தமிழக அரசியல் களம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் மீண்டும் பரபரப் பாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவினால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுடன் சேர்ந்து இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் திருமகன் ஈ.வெ.ராவுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியைக் கேட்டு மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்தார் இளங்கோவன். தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது கோரிக்கையை ஏற்று தி.மு.க.வின் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதியை திருமகன் ஈ.வெ.ரா.வுக்காக கொடுத்தார். இரண்டே வருடத்தில் துரதிர்ஷ்டவசமாக திருமகன் மறைந்துவிட, அவரது தந்தையான இளங்கோவனிடம், “"மகன் விட்டுச்சென்ற பணிகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்'’என அந்தத் தொகுதியில் இளங்கோவனை வேட்பாளராக நிறுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது நடந்த இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் களமிறங்கி எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரைவிட 66,233 வாக்க
தமிழக அரசியல் களம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் மீண்டும் பரபரப் பாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவினால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுடன் சேர்ந்து இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் திருமகன் ஈ.வெ.ராவுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியைக் கேட்டு மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்தார் இளங்கோவன். தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது கோரிக்கையை ஏற்று தி.மு.க.வின் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதியை திருமகன் ஈ.வெ.ரா.வுக்காக கொடுத்தார். இரண்டே வருடத்தில் துரதிர்ஷ்டவசமாக திருமகன் மறைந்துவிட, அவரது தந்தையான இளங்கோவனிடம், “"மகன் விட்டுச்சென்ற பணிகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்'’என அந்தத் தொகுதியில் இளங்கோவனை வேட்பாளராக நிறுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது நடந்த இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் களமிறங்கி எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரைவிட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங் கோவனை வெற்றிபெற வைத்தார்கள். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் இளங்கோவன் மறைந்துவிட தற்போது மீண்டும் இடைத்தேர்தல் வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டி யிடவேண்டுமென அக்கட்சியிலுள்ள சிலர் விரும்பினார்கள். ஆனால், மறைந்த ஈ.வி. கே.எஸ். குடும்பத்தினர் ‘தேர்தலில் போட்டி யிட விருப்பமில்லை’ எனக் கூறிவிட்டார் கள். ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நிர் வாகிகளான சிலர் நாங்கள் வேட்பாளராக வருகிறோம் என வந்தார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.என்.பழனிச்சாமி, மக்கள் ராஜன், முத்துக்குமார், கோபி, கவுன்சிலர் ஈ.பி.ரவி ஐந்து பேரும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள். ஆனால், சீட் கேட்டு டெல்லிவரை சென்றார்கள்.
இந்நிலையில் தி.மு.க. தலைமை, காங் கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை யை அழைத்து "யார் வேட்பாளர்' எனக் கேட்டது. "வேட்பாளர் நிறைய பேர் இருக்கிறார்கள்' என செல்வப்பெருந்தகை கூற... “"ஓ.கே. இது பொதுத்தேர்தல் அல்ல. இடைத்தேர்தல். சென்றமுறை தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ப தால் இளங்கோவனை நிறுத்தி அவரை வெற்றிபெற வைத்தோம். இப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் விருப்பமில்லை. நீங்கள் வேட்பாளர் எனக் கூறும் அனைவருமே ஈரோடு கிழக்குத் தொகுதியை சாராத நபர்கள். இருப்பினும் தி.மு.க. உங்களை ஆதரிக்கிறது. வேட்பாளரை நிறுத்துங்கள். சென்றமுறை வாங் கியதில் ஒரு ஓட்டுகூட குறையக் கூடாது. வாக்கு வித்தியாசம் அ.தி.மு.க.வைவிட அதிகமாக இருக்கவேண்டும்''’எனக் கூறியது.
இதனால் காங்கிரஸ் தரப்பில் சற்று தயக்கம் ஏற்பட, தனியார் ஆய்வுகள், உளவுத் துறை ரிப்போர்ட்கள் தி.மு.க. இங்கு நேரடியாக நிற்கவேண்டும் எனக் கூறின. இப்போது தி.மு.க. நின்றால் கடந்தமுறை வாங்கியதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்குமென பரிந்துரைத்தது. அதனடிப்படையில் தி.மு.க. போட்டியிட முதல்வர் முடிவுசெய்தார். செல்வப்பெருந் தகையும் அதை ஏற்றுக்கொண்டு தி.மு.க.வே போட்டியிடும் என்று அறிவித்தார். தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி குறிஞ்சி சிவக்குமார், கவுன்சிலர் செல்லப்பொன்னி மனோகரன் ஆகிய நான்கு பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. அதில் இறுதியாக சந்திரகுமாரா? செந்தில்குமாரா என்கிற நிலை வர, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் பரிந்துரையின் பேரில் சந்திரகுமாரை கைகாட்டி வேட் பாளராக அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தநிலையில் எதிர்முகாமான அ.தி.மு.க. 11-ஆம் தேதி தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தியது. அதில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது. நாமும் போட்டியிடவேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், ஈரோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் "நாங் கள் போட்டியிட முடியாது. வேண்டுமானால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாராவது போட்டியிடுங்கள். எங்களால் போட்டியிட்டு செலவழித்து கடனாளியாக முடியாது. குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய் பணம் கொடுங்கள். போட்டியிடலாம்'' என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். இதற்குப் பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “"யாரும் போட்டியிடவேண்டாம், தேர்தலைப் புறக்கணிப்பது என ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன்''” என உறுதியாகக் கூறிவிட்டார்.
சென்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வாக்குகளைவிட மேலும் பெருவாரியான வாக்குகளை இழக்கவேண்டிவரும் என அவருக்கு வந்த ரிப்போர்ட் காரணமாகவே எடப்பாடி இவ்வாறு கூறியுள்ளார். ஒருவேளை டெபாசிட் பறிபோனால் அடுத்து வருகிற பொதுத்தேர்தலில் பெரும் பின்னடைவு வருமென்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க.வைத் தொடர்ந்து கூட்டணியி லுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலைப் புறக்கணிப்ப தாக அறிவித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும்விதமாக சென்ற முறை 6% ஓட்டு வாங்கிய நாம் தமிழர் கட்சியும், 2% ஓட்டு வாங் கிய பா.ஜ.க.வும் களத்துக்கு வந்திருக்கின்றன. இவர்கள் இரண்டாவது இடத்துக்கு வருவோம் என மனக்கணக்கு போட்டுவருகிறார்கள். தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அ.தி.மு.க. யாருக்கு ஆதரவு நிலை எடுக்கப்போகிறது என்பது அடுத்து தெரிய வரும். இந்த நிலையில் 12-ஆம் தேதி தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தைக்கூட்டி தேர்தல் பணியையும் தொடங்கிவிட்டது. தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் பல மாவட்ட நிர்வாகிகளும் ஈரோட் டை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். கடந்தமுறை போலவே தற்போதும் கரன்ஸி மழை பொழியக்கூடும்!