தி.மு.க. சலோ! அ.தி.மு.க. கவுன்சிலர்களை வழியனுப்பும் மா.செ!

admk

"தன்னுடைய யூனியனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மற்ற யூனியன்களைத் தாரைவார்க்கத் தொடங்கிவிட்டார் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மா.செ.வும் எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதன்' என்ற பரபரப்பு பேச்சு, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வினரைக் கலக்கிவருகிறது.

ad

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க.வின் தூத்துக்குடி மாவட்ட தெற்கு செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் எக்ஸ் எம்.ல்.ஏ.வான சண்முகநாதனின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் யூனியனைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காக அதன் கவுன்சிலர்களைத் தி.மு.க.வின் பக்கம் கொண்டுசெல்ல ஆரம்பித்திருக்கிறார். அவர் தரப்பு முயற்சிக்கு பலனும் கிடைத்திருக்கிறது. இதையறிந்து அரண்டுபோன சண்முகநாதன், "தனது யூனியனைக் கலைக்கவேண்டாம், வேண்டுமானால் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் சாத்தான்குளம் யூனியனை உங்களுக்குச் சாதகமாகத் திருப்புகிறேன்' என்று தனது தரப்பினர் மூலம் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

11

அவர்கள் குறிப்பிடும் உள்ளடிகள்தான் இவை.

14 கவுன்சிலர்களைக் கொண்ட ஸ்ரீவைகுண்டம் யூனியனில் அ.தி.மு.க. 6, தி.மு.க. 4, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 என வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அ.தி.மு.க.வின் கவுன்சிலரான நாராயணன், ராமலட்சுமி இருவரும் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் அ.தி.மு.க.வின் பலம் குறைந்து, தி.மு.க.வின் பலம் 6 ஆனது. அதோடு தோழமைக் கூட்டணிக் கட்சியான காங் கிரஸ் கவுன்சிலர்களும் இணைய, தி.மு.க.வின் பலம் 8 ஆனது. இதைக்கொண்டு இந்த யூனியனைத் தனதாக்க தி.மு.க. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால் டீலிங் காரணமாக அந்த யூனியனில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கவில்லையாம்.

17 உறுப்பினர்களைக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர்களில் அ.தி.மு.க. 12, தி.மு.க. 5 என்றளவில் இருந்தது. இதன் தலைவர் சத்யா. மா.செ. தரப்புகளின் நிர்பந்தத்தால் இதன் துணைத் தலைவரான அ.தி.மு.க.வின் செல்வகுமார் மற்றும் சந்திரசேகர் இருவரும் தி.மு.க.வில் இணைந்திருக் கிறார்கள். தேவவிண்ணரசி, பேச்சியம்மாள் ஆகிய இரண்டு கவுன்சிலர்களையும் தி.மு.க.விற்கு போகும்படி நிர்பந்திக்க... அவர்களோ அதனை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிர்பந்திக்கப்படுகிறார்களாம். இன்னொரு கவுன்சிலரும் ஸ்ரீவைகுண்டம் யூனியனில் ஒ.செ.வுமான அழகேச னிடம், தி.மு.க. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்பட்சத்தில் அதனை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அழுத்தம் காரணமாக அழகேசனும் அதற்கு சம்மதித்திருக் கிறாராம்.

14 கவுன்சிலர்களைக் கொண்ட சாத்தான் குளம் யூனியனில் அ.தி.மு.க 9, காங்கிரஸ் 2, சுயேட்சை 2, தி.மு.க. 1 என்றளவிலிருக்கின்றனர். இதன் தலைவர் அ.தி.மு.க.வின் ஜெயபதி. அ.தி.மு.க. கவுன்சிலர்களான லதா மற்றும் மீனா இருவரும் தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்கள். இதேபோன்ற நிர்ப்பந்தம் தலைவர் ஜெயபதிக்கும் தரப்படு கிறதாம்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டப் பஞ்சாயத்தும், சாத்தான்குளம் யூனியனும் தி.மு.க. தரப்புகளால் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுக் கலைக்கப்படலாம் என்கிறார்கள். மா.செ. சண்முகநாதன் உடனிருக்கும் மாவட்ட அவைத் தலைவரான திருப்பாற்கடலும் தி.மு.க.வின் பக்கம் செயல்படுவது சண்முகநாதனுக்கும் தெரிந்த விசயம்தான் என்கிறார்கள்.

இதில் சாத்தான்குளம் யூனியன், மா.செ. சண்முகநாதன் மாவட்டப் பொறுப்பிற்குட்பட்டது. அதேசமயம் தூத்துக்குடி மாவட்டப் பஞ்சாயத் தோ, முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி எம்.எல்.ஏ.வும் வ.மா.செ.வுமான கடம்பூர்ராஜின் தீவிர முயற்சியால் அ.தி.முக. வசமானது. தற்போது வரை அவரது கட்டுப்பாட்டி லிருக்கிறது. அவரால் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவராக நியமிக்கப்பட்டவர்தான் சத்யா.

admk

தற்போது சண்முகநாதன் தரப்புகளால் கவுன் சிலர்கள் தி.மு.க. பக்கம் போனதால் மாவட்டப் பஞ்சாயத்தில் அ.தி.மு.க. பலம் குறைய, எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜிற்கும் மா.செ. சண்முகநாதனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறதாம். பேச்சுப்படி மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் சாத்தான்குளம் யூனியன் கவுன்சிலர்கள் தி.மு.க. பக்கம் சென்றதால், ஏற்கனவே தி.மு.க.வில் இணைந்த ஸ்ரீவை யூனி யனின் கவுன்சிலர்களைத் திரும்ப அ.தி.மு.க.விற்கு அனுப்பும்படி சண்முகநாதன் தரப்பு கேட்டுக்கொள்ள, அந்த கவுன்சிலர்கள் அ.தி.மு.க.விற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்கிறார்கள் ர.ர.க்கள்.

இதுகுறித்து மா.செ. சண்முகநாதன், ”"சில கவுன்சிலர்கள் தி.மு.க. பக்கம் போயிருக்கிறார்கள் தான். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 80 சதவிகிதம் ஆதரவு வேண்டும். அது எங்கள் வசமிருக்கிறது. மாவட்டப் பஞ்சாயத்தை குடுத்துட்டு மத்ததைக் காப்பாத்தணும்ன்ற அவசியம் எங்களுக்குக் கிடையாது''” என்றார்.

தொடர்ந்து நாம் அ.தி.மு.க.வின் வ.மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான கடம்பூர்ராஜிடம் இதுகுறித்துப் பேசியபோது, “"நடப்பதை நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். மாவட்ட பஞ்சாயத்துக் கவுன் சிலர்கள் 9 பேரையும் வரவழைத்துப் பேசியுள் ளேன். மாவட்டப் பஞ்சாயத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டுவந்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்'' என்கிறார்.

nkn180821
இதையும் படியுங்கள்
Subscribe