Advertisment

தி.மு.க. மாஜி மா.செ. சந்தேக மரணம்! -கோவை பரபரப்பு!

dd

கோவையில் வியாழனன்று தி.மு.க. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பையா கவுண்டரின் சந்தேக மரணம், பல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை மாவட் டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல் லைக்குட்பட்ட காளப் பட்டியில் உள்ள தனது தோட் டத்து வீட்டில் தி.மு.க. முன் னாள் கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப் பாளரும், 2021-ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தி.மு.க. சட்டமன்ற வேட்பாளருமான பையா க

கோவையில் வியாழனன்று தி.மு.க. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பையா கவுண்டரின் சந்தேக மரணம், பல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை மாவட் டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல் லைக்குட்பட்ட காளப் பட்டியில் உள்ள தனது தோட் டத்து வீட்டில் தி.மு.க. முன் னாள் கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப் பாளரும், 2021-ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தி.மு.க. சட்டமன்ற வேட்பாளருமான பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் தூக்கு மாட்டிக் கிடந்துள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அருகிலுள்ள கோவை கே.எம்.சி.எச். மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபொழுது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றோம் எனத் தெரிவித்தனர் கோவில்பாளையம் காவல்துறையினர்.

mla

Advertisment

"கட்சியின் மிகச்சிறந்த வேலைக்காரனை இழந்துவிட்டோம்'’என கோவை மாவட்ட தி.மு.க.வினர் வலைத்தளங்களில் அனுதாபத் தை பகிரத் தொடங்கினர். முதலில் தற்கொலை வழக்காக பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கிய கோவில்பாளையம் இன்ஸ்பெக் டர் குணசேகரன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த தகவல் எல்லாம் அதிர்ச்சி ரகமே. இறப்பின் போது பின்னந் தலையில் காயங் கள் இருந்ததாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, "இவரின் மரணத்தில் இரு வேறு சந்தேகங்கள் எழும்பி யுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி இருக் கும்பொழுது தடாகம் பகுதியில் செயல் பட்டு வந்த சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு தடை விதித்தார். நான் தடையை நீக்கித் தருகிறேன் என ரூ.6 கோடி வரை சம்பந்தப்பட்ட செங்கல் சூளை அதிபர் களிடம் வசூலித்து இருக்கிறார் பையா கவுண்டர். ஆனால் இன்றுவரை தடை நீங்கவில்லை.

dd

இதுபோல பூங்கா நகர் பகுதியில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்திருக்கிறார். 13 வயதில் குழந்தை இருக்கின்றது. அந்தப் பெண்ணுக்கு இவருடைய சொத்தை எழுதி வைத்ததால் அது தொடர்பாக இவருடைய குடும்பத் தாருக்கும் இவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இருந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள்தான் இவர் உயிரைப் பறித்துள்ளது'' என்கின்றார் அவர்.

ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து, கொலையின் பின்ன ணிக் காரணம் குறித்து தீவிரமாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது கோவை போலீஸ்.

nkn270124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe