“"ஹலோ தலைவரே... திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியோட 93-வது பிறந்தநாளை சுயமரியாதை நாள் விழாவா டிசம்பர் 1, 2-ஆம் தேதிகள்ல பெரியார் திடல்ல கொண்டாடி யிருக்காங்க''”
"ஆமாம்பா, அந்த விழாவுல என்னென்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா...''
"தி.க. தலைவரோட பிறந்த நாளை சுயமரியாதைத் திருநாளா கொண்டாடுறது எப்பவும் வழக்கமானதுதான். இரண்டுநாளும் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீட்டரங் கம், கவியரங்கம்னு திராவிடர் கழகத் தொண்டர் கள், தலைவர்கள் கலந்துகொள்ள சிறப்பா நடந்துச்சு. தமிழக முதல்வரும், அடையாறிலுள்ள தலைவர் கி.வீரமணி வீட்டுக்குப் போய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து அவர் பிறந்தநாளை சிறப்பு செய்திருக்கார்.''”
“"இந்த ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது', "தினத்தந்தி' நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/rang1-2025-12-05-10-43-58.jpg)
“"ஆமாங்க தலைவரே.. 2021-ல் ஸ்டாலின் வெற்றிபெற்று முதல்வரா பதவியேற்றதும், செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, இதழியல் துறையில் மக்கள் மேம்பாட் டுக்காகவும் விளிம்புநிலை மக்கள் உயர்வுக்காகவும் எழுதும் ஒருவ ருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்னு அறி விச்சார். அதன்படி ஐ.சண்முக நாதன், வி.என்.சாமிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நமது நக்கீரன் ஆசிரியர் அந்த விருதைப் பெற்றார். அந்த வரிசையில் இந்த 2024-ஆம் ஆண்டுக்கான விருதை அரை நூற்றாண்டாக இதழியல் பணியில் சாதித்துவரும் சுகுமாருக்கு வழங்கினது பொருத்தமான தேர்வுதான். அவருக்கு விருதோட பாராட்டுச் சான்றிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்பட்டிருக்கு. அரசியல் தலைவராக மட்டுமின்றி, எழுத்தாள ராகவும், பத்திரிகையாளராகவும் விளங்கிய கலைஞருடன் டி.இ.ஆர்.சுகுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பில் இருந்தார். தவிரவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர்களாகத் திகழ்ந்த கலைஞர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளை நேர்காணல் செய்து மக்களுக்கு சுவாரசியமான செய்திகளை வழங்கியவர்.''”
"மத்திய அமைச்சர் அமித்ஷா, த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்ததைப் பற்றி எடப்பாடியிடம் விவாதிச்சிருக்காராமே?''
"உண்மைதான் தலைவரே... அப்போது, "கோபியில் நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் 30-ஆம் தேதி நடக்க விருக்கிறது. அதனை முடித்துவிட்டு உங்களுக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்புறேன்' எனச் சொல்லியிருந்தார் எடப்பாடி. அதன்படி, ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளாராம். அதில், த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்ததால் அவருக்கு மட்டுமே லாபம். விஜய்க்
“"ஹலோ தலைவரே... திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியோட 93-வது பிறந்தநாளை சுயமரியாதை நாள் விழாவா டிசம்பர் 1, 2-ஆம் தேதிகள்ல பெரியார் திடல்ல கொண்டாடி யிருக்காங்க''”
"ஆமாம்பா, அந்த விழாவுல என்னென்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா...''
"தி.க. தலைவரோட பிறந்த நாளை சுயமரியாதைத் திருநாளா கொண்டாடுறது எப்பவும் வழக்கமானதுதான். இரண்டுநாளும் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீட்டரங் கம், கவியரங்கம்னு திராவிடர் கழகத் தொண்டர் கள், தலைவர்கள் கலந்துகொள்ள சிறப்பா நடந்துச்சு. தமிழக முதல்வரும், அடையாறிலுள்ள தலைவர் கி.வீரமணி வீட்டுக்குப் போய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து அவர் பிறந்தநாளை சிறப்பு செய்திருக்கார்.''”
“"இந்த ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது', "தினத்தந்தி' நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/rang1-2025-12-05-10-43-58.jpg)
“"ஆமாங்க தலைவரே.. 2021-ல் ஸ்டாலின் வெற்றிபெற்று முதல்வரா பதவியேற்றதும், செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, இதழியல் துறையில் மக்கள் மேம்பாட் டுக்காகவும் விளிம்புநிலை மக்கள் உயர்வுக்காகவும் எழுதும் ஒருவ ருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்னு அறி விச்சார். அதன்படி ஐ.சண்முக நாதன், வி.என்.சாமிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நமது நக்கீரன் ஆசிரியர் அந்த விருதைப் பெற்றார். அந்த வரிசையில் இந்த 2024-ஆம் ஆண்டுக்கான விருதை அரை நூற்றாண்டாக இதழியல் பணியில் சாதித்துவரும் சுகுமாருக்கு வழங்கினது பொருத்தமான தேர்வுதான். அவருக்கு விருதோட பாராட்டுச் சான்றிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்பட்டிருக்கு. அரசியல் தலைவராக மட்டுமின்றி, எழுத்தாள ராகவும், பத்திரிகையாளராகவும் விளங்கிய கலைஞருடன் டி.இ.ஆர்.சுகுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பில் இருந்தார். தவிரவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர்களாகத் திகழ்ந்த கலைஞர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளை நேர்காணல் செய்து மக்களுக்கு சுவாரசியமான செய்திகளை வழங்கியவர்.''”
"மத்திய அமைச்சர் அமித்ஷா, த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்ததைப் பற்றி எடப்பாடியிடம் விவாதிச்சிருக்காராமே?''
"உண்மைதான் தலைவரே... அப்போது, "கோபியில் நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் 30-ஆம் தேதி நடக்க விருக்கிறது. அதனை முடித்துவிட்டு உங்களுக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்புறேன்' எனச் சொல்லியிருந்தார் எடப்பாடி. அதன்படி, ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளாராம். அதில், த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்ததால் அவருக்கு மட்டுமே லாபம். விஜய்க்கு எந்த லாபமும் இல்லை. கோபி தொகுதியைக் கடந்து செங்கோட்டையனுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. அ.தி.மு.க.வின் செல்வாக்கில் எந்த சரிவும் இல்லை. கொங்கு மண்டலத்தில் ஒட்டுமொத்த அ.தி.மு.க. வும், என் தலைமையில் நம்பிக்கைகொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகி பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே செங்கோட்டையனைத் தொடர்புகொண்டு வர்றாங்க. தேர்தலில் போட்டியிடவோ அல்லது முக்கிய பதவிகளோ அவர்களுக்கு வாங்கித்தந்தால் மட்டுமே செங்கோட்டையன் பக்கம் இருப்பார்கள். இல்லையெனில், அந்த சிலரும் செங்கோட்டை யனை விட்டு நகர்ந்துடுவாங்க. அதனால், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு எந்த பாதிப்புமில்லை என்று தெரிவித்திருக் கிறாராம். இருந்தாலும், இந்த ரிப்போர்ட்டின் உண்மைத் தன்மையை அறிய, தனியார் ஏஜென்சி மூலம் கொங்கு மண்டலத்தில் ஒரு சர்வே எடுக்க உத்தரவிட்டுள்ளாராம் அமித்ஷா.''
"செங்கோட்டையன் வரவால் த.வெ.க. கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு எழுந்திருக் கிறதாமே...''
"ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான த.வெ.க.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் செங்கோட்டையனை நியமித்தார் விஜய். விஜய்யின் இந்த முடிவை மேற்கண்ட 4 மாவட்ட த.வெ.க. பொறுப் பாளர்கள் ஏற்றுக்கிட்டாங்க. ஆனால், "சட்டமன்றத் தேர்தலில் இந்த 4 மாவட் டங்களுக்கான வேட்பாளர் தேர்வில் சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரமும், நான் தேர்வுசெய்யும் நபர்களைத்தான் வேட்பாளர்களாக அங்கீகரிக்கவேண்டும் என்கிற உத்தரவாதமும் எனக்கு கொடுக்கப்படவேண்டும்' என்று செங்கோட்டையன் வைத்த வேண்டு கோளை ஏற்றுக்கொண்டார் விஜய். இதில் மேற்கண்ட 4 மா.செ.க்கள், நிர்வாகிகள் அதிருப்தியடைந்து புஸ்ஸி ஆனந்திடம் வருத்தப்பட்டிருக் கிறார்கள். 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராக செங்கோட் டையனை நியமித்ததில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், வேட்பாளர் தேர்வில் அவருக்கு முழு அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதைத் தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம். செங்கோட்டையனிடம் முழு அதிகாரமும் இருந்தால், விஜய் மக்கள் மன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிவரும் தலைவரின் தொண்டர்களான பலரும் தேர்தலில் புறக்கணிக்கப் படலாம், இந்த 4 மாவட்டங்களிலும் செங்கோட் டையனின் ஆதரவாளர்களாக இருக்கும் அ.தி.மு.க.வினருக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை தரப்படலாம் என்று எங்களுக்கு சந்தேகமிருக்கிறது. அப்படி நடந்தால், இவ்வளவு காலம் தலைவருக்காக (விஜய்) உழைத்தவர்களுக்கு என்ன அங்கீகாரம்? என்ன மரியாதை? அதனால், வேட்பாளர் தேர்வில் செங்கோட்டையனின் ஆலோசனையை தலைவர் (விஜய்) கேட்கட்டும். அது பிரச்சனை இல்லை. ஆனால், முடிவை தலைவர்தான் எடுக்கவேண்டும். அந்த முடிவு, த.வெ.க.வினருக்கு ஆதரவாக இருக்கவேண்டும்'’ என்று புஸ்ஸியிடம் புலம்பித் தள்ளியிருக்காங்க.''
"தமிழகத்திலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கப்போகுதாமே?''
"ஆமாங்க தலைவரே, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று நாடு முழுக்க பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசிய லை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் பல ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகின் றன. இந்த நிலையில் ஆந்திரா, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங் கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகின்றன. இந்த கணக்கெடுப் பை நடத்த மாநில அரசுகளுக்கு உரிமையும் அதிகார மும் இருப்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக் கிறது. இதே கோரிக்கை தமிழகத் தில் எழுந்தபோது, மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்கவேண்டும் என்று சொல்லி, மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசை வலியுறுத்தியுள்ளது தி.மு.க. அரசு. இந்த நிலையில், மக்கள் தொகை கணக் கெடுப்பு இரண்டு கட்டங்களில் நடத்தப்படுமென்றும், முதல் கட்டம் 2026 ஏப்ரலிலும், இரண்டாம் கட்டம் 2027-லும் நடத்தப்படுமென்றும் நாடாளுமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.''
"பெரியார் அவதூறு வழக்கில் அளிக்கப் பட்ட தீர்ப்பு பெரியார் உணர்வாளர்களை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கு போலிருக்கே...?''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/rang2-2025-12-05-10-44-31.jpg)
"அதுல சந்தேகமே இல்லை தலைவரே... கடந்த 2018-ஆம் ஆண்டு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டிருந்தார் ஹெச்.ராஜா. இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவிக்க, தி.மு.க., தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி களும், தலைவர்களும் கண்டித்திருந்தனர். போலீ சில் புகாரும் கொடுக்கப்பட்டது. ஹெச்.ராஜாவுக்கு எதிராக 2 வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்கு சென்னையிலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. தனக்கு எதி ரான வழக்குகளை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்ய, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இரண்டு வழக்குகளின் விசாரணையை அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கவேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரிக்கப் பட்டு வந்தது. டிசம்பர் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஹெச்.ராஜா குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை என்றும் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜெயவேல். தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டால் அவரை உடனடி கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை எடுப்பர். ஆனால், 6 மாதங்கள் மட்டுமே என்பதால் உடனடியாக கைது நடவடிக்கை இருக்காது. மேல் முறையீடு செய்வதற்கேற்ப ஓராண்டுக்கு தண்ட னையையும் நிறுத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.''
"தன்னோட உதவியாளர் ஒருவருக்கு அ.தி. மு.க.வில் சீட் வாங்கித் தர சசிகலா முயற்சி செய்கிறாராமே?''
"உண்மைதான் தலைவரே! அ.தி.மு.க.வி லிருந்து வந்து தி.மு.க.வில் இணைந்த சின்னச்சாமி, சசிகலாவின் உதவியாளராக இருந்தவர். அவரும் திருத்தணி அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் என்கிற முன்னாள் எம்.எல்.ஏ.வும் சசி கலா எங்கு சென்றாலும் உடன் செல்லக்கூடியவர் களாக இருந்தவர்கள். இவர் போக்குவரத்து தொழிற்சங்க தலைவராகவும் இருந்தவர். ஜெ. ஆட்சிக் காலத்திலேயே வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததோடு, கணக்கு வழக்குகள் தொடர்பாக இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் சொல்லப்பட்டன. அவர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமாக, தி.மு.க.வுக்கு அவரைக் கூட்டிவந்தாராம் செந்தில்பாலாஜி. சசிகலாவிடம் இருந்த இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் இப்போது தி.மு.க.வுக்கு வந்துவிட்டார். மற்றவர் நரசிம்மன் மட்டும்தான். அதி.மு.க.வில் அவருக்கு எப்படியாவது சீட் வாங்கிக்கொடுக்க சசிகலா முயற்சிசெய்து வருகிறாராம்.''”
"பா.ம.க.வின் ராமதாஸ் அணி தி.மு.க.வோட கூட்டணி பற்றி ஆலோசிக்குதாமே?''”
“"நீங்க கேள்விப்பட்டது சரிதான் தலைவரே. பா.ம.க.வில் அன்புமணியிடமிருந்து, கட்சியை மீட்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை ராம தாஸ் அமைத்திருக்கிறார். தவிரவும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேர்தல் கமிஷனை எதிர்த்து தனது மகள் காந்திமதி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடத்தினார். இப்படி அன்புமணியோட நடவடிக்கைகளுக்கு எதிரா ஒருபக்கம் காய் நகர்த்திக் கிட்டே, பா.ஜ.க.விடமும் அன்புமணி பற்றி பெரிய அளவில் புகார் சொல்லி யிருக்கார். அன்புமணிக்கு ஆதரவாகவே பா.ஜ.க. செயல்பாடுகள் இருப்பதால் இன்னொரு பக்கம், டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வோட கூட்டணி பற்றியும் யோசித்து வருகிறாராம். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர்களிடம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்குதாம்.''”
"தூத்துக்குடி அ.தி.மு.க. விக்கெட்டை செங்ஸ் வீழ்த்திட்டாராமே?''
"ஆமாங்க தலைவரே, த.வெ.க.வில் சேர்ந்துள்ள செங்கோட்டையன், அவருக்கு விஜய்யால் தரப்பட்ட அசைன் மெண்ட்படி அ.தி.மு.க.வி லிருந்து முக்கிய நபர்களை த.வெ.க. நோக்கி நகர்த்திவரும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்காராம். அதில் முதல் முயற்சியாக, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அதிருப்தி புள்ளிகளைக் குறிவைத்திருக் கிறாராம். ஜெ. ஆட்சிக் காலத்தில் அவரால் தூத்துக்குடி மா.செ.வாக பொறுப்பில் அமர்த்தப் பட்டு பின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டவர் சி.த.செல்லப்பாண்டியன். எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. வந்ததுமே, தூத்துக்குடி மா.செ. பொறுப்பிலிருந்து செல்லப்பாண்டியனை நீக்கி டம்மியாக்கியிருக்கார். அதோட மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சண்முகநாதன், கடம்பூர்ராஜு இருவரையும் மா.செ. பொறுப்பில் வைத்தார். சண்முகநாதனோ, செல்லப்பாண்டி யனால் நியமிக்கப்பட்ட 40 நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தனக்கு தலையாட்டுபவர்களை நியமித்துள்ளாராம். செல்லப்பாண்டியனின் மனக்குமுறலை புரிந்துகொண்ட செங்ஸ், நவம்பர் 29 அன்று காலையிலேயே செல்லப்பாண்டியனை செல்பேசியில் தொடர்புகொண்டு, "அண்ணே, நீங்க த.வெ.க.விற்கு வந்தால் உங்களை தூத்துக்குடி மா.செ.வாக்கி, எம்.எல்.ஏ.வாக்கி, அமைச்சராக வர்ற அளவுக்கு வழிபண்ணித் தர்றது என் பொறுப்பு. ஆதரவாளர்களைத் திரட்டுறது மட்டும் உங்க பொறுப்பு'ன்னு குளிரக் குளிரப் பேசி இசைய வச்சிருக்காராம். செங்ஸோட பேசியதை செல்லப்பாண்டியனும் ஒத்துக்கிட்டார். ஆக... விரைவில் இணைப்பு விழான்னு உற்சாகமா பேசிக்கறாங்க.''
"சரி, கூட்டணி பற்றி நீ ஒரு தகவல் தந்ததால நானும் கூட்டணி பற்றி ஒரு தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைய 23 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டிருக்காரு பிரேமலதா. அந்தப் பக்கம் கட்டுப்படியாகாதுங்க... என கைவிரிக்கவும், தி.மு.க.விடம் கூட்டணி பேசிவருகிறார். இதுவரை பேச்சுவார்த்தை சுமுகமாகவே போய்வரு கிறதாம்.''”
______________
இறுதிச் சுற்று!
மறைந்தார் ஏ.வி.எம்.சரவணன்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/rang3-2025-12-05-10-44-49.jpg)
தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் வயது மூப்பு காரணமாக டிசம்பர் 4, வியாழனன்று கால மானார். இவர் தமிழ்நாடு அரசின் "கலைமாமணி', புதுச்சேரி அரசின் "சிகரம்' விருதுகளைப் பெற்றவர். ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். "தமிழ்த் திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது' என முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத் தினர். ஏ.வி.எம். நிறுவனமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையா ளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங் களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-கௌதமன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us