5 மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பிஸியாக இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரான ஆபரேசன்களை செய்வதிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி டெல்லியில் போடப் பட்டுள்ள திட்டம் செம ஹாட் என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகள், "சமீபத்தில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சீரியஸாக எடுத்துக்கொண்டது. சம்பவம் குறித்து ஆளுநர் ரவியிடம் விசாரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, தமிழகத்தின் சட்டம்லிஒழுங்கு கேள்விக் குறியாகியிருப்பதாகவும், ராஜ்பவனுக்கே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் ஆளுநர். இதனையடுத்து, ராஜ்பவனுக்கு எதிரான தாக்குதலில் நடந்தது பற்றிய முழு ரிப்போர்ட்டை மத்திய உளவுத்துறையிடமிருந்து வாங்கி யிருக்கிறார் அமித்ஷா.
ஏற்கனவே, தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழல்கள் குறித்து தனித்தனியாக கோப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநரும், ஐ.பி.யும் அனுப்பும் ரிப்போர்ட்டுகள் கனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி தமிழகத்திற்கான நவரத்னா ஆபரேசனை கையிலெடுக்க டெல்லியில் திட்டமிடப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்ததும் இந்த திட்டத்தின் விளைவுகள் தமிழகத்தில் எதிரொ லிக்கும்''” என்கிறார்கள்.
இத்தகைய அதிர்ச்சித் தகவல்கள் குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "அரசியலாக இருந்தாலும் சரி, சனாதனத்தை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் சர

இத்தகைய அதிர்ச்சித் தகவல்கள் குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "அரசியலாக இருந்தாலும் சரி, சனாதனத்தை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் சரி,… ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வின் கொள்கை என்பது நீண்டகால திட்டமாகத்தான் இருக்கும். குறுகிய கால திட்டமாக எப்போதும் இருக்காது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் என்ன நடக்கவேண்டுமோ அதற்காக இப்போதிலிருந்தே திட்டமிட்டு காய்களை மெல்ல நகர்த்துவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அஜெண்டாவாக இருக்கும்.
அந்த வகையில், தமிழகத்தில் 2026-ல் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென 2016-ல் ப்ளான் போட்டன ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைமைகள். அதற்கேற்ப, தமிழகத்தின் அரசியல் ஆளுமை களான ஜெயலலிதாவும், கலைஞரும் மறைந்ததைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டது. அதன் ஒரு கட்டமாகமாகத்தான் தமிழக அரசியலில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸை வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டை மெல்ல... மெல்ல ஆரம்பித்தனர். அந்த வகையில், அவர்கள் போட்டு வைத்த அரசியல் திட்டத்தில் தற்போது வரை 50 சதவீதத்தை கடந்துவிட்டதாகக் கருதுகின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 25 சதவீதத்தை நிறைவேற்றினாலே போதும், 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களின் இலக்கை அடைந்துவிட முடியும் என்கிற இறுமாப்பில் இருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது 25 சதவீதம் நிறைவேற வேண்டும் என்கிற அந்த திட்டத்திற்கு டெல்லி வைத்துள்ள பெயர்தான் "ஆபரேஷன் நவரத்தினா.' அதாவது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் இமேஜைப் பற்றி தமிழக மக்களிடம் ஈசியாக பதிய வைக்க வேண்டுமெனில், இரண்டு விசயங்கள் போதும் என நினைக்கிறார்கள் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள். முதல் விசயம், அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் ஊழல் நிறைந்தவை என்றும், மக்களிடம் பணப்புழக்கம் இல்லை; ஆனால், மந்திரிகளிடம் பாருங்கள் கோடி கோடியாய் குவிந்து கிடக்கிறது. இதெல்லாம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணம் என்றும் தமிழக மக்களிடம் பதிய வைப்பது.
இரண்டாவது விசயம், ஓட்டுக்கு பணம் கொடுப்போம் என மக்களை திராவிட கட்சிகள் கரப்ட்டாக்கி வைத்திருப்பதால், ஓட்டுக்கு பணம் கொடுக்க திராவிட கட்சிகள் சேமிக்கும் கோடிகளை கொள்ளை யடிப்பதன் மூலம் தடுப்பது என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படவில்லையெனில் மக்களின் மனம் மாறும் என்பதும்தான் இரண்டாவது விசயம். இதற்காக தங்களின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது டெல்லி.
உதாரணமாக, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அப்போது தமிழக முதல்வராக இருந்த தங்களின் கூட்டணி பார்ட்னரான எடப்பாடியை மையப்படுத்தி 2018-ல் அதிரடி வேட்டையை நடத்தியது வருமானவரித்துறை. குறிப்பாக, எடப் பாடிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டரான செய்யாதுரை, அவரது மகன் நாகராஜ், எடப்பாடியின் சம்பந்தி மற்றும் உறவினர்கள் என அவர்கள் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப் பட்டது.
இதில் கணக்கில் காட்டப்படாமல் குவித்து வைக்கப் பட்ட பல ஆயிரம் கோடிகளை கைப் பற்றியது வருமான வரித்துறை. அன் றைக்கு இந்த ரெய்டுகள் பர பரப்பாக பேசப் பட்டதும், அ.தி. மு.க. கூடாரமே அதிர்ச்சியடைந் ததும் வரலாறு. இதில் அதிருப்தி யடைந்த எடப்பாடி பழனிச்சாமி, மோடி மற்றும் அமித்ஷாவிடம் தனது சார்பில் பேசும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலமாக, "நாடாளுமன்றத் தேர்த லுக்காக சேமிக்கப் பட்ட பணம் அது. ரெய்டு என்ற பேரில் அதனை எடுத்துக் கொண்டால் தேர் தலை எப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ள முடியும்? நம் கூட்டணிதான் எப்படி இயல்பானதாக இருக்கும்?' என்றெல்லாம் தனது கோபத்தை அப்போது வெளிப்படுத்தி னார்.
2019 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், "பார்த்தீர்களா… உங்கள் ரெய்டுகள் ஏற்படுத்திய விளைவுகளை' என கோபமாக டெல்லிக்கு தகவல் பாஸ் பண்ணினார் எடப் பாடி பழனிச்சாமி. அதே வரலாறுதான் இப் போது தி.மு.க. ஆட்சியின் போதும் திரும்புகிறது. அதற்காக டெல்லியில் போடப்பட்டிருப்பதுதான் மோடியின் ஆபரேஷன் நவரத்னா''’ என்று விவரிக்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உரு வாக்குவதுதான் மோடி ஆபரேசனின் முதற்கட்டத் திட்டம். அந்த வகையில், ஓட்டுக்கு பணம் கொடுக்க தி.மு.க. சேமித்து வைக்கும் கோடி களை கைப்பற்றவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.
அந்த ரெய்டுகள் மூலம், தி.மு.க. மந்திரிகளும், எம்.பி.க்களும் வைத்திருக்கும் பணத்தை கைப்பற்றி, அதன் மூவ்களை மோடியும் அமித்ஷாவும் தடுத்து வருகிறார்கள்.
தி.மு.க.வின் கஜானா எனப்படும் செந்தில் பாலாஜியை கைதுசெய்து சிறையில் அடைத்து விட்டனர். மற்றொரு கஜானா என வர்ணிக்கப்படும் எம்.பி. ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே. எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்டவர் களின் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிப்பதன் மூலம் தி.மு.க.வுக்கு நெருக் கடியை ஏற்படுத்துகின்றனர். இந்த வழக்குகள் தி.மு.க. அமைச்சர்கள் மீது தொங்கும் கத்திதான்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை தயாரித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அந்த ஊழல்களில் ஜீரணிக்க முடியாத பெரும் ஊழல்களை செய்தவர்கள் என டெல்லி பட்டியலிட்ட போது அதில் 9 அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். ஆரம்பத்தில் 5 அமைச்சர்கள்தான் இருந் திருக்கிறார்கள். ஆனால், ஊழல் விவகாரங்கள் டெல்லிக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது, 9 அமைச்சர்களாக எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் முதல், முதல் முறை அமைச்சர்கள் வரை 9 பேர் அதில் இடம்பிடித்திருக்கிறார்கள். அந்த 9 அமைச்சர்களுக்கு எதிரான அதிரடிகளை நடத்தத்தான் கோப்புகள் நகர்ந்துவருகிறது. அதற்கான ஆபரேசன் பெயர்தான் "நவரத்னா'. (நவ என்றால் 9) வடக்கில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நவரத்தினங் களுக்கு எதிரான அதிர்ச்சிகள் காத்திருக்கிறது''” என்கிறார்கள்.
உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை ஏதோ சிரமப்பட்டு மத்திய அரசு சேகரித்ததாக நினைக்கத் தேவையில்லை. தி.மு.க. அரசில் முக்கிய துறைகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே டெல்லிக்கு தகவல்களை கொடுத்து வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லி வளைத்து வைத்திருக் கிறது. இவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தலையையும், மத்திய அரசுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தெரியுமா? தெரியாதா? என்பதுதான் புரியாத புதிர்.
ஆனால், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் விவகாரங்களை டெல்லி சேகரித்து ஆக்ஷன் எடுக்கவிருக்கிறது என்பதை மட்டும் முதல்வர் ஸ்டாலின் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் 31-ந் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் மேலும், அனைவரும் உணரும் வகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
"அமைச்சர்களிடம் கடுமை காட்டும் முதல்வர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் காட்ட வேண்டும்'’என்கிறார்கள் உளவுத்துறையினர்.
-இரா.இளையசெல்வன்