Advertisment

தி.மு.க. நிர்வாகி மீது பகீர் புகார்! -ஊட்டி சலசலப்பு!

ooty


நீலகிரி மாவட்ட தி.மு.க.வின் துணைச் செய லாளராகவும், ஊட்டி நக ராட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கும் ரவிக்குமாருக்கு எதிரான புகார்கள் ரெக்கைகட்டிப் பறக்கின்றன. இவருக்கு எதிரான பல புகார்கள் கோட்டைவரை நீண்டுள்ள நிலையில், இது குறித்து விசாரித்தபோது... 

Advertisment

"ஊட்டி டீ ஃபேக்டரிக்கு பின்புறம் கோரி சாலையில் மண் சரிவை தடுப்பதற்காக பிரமாண்டமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. அந்த பகுதியில் மக்கள் வாழ்விடங்களோ, வணிக நிறுவனங்களோ எதுவும் இல்லை. ஆனால், ரவிக்குமா ருக்கு சொந்தமான காட்டேஜ் உள்ளது. அந்த


நீலகிரி மாவட்ட தி.மு.க.வின் துணைச் செய லாளராகவும், ஊட்டி நக ராட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கும் ரவிக்குமாருக்கு எதிரான புகார்கள் ரெக்கைகட்டிப் பறக்கின்றன. இவருக்கு எதிரான பல புகார்கள் கோட்டைவரை நீண்டுள்ள நிலையில், இது குறித்து விசாரித்தபோது... 

Advertisment

"ஊட்டி டீ ஃபேக்டரிக்கு பின்புறம் கோரி சாலையில் மண் சரிவை தடுப்பதற்காக பிரமாண்டமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. அந்த பகுதியில் மக்கள் வாழ்விடங்களோ, வணிக நிறுவனங்களோ எதுவும் இல்லை. ஆனால், ரவிக்குமா ருக்கு சொந்தமான காட்டேஜ் உள்ளது. அந்த காட்டேஜின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்பப்படுகிறது. அவரது காட்டேஜின் பாதுகாப்புக்காக அவர் கட்டட்டும்; தவறு கிடையாது. ஆனால், அதற்கான செலவுகளை ரவிக்குமாரின் சொந்த பணத்திலிருந்து செய்ய வேண்டும். 

Advertisment

இதற்கு மாறாக, நகராட்சி நிதியிலிருந்து எடுக்கப்படுகிறது. அதாவது, நமக்கு நாமே திட்டத்திற்கு சொந்தமான நிதியிலிருந்து சுரண்டுகின்றனர். நமக்கு நாமே திட்டம் என்பது தமிழக அரசு 70 சதவீதமும், மக்கள் 30 சதவீதமும் என்கிற நிதிப்பகிர்வில் நிறைவேற்றப்படும் திட்டம். தனி நபரின் லாபத்துக்காக இந்த நிதியை பயன்படுத்தக்கூடாது. 

ஆனால், இந்த சுற்றுச்சுவர் கட்டும் விசயத்தில் ரவிக்குமார் எனும் தனிநபருக்காக அரசு நிதியிலிருந்து சுமார் 1 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த  பணிக்காக நகராட்சி கூட்டத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. தீர்மானம் நிறைவேற் றப்பட்டதாகவும் தெரிய வில்லை. கவுன்சிலின் எந்த அனுமதியையும் பெற  வில்லை. 

அதேபோல, ஊட்டி மெயின் பஜார் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளி யில்தான் ரவிக்குமார் படித்தார். இந்த பள்ளிக்கு அருகே ரவிக்குமாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று உள்ளது. அந்த லாட்ஜை யொட்டி அரசு பள்ளிக்குச் சொந்தமாக இருக்கும் நிலத்தை ஆக்ரமித்து வைத்திருக்கிறார். 

பள்ளி நிர்வாகம் இதுபற்றி நகராட்சிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளது. நோ ஆக்ஷன். அவர் படித்த அரசு பள்ளியின் நிலத்தையே ரவிக்குமார் அபகரித்திருக்கிறார்' என்று குற்றம்சாட்டுகின்றனர். 

நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாக மும் ஆக்ஷன் எடுக்காத நிலையில், அறிவாலயத் துக்கும் கோட்டைக்கும் புகார்கள் பறந்துள்ளன. 

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து ரவிக்குமாரிடம் கேட்டபோது, "நகர வளர்ச்சிக்காக தனியாரின் பங்களிப்புடன் நகராட்சியும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான் "நமக்கு நாமே திட்டம்'. அதில் கூறப்பட்டுள்ள விதிகளின்படிதான் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அதேபோல எந்த ஒரு பள்ளியின் இடத்தையும் நான் ஆக்கிரமிக்கவில்லை'' என்று மறுத்துப் பேசினார்.

இதற்கிடையே, ரவிக்குமாருக்கு எதிரான இந்த வில்லங்கம் குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமைகளுக்கு அந்த கட்சிகளின் நிர்வாகிகள் எடுத்துச் சென்றுள்ளனர். 

-இளையர்

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe