Advertisment

தி.மு.க. கூட்டணியை ஆதரித்தால் ஐ.டி. ரெய்டு! -பா.ஜ.க. அட்டாக்!

ss

ன்றிய அரசின் ஏவல்துறை என எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும்கட்சியாகவுள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அமைச்சர்களை, கட்சியின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, டெல்லி மாநில அமைச்சர்களைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் தி.மு.க. அமைச்சர்களையும் குறிவைத்துள்ளது என 2022, ஆகஸ்ட் 24-26 இதழில் செய்தி வெளியிட்டி ருந்தோம். இந்நிலையில் தமிழகத்தில் ஆளும்கட்சி தலைமை, அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள் மீது குறிவைத்து களமிறங்கியுள்ளது வருமான வரித்துறை.

Advertisment

dd

இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 26 சதவீதம். சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிறது தமிழக தோல் தொழிற்சாலைகள். தோல்பொருள் உற்பத்தி என்றால் அது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்தான். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழ

ன்றிய அரசின் ஏவல்துறை என எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும்கட்சியாகவுள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அமைச்சர்களை, கட்சியின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, டெல்லி மாநில அமைச்சர்களைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் தி.மு.க. அமைச்சர்களையும் குறிவைத்துள்ளது என 2022, ஆகஸ்ட் 24-26 இதழில் செய்தி வெளியிட்டி ருந்தோம். இந்நிலையில் தமிழகத்தில் ஆளும்கட்சி தலைமை, அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள் மீது குறிவைத்து களமிறங்கியுள்ளது வருமான வரித்துறை.

Advertisment

dd

இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 26 சதவீதம். சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிறது தமிழக தோல் தொழிற்சாலைகள். தோல்பொருள் உற்பத்தி என்றால் அது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்தான். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் 1976-ல் ஃபரிதா காலணி தொழிற்சாலையைத் தொடங்கினார் மெக்கா ரஃபிக் அகமத் என்கிற பாபுஜீ. ஆம்பூரில் மட்டும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இந்நிறுவனத்தை மெக்கா ராஃபிக் அகமத்தும், அவரது மகன்களும் நடத்துகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கே.எச். குழுமம், 1947-ல் தொடங்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதன் உரிமையாளர்கள். ராணிப்பேட்டை, விஷாரம் பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் இவர்களது கம்பெனிகள்தான். பல்லாயிரம் பேர் இந்த குழுமத்தில் நேரடி யாக வேலை செய்கிறார்கள். ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் வருமானம் பார்க்கிறது இந்நிறுவனம்.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஃபரிதா குழுமத்துக்கு சொந்த மாகவுள்ள 20 இடங்கள், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். வரிஏய்ப்பு என காரணம் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் இருப்பது அரசியல் என்கிறார்கள் தொழி லதிபர்கள்.

இதுகுறித்து விசாரித்த போது, “2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமரானால் தொழில்கள் வளர்ச்சி பெறும் என நம்பியவர்களில் தொழிலதி பர்களும் அடக்கம். மோடி பிரதமரானபின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் தொழில்கள் முடங்கிப்போய் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு படிப்படி யாக நிறுத்தினோம். இதனால் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தொழில் மீண்டும் புத்துணர்வு பெற காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் சரியாக இருக்கும் என விரும்பினோம். ஆம்பூரில் தங்களது நிறுவன தொழிலாளர்களை சந்தித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தொழிற் சாலைக்குள் மு.க.ஸ்டாலினை அனுமதித்தது ஃபரிதா குழுமம்.

Advertisment

dd

மத்தியில் பா.ஜ.க.வும் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் பெரியளவில் வெற்றிபெற்றது. மீண்டும் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வுக்கு வெளிப்படையாக வேலை செய்தனர் பல தொழிலதிபர்கள். 2021 சட்டமன்ற தேர்தலிலும் சில நிறுவனங்கள் மறைமுகமாக தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி வழங்கின. அதில் ஃபரிதா குழுமமும் அடக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, விஷாரம் பகுதிகளில் பெரியளவில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். மதம், சமூகம், அரசியல் சார்ந்த எல்லா விவகாரத்திலும் கே.எச். குழுமத்தினரின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். 90 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாழும் விஷாரம் நகராட்சி மட்டுமல்லாமல் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா இஸ்லாமியர்கள் இவர் சொல்வதைக் கேட்பார்கள். இதனால்தான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது மேல்விஷாரம் பகுதி வாக்குகளில் 90 சதவிகித வாக்குகளை தற்போதைய அமைச்சர் காந்தி பெற்றார்.

2024 தேர்தலுக்காக இப்போதே பா.ஜ.க. வேலையைத் தொடங்கியுள்ளது. அதையொட்டி, சமீபத்தில் தொழிலதிபர்களுக்கு ஒரு தகவல் டெல்லியிலிருந்து வந்தது. காங்கிரஸ், தி.மு.க.வுக்கு எந்த விதத்திலும் உதவக்கூடாது என்பதே அந்த தகவல். இந்த ரெய்டு ஏற்கெனவே தமிழக அரசுக்கு, தொழிலதிபர்களும், நிறுவனங்களும் உதவியதற் கான பதிலடி. தவிரவும் இதே ஆதரவு நிலைப்பாடு தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னெச்சரிக்கையும்கூட.

தென்னிந்திய வர்த்தக தொழில் மற்றும் தொழிற்சங்கம், அகில இந்திய தோல் தொழில் நிறுவன சங்கத்தின் தலைவர், வெளிநாட்டு வர்த்தக வாரிய உறுப்பினர் பதவிகளில் ஃபரிதா குழுமத் தலைவர் உள்ளார். இவர் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் 5 நிறுவனங்கள் தோல்பொருள் மற்றும் காலணி தொழிற்சாலைகளை உருவாக்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கையெழுத்தானது. இதன்படி 2025-க்குள் 20 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உறுதி என பேசினார் முதலமைச்சர்.

இந்த விழா நாளன்று காலையே ரெய்டுகளும் தொடங்கின. தங்களின் எச்சரிக்கை யை மீறி தொழிலதிபர்கள் செயல்படுவதைக் கண்டு கோபமாகியே பா.ஜ.க. ரெய்டை ஏவியுள்ளது என்கிறார்கள் விவரமறிந்த தொழிலதிபர்கள்.

nkn270822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe