முடிவை எடுப்பார்கள். அந்த வகையில், மறைந்த கலைஞரும், பேராசிரியரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு.க.வில் இயங்கினர். தற்போது தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாள ராக டி.ஆர்.பாலு ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில்தான் மாற்றத்திற்கான சிந்தனை ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது.''”

"மாப்பிள்ளை மூலம், இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலவரே.. கடந்த வாரம் மாப்பிள்ளை, அமைச்சர் துரைமுருகனை அழைத் திருக்கிறார். அதன்பேரில் அவரை சந்திக்க துரை முருகன் சென்றபோது, சில காரணங்களால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதற்கிடையே, துரைமுருக னிடம் போனில் விவாதித்துள்ளார். அப்போது, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீங்கள் விலக வேண்டும் என தலைமை விரும்புகிறது. கருத்து வேற்றுமை இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஒப்படையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் துரைமுருகன். காட்பாடியிலிருந்து விரைந்து சென்னைக்கு வந்தவர், ஸ்டாலினை சந்திக்க முயற்சித்துள் ளார்... வாய்ப்பு அமையவில்லை. வேறுவழி இல்லாததால், துரைமுருகன், இதற்கான விலகல் கடிதத்தை விரைவில் ஸ்டாலி னிடம் ஒப்படைப்பார் என்கிறது அறிவாலயத் தரப்பு. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதி தி.மு.க.வில் புதிய பொதுச்செயலாளராக டி.ஆர்.பாலுவும் பொருளாளராக எ.வ.வேலுவும் பதவி ஏற்கலாம் என்கிற தகவலும் இப்போது தி.மு.க.வில் சிறகடிக்கிறது.''”

"அமைச்சர் நேருவின் சகோதரர் மீது நில மோசடி வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே?”

"அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிவண்ணன் மீது, ஸ்ரீரங்கம் அன்னதான சத்திரத்தைச் சேர்ந்த செட்டியார் மரபினர் நில மோசடிப் புகாரோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருகிறார் கள். தங்கள் அன்னதான சத்திரத்துக்குச் சொந்தமான 800 ஏக்கர் இடத்தில் 40 ஏக்கரை, அமைச்சரின் தம்பி மணிவண்ணன், அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து, வெறும் 50 லட்ச ரூபாய்க்கு கிரயம் செய்துகொண்டிருப்ப தாக அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இதற்கான பத்திரப் பதிவு, மணிவண்ணன் வசிக்கும் கோவையிலேயே நடந்திருக்கிறதாம். இதைத்தொடர்ந்து மணிவண்ணன் தொடங்கி, இந்த மோசடிக்கு உதவிய அதிகாரிகள்வரை அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதாம். இந்த விவகாரத்தில் அமைச்சர் நேருவிற்கும் சிக்கல் வரலாம் என்கிறார்கள்.''”

"தி.மு.க. தலைமைக் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களை மாஜி அ.தி.மு.க. மந்திரி வேலுமணி சந்தித்ததாகச் சொல்கிறார்களே?''”

ss

"டாஸ்மாக் விவகாரத்தில் சிக்கி, அமலாக்கத்துறையால் தேடப்பட்டுவந்த தி.மு.க. தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர் கள், இப்போது சென்னை திரும்பிவிட்டார்களாம். அமலாக்கத்துறை யின் நடவடிக்கைகளுக்கு இவர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றிருக்கும் சூழலில், இவர்களில் ஒருவரை அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி சீக்ரெட்டாக சந்தித்திருக்கிறார். அப்போது, தனது டெல்லி செல்வாக்கை வைத்து, அவர்கள் மீதான அமலாக்கத்துறை யின் நடவடிக்கை மேற்கொண்டு நகராதபடி பார்த்துக்கொள்வதாக, அவர் உறுதி கொடுத்திருக்கிறாராம். இதையறிந்த எடப்பாடி ஷாக்காகி விட்டாராம். இந்த சந்திப்பு விவகாரம் தி.மு.க. -அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"பெண் அமைச்சரை தி.மு.க.வினரே முற்றுகையிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்களே?''”

"தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க., தனது கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கட்சி அமைப்புகளான நகரங்கள், ஒன்றியங்கள் ஆகியவற்றைப் பிரித்து, அவற்றுக்குப் புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம் ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க.வினை பிரித்து, இவற்றில் 9 பஞ்சா யத்துகளை கிழக்கு ஒன்றியமாகவும் 7 பஞ்சாயத்துகளை மேற்கு ஒன்றியமாகவும் வகைப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே ஒ.செ.வாகப் பதவி வகித்த எஸ்.வி.செந்தில்குமாரை கிழக்கு ஒ.செ.வாகவும், கொளத்துப்பாளையம் பேரூராட்சியின் துணைத் தலைவரான கே.கே.துரைசாமியை மேற்கு ஒன்றிய செயலாளராகவும் தி.மு.க. தலைமை நியமித்தது. ஆனால் செந்தில்குமார் ஆதரவாளர்களோ மேற்கு ஒ.செ. துரைசாமியை மாற்றவேண்டும் என்று முரண்டு பிடிப்பதோடு, கடந்தவாரம் மூலனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரமியம் கிராமத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்க வந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜை முற்றுகையிட்டு, கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இது திருப்பூர் மேற்கு மா.செ.வாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் சாமிநாதனுக்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.''”

"தி.மு.க.வுக்கு எதிரான குரலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலமாக எழுப்பிவருகிறார்களே?''

"உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் மூத்த நிர்வாகிகளும், மாவட்டத் தலைவர்களும் தி.மு.க.விடம் அதிக சீட்டுகள் கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம்’ எனத் தொடர்ச்சியாக பொது வெளியில் பேசி, நெருக்கடி கொடுத்துவருகின்றனர். சத்தியமூர்த்திபவனில், மேலிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களிலும் இதே குரல்களை எழுப்பும் அவர்கள், "இதையெல்லாம் திமுக மறுத்தால், நாம் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறலாம். விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்'’என்றும் ஆவேசமாகக் கூறி வருகின்றனர். இப்படிப் பேசும் நிர்வாகிகளை கட்சியின் மாநிலத் தலைவரான செல்வப்பெருந்தகை சமாதானப்படுத்த முயற்சிக்கும் போது ’உங்களுக்கு என்னங்க... நீங்க தி.மு.க. மேலிடத்தில் நெருக்கத்தை வைத்துக்கொண்டு ஏகப்பட்டதை சாதித்துக் கொள்கிறீர்கள். தொழிற்சாலைகளில் கிடைக்கும் ஸ்கிராப் கான்ட்ராக்ட் தொடங்கி எல்லா துறைகளிலும் ட்ரான்ஸ்ஃபர் வரை காரியம் சாதிச்சுக் கிறீங்க. ஆனால், எங்களுக்குதான் எதுவும் நடக்கமாட்டேங்குது'’என்று அவரையும் திகைக்க வைத்தார்கள்.''”

"அதனால்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.களுடன் தி.மு.க. மேலிடத்தை அண்மையில் செல்வப்பெருந்தகை சந்தித்தாரா?''”

ss

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸில் எழும் எதிர்ப்புக்குரலை அடக்கும் முயற்சியில் இறங்கிய செல்வப்பெருந்தகை, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 17 பேரையும் அழைத்துக் கொண்டு, தி.மு.க.வின் மேலிடத்தை சந்தித்தார். அப்போது எம்.எல். ஏ.க்களின் ஆதங்கத்தை அங்கே விவரித்திருக் கிறார். இதனையடுத்து, மேலிடத்தின் அடுத்த நிலை அதிகார மையத்தையும் சந்தித்தனர். நீண்ட ஆலோசனை நடந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரசின் "கோரிக்கை'யை நிறைவேற்றுவது குறித்து உறுதி தரப்பட்டது. இதன்பயனாக, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அமைச்சரையும் சந்தித்து ட்ரான்ஸ்ஃபர் உட்பட பல காரியத்தையும் சாதித்தபடி இருக்கிறார். காலையில் எழுந்ததுமே இன்றைக்கு எந்தெந்த அமைச்சரை சந்திக்கலாம்? அவர்களிடம் என்ன கோரிக்கை வைக்கலாம்? என பட்டியலிட்டுக் கொண்டு அவர்களை சந்திப்பதை வாடிக்கை யாகவே வைத்திருக்கிறார். இவரைப் போலவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காரியம் சாதித்துவருகின்றனர். இருந்தும் இவர்கள் இன்னும் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான குரலை எழுப்பியபடியேதான் இருக்கிறார்கள்.''”

"ம.தி.மு.க.வும் கூடுதல் சீட் கேட்டு, தங்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறதே?''”

ss

"ம.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் 22 ஆம் தேதி ஈரோடில் நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதி களை தி.மு.க. கூட்டணியில் பெற்ற அக்கட்சி, இப்போது கூடுதல் சீட் கேட் போம் என்று தீர்மா னம் நிறைவேற்றி யிருக்கிறது, இதைத் தொடர்ந்து ’தி.மு.க. விடம் 10 சீட்வரை கேட்போம். அதே சமயம் ஆட்சியில் பங்கு கேட்கமாட் டோம்’ என்று அறிவித்திருக்கிறார் வைகோ. இதேபோல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனைக் கட்சிகளும் இந்த முறை கூடுதல் சீட் கேட்பதில் உறுதியாக இருக்கின்றன. இதை எப்படி தி.மு.க. மேனேஜ் செய்யப்போகிறது என்று எதிர்க்கட்சிகள் புன்னகையோடு கவனிக்க, தி.மு.க. தலைமையோ, இந்தமுறை காங்கிரஸுக்குக் கொடுக்கும் சீட்டுகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டு, மற்றக்கட்சிகளுக்கு கூடுதலாகக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம். இந்த மேனேஜிங் டெக்னிக் குறித்து, தேர்தல் நெருக்கத்தில் ராகுல் காந்தியிடமே பேச திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.''”

"சென்னை கிண்டியில் குழந்தைகளு க்கெனவே பிரத்யேக மருத்துவமனை கட்டப்படப் போறதா சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்திருக்கிறாரே''”

"ஆமாம்பா, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலே கூடுதலாக ஆறரை ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் மருத்துவத்துக்கான உயர் வசதிகளுடனான மருத்துவமனையை அமைக்க தமிழக அரசு திட்டமிடுது. இதற்காக ரூ.487 கோடி ஒதுக்கப்பட்டிருக்காம். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மருத்துவம், இரைப்பை குடல் மருத்துவம், எலும்பியல், இதயவியல் சிறப்பு சிகிச்சைகளும் இங்கே கிடைக்குமாம். இன்னும் இரண்டு வருடத்தில் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமெனவும் அவர் தெரிவித் திருக்கார். இந்த மருத்துமனை கட்டுமானத்தை வரும் செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறாராம்.”

rr

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை சிவனின் பிரகாசம் எனும் பெயர் கொண்ட ஒரு சபாரி சூட் ஆசாமி, தனக்கு சம்பந்தமே இல்லாத காவல்துறையை, ஆட்டிவைத்து வருகிறார். விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இவருக்கு காவல்துறையில் உள்ள அதிகாரிகள் பலரும் சல்யூட் அடித்து வருகிறார்கள்.சமீபத்தில் அங்குள்ள ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒரு ரைட்டர், "எங்கிட்ட பணம் வாங்கினீங்களே, எனக்கு எப்போது இடமாறுதல் வரும்?' என அந்த நபரிடம் கேட்க, கடுப்பான அந்த நபர், அந்த ரைட்டரை தனது செல்வாக்கால் வேறொரு இடத்திற்கு தூக்கி யடித்துவிட்டாராம். இந்த நிலையில் மாநகர காவல் உயரதிகாரிக்கும் அந்த நபருக்கும் லடாய் ஏற்பட, அவரை இன்னும் 3 மாதத்தில் மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறாராம் அந்த சபாரி நபர்.''

_____________

சின்னக்குத்தூசி நினைவு விருதுவிழா!

ss

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி 91-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21, 2025 அன்று மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் திராவிட இயக்க சிந்தனையாளர் செல்வேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1 லட்ச ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. விருதினை தமிழ்த் தேசிய இயக்க நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ஐயா பழ.நெடுமாறன் வழங்கி கௌரவித்தார். விழாவுக்கு திராவிட இயக்க சிந்தனையாளர் க.திருநாவுக்கரசர் தலைமையேற்க, விழாவில் பங்கேற்கவந்த அனைவரையும் நக்கீரன் ஆசிரியர் வரவேற்றுப் பேசினார். விழா நிகழ்வு குறித்த விரிவான கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும்.

(-ஆர்.)

nkn250625
இதையும் படியுங்கள்
Subscribe