தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து பேசிவந்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனை சந்தித்தோம்...

கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்டாலினை விமர்சித்தும் நீங்கள் பேசியதுதான் உங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு காரணம் என்கிறார்களே?

dd

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சத்திய மூர்த்திபவனில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், அரசியல்ரீதியாக இருக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டி கட்சியின் வளர்ச்சிக்காக எனது கருத்தை வலியுறுத்தினேன். கூட்டணிக்கும் ஸ்டாலினுக்கும் எதிராக எந்த கருத்தையும் நான் பேசவில்லை. எனது கருத்தையொட்டியே மாவட்ட தலைவர்கள் பலரும் பேசினார்கள்.. ஆனால், என் மீது மட்டும் நடவடிக்கை. கூட்டணிக்கு எதிராக நான் பேசியிருந்தால் அப்போதே இதனை கே.எஸ்.அழகிரி மறுத்திருக்கலாமே. ஆனால், மறுக்கவில்லை. அப்படியா னால் என் கருத்து தவறில்லை என்று தானே அர்த்தம்?

Advertisment

நீக்கத்துக்கு பின்னணியில் தி.மு.க.வின் நெருக்கடி இருக்கிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் வருத்தப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு தி.மு.க. நெருக்கடி கொடுத்ததால் நடவடிக்கை எடுத்தார்கள் எனவும், நீக்குவதற்கு நான் எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் சொல்லியிருக்கிறார் கே.எஸ். அழகிரி. இப்போது பல்டி அடிக்கிறார்.

உங்கள் மீதான நடவடிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் கட்சியின் சீனியர்களில் ஒருவரான கோபண்ணா மீது குற்றச்சாட்டு வைப்பது ஆரோக்கியமானதா?

Advertisment

காமராஜர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத் தில் 500 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்து விட்டு 8000 சதுரஅடியை மடக்கி வைத்திருப்பதுடன் 35 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியும் வைத்திருக் கிறார் கோபண்ணா. இதுகுறித்து வழக்குப் போட்டி ருக்கிறார் காமராஜர் அரங்கத்தின் மேலாளர். ராகுல் விசிட்டின்போது பலருக்கும் பாஸ் கொடுத்து வருமானம் பார்த்திருக்கிறார். இப்படி நிறைய ஊழல்கள் இருக்கிறது. ஆக, ப்ரஸ் போர்வையில் உள்ளே நுழைந்தவர்களால் ராகுலின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால்? அதனால்தான் மறைந்து கிடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தினேன்.

உங்களுடைய கருத்தில் தனக்கு உடன் பாடில்லை என ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

கூட்டணிக்கு எதிராக நான் பேசியதாக அவரிடம் சொல்லப்பட்டதன் அடிப்படையில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் இணைவதற்காகத்தான் இப்போதிலிருந்தே முரண்பாடுகளை வளர்த்துக்கொள்கிறீர்களா?

தவறான குற்றச்சாட்டு. அண்ணன் ரஜினியை பல வருடங்களாக எனக்குத் தெரியும். பல அரசியல் தலைவர்களும் என்னைப்போல ரஜினியை சந்திப்பவர்கள்தான். அதனால் ரஜினி கட்சியில் அவர்கள் இணைகிறார்கள் என்று அர்த்தமா?

-இளையர்