தேர்தல் பணிகளில் தொடர்ச்சியாக வேகம்காட்டி வருகிறார் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின். ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் ஆட்சிப் பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்தே அவரது விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சூழலில், "தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' எனும் சூளுரையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான மக்கள் மூவ்மெண்ட்டாக மாற்றும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திவருகிறார் ஸ்டாலின். 

Advertisment

அண்மையில், தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், "தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரனை அடிச்சிக்க ஆளே கிடையாது'' என்று பெருமிதமாகச் சொன்னார். அந்த பெருமிதம் அவரிடமிருந்து 1 சதவீதம் கூட குறைந்து விடாதபடிக்கு மா.செ.க்கள் களத்தில் செயலாற்றி வருகின்றனர். 

தேர்தல் பணிகளில் முக்கியமானதாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதம் வாக்காளர்களை தி.மு.க.வின் உறுப்பினர்களாக் கும் திட்டத்திற்கு மதுரையில் நடந்த மாநாட்டில் அடித்தளம் போடப்பட்டது. அதன்படி, "ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தமிழகம் முழுவதும் தொடங்கப் பட்டது. தமிழகத்திலுள்ள 68,000 வாக்குச் சாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. உடன்பிறப்புகள் தீவிரப்படுத் தினர். 

குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசின் தமிழகத்துக்கு விரோதமான நடவடிக்கை களைச் சுட்டிக்காட்டி "தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணையுங்கள்' என்று பரப்பப்பட்ட பிரச்சாரம், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது.   அப்போது ஏற்பட்ட சட்ட நெருக்கடி களையும், பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு பணியாற்றியதில் 1 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 2 கோடி உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். 

Advertisment

இதன் தொடர்ச்சியாக, அண்ணா பிறந்தநாளில் (செப்-15), ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த 1 கோடி குடும்பங்களை இணைத்து, 68,000 வாக்குச்சாவடிகளிலும், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் எனும் சூளுரை உறுதியேற்பு கூட்டங்களை நடத்தியது தி.மு.க. சென்னையில் அறிவாலயத்தில் இந்த உறுதியேற்பை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.  

அப்போது, தமிழ்நாட்டின் நாடாளு மன்றத் தொகுதிகளின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்த மோசடி மூலம் தமிழ் நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும், தமிழகத்தின் மொழி, பண்பாடு, பெருமைகளுக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டேன் என்றும், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதியை பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும் தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பல பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க.வினரை 68,000 பூத்களிலும் உறுதிமொழியேற்க வைத்தார் ஸ்டாலின். 

"தலைகுனிய விடமாட்டேன்' எனும் இந்த மூவ்மெண்ட் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல; மத்தியில் ஆளும் நரேந்திரமோடியின் பா.ஜ.க.வுக்கு கிலியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த உறுதியேற்பு இயக்கத்தின் தாக்கம் குறித்து மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பிய உளவுத்துறையினர், "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் எனும் பிரச்சாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கிராம அளவில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது. இந்த மூவ்மெண்ட்டுக்காக கையாளப்படும் மையப்பொருள், மக்களின் ஆதரவைப்பெறத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் களத்தில் சத்தமில்லாமல் முன்னேறிக்கொண்டி ருக்கிறது தி.மு.க.'”என்று தெரிவித்திருக்கிறார்கள்.  

Advertisment

மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்தின் வீரியம் குறைந்துவிடாமல் இருக்க,  அடுத்த கட்டத்தை நோக்கி தி.மு.க.வினரை நகர்த்தியுள்ளார் ஸ்டாலின். அதாவது, தி.மு.க.வில் .அமைப்பு ரீதியாக தற்போது 72 மாவட்டங்கள் இருக்கின்றன. அந்தந்த மாவட்ட கழகங்களில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் எனும் உறுதியேற்பு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு ஆகியவைகளை தீர்மானங்களாக ஏற்கும் கூட்டங்களை செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தி முடித்திருக்கிறார்கள். 

இதற்கிடையே, அமைச்சர்களை தொகுதி களுக்குள் பார்க்க முடியவில்லை என்கிற மக்களின் ஆதங்கம் பல மாவட்டங்களிலும் எதிரொலிப்பதும், ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். மக்களிடம் இருக்கும் ஆதங்கத்தை குறைப்பதற்கான வழிகள் ஆராயப்படுகின்றன. 

"தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்', "ஓரணியில் தமிழ்நாடு' ஆகிய முன்னெடுப்புகள், மக்களின் ஆதங்கத்தைத் தணிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இன்னும் மிச்சசொச்ச ஆதங்கங்களும், வரும் நாட்களில் களையப்பட்டு விடும் என்கின்றனர் உடன்பிறப்புகள். 

தேர்தலுக்கு முன்பு எந்தவொரு ஆளுங்கட்சியும் மக்களை தொடர்ச்சியாக சந்தித்ததில்லை. முந்தைய தேர்தல் காலங்களில் இது தி.மு.க.வுக்கு பொருந்தக்கூடியதுதான்.  ஆனால், தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க., மக்களை சந்திப்பதும் முன்னெடுக்கும் திட்டங் களும் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தும் அரசியலாக கணிக்கப்படுகிறது.