Advertisment

கலைஞர் திறந்த கட்சி கட்டிடத்தை விற்ற தி.மு.க நகரச் செயலாளர்!

dmk

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர தி.மு.க. செயலாளருக்கு எதிரான புகார்கள் அறிவாலயத்துக்குப் பறந்துகொண்டிருக் கின்றன.

Advertisment

உடுமலைப்பேட்டை தி.மு.க.வின் நகர தலைமை அலுவலகம் 1975-ல் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. இதனை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் நகர தி.மு.க. செயலாளர் மத்தீன் என அறிவாலயத்திற்கு புகார் அனுப்பியிருக்கும் மாவட்ட பிரதிநிதி ஆரோக்கியசாமியிடம் நாம் விசாரித்தபோது, "தி.மு.க.வினரின் வியர்வையில் கட்டப்பட்ட மாளிகைதான் உடுமலை நகர தி.மு.க. அலுவலகம். பரப்பளவு மூன்றரை சென்ட். இன்றைய நிலவரப்படி 2 கோடிக்கும் அதிகமாக விலை போகும்.

dmk

எவ்வித காரணமும் இல்லாமல், அறிவாலயத்திலும் அனுமதி பெறாமல் நகர தி.மு.க. அலுவலகத்தை வெறும் 75 லட்சத்துக்கு நகைக்கடைக்காரர் ஒருவருக்கு விற்றுவிட்டார் நகர தி.மு.க. செயலாளர் மத்தீன். தடுத்து நிறுத்த, நான் உட்பட கட்சியின் உழைப்பாளிகள் பலரும் முயற்சித்தோம். கட்சிக்காரர்களை விட்டு தனி நபருக்கு கட்சி அலுவலகம் போய்விடக்கூடாது, மார்க்கெட் நிலவரப்படி கணக்கிட்டு, 2 கோட

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர தி.மு.க. செயலாளருக்கு எதிரான புகார்கள் அறிவாலயத்துக்குப் பறந்துகொண்டிருக் கின்றன.

Advertisment

உடுமலைப்பேட்டை தி.மு.க.வின் நகர தலைமை அலுவலகம் 1975-ல் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. இதனை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் நகர தி.மு.க. செயலாளர் மத்தீன் என அறிவாலயத்திற்கு புகார் அனுப்பியிருக்கும் மாவட்ட பிரதிநிதி ஆரோக்கியசாமியிடம் நாம் விசாரித்தபோது, "தி.மு.க.வினரின் வியர்வையில் கட்டப்பட்ட மாளிகைதான் உடுமலை நகர தி.மு.க. அலுவலகம். பரப்பளவு மூன்றரை சென்ட். இன்றைய நிலவரப்படி 2 கோடிக்கும் அதிகமாக விலை போகும்.

dmk

எவ்வித காரணமும் இல்லாமல், அறிவாலயத்திலும் அனுமதி பெறாமல் நகர தி.மு.க. அலுவலகத்தை வெறும் 75 லட்சத்துக்கு நகைக்கடைக்காரர் ஒருவருக்கு விற்றுவிட்டார் நகர தி.மு.க. செயலாளர் மத்தீன். தடுத்து நிறுத்த, நான் உட்பட கட்சியின் உழைப்பாளிகள் பலரும் முயற்சித்தோம். கட்சிக்காரர்களை விட்டு தனி நபருக்கு கட்சி அலுவலகம் போய்விடக்கூடாது, மார்க்கெட் நிலவரப்படி கணக்கிட்டு, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள நான் முன்வந்தேன். அதுபோல கட்சியினர் பலரும் முன்வந்தனர். ஆனால், கட்சிக்காரர்களுக்கு கொடுக்காமல் சென்ட் வெறும் 20 லட்சம் ரூபாய் என கணக்கிட்டு 75 லட்சத்துக்கு கட்சி அலுவலகத்தை அடிமாட்டு விலைக்கு தனிநபருக்கு விற்றுவிட்டார் மத்தீன்.

அவரிடம் கட்சிக்காரர்கள் கேள்வி கேட்டும் நியாயம் கிடைக் காததால், இந்த விவகாரத்தை நானும், உடுமலை நகர தி.மு.க.வினர் பலரும் அறிவாலயத்துக்கு தெரி வித்தோம். சென்னையிலிருந்து ரெண்டு பேர் வந்து விசாரித்தார்கள், ரிசல்ட் தெரியவில்லை. இந்த விவகாரம் தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

நகர தி.மு.க.வுக்காக நகரத்தை விட்டு ரொம்ப தூரத்தில், கிறிஸ்தவர்கள் கல்லறை அருகே புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதற்கான நிலம் வாங்கியதிலும் சில ஊழல்கள் நடந்துள்ளன. போலி ரசீது அச்சடித்து நன்கொடை வசூலித்திருக்கிறார் மத்தீன்.

அவரை எப்போதும் ரவுடிகள் சூழ்ந்துள்ள நிலையில், சமீபத்தில், தி.மு.க. மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இப்ராஹீம் என்பவரை மத்தீன் தலைமையிலான ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் இப்ராஹீம் அடைக்கலமாக, போலீஸ் ஸ்டேசனுக்குள்ளும் சென்று தகராறு செய்தார் மத்தீன். இதனை போலீஸ்காரர்கள் வீடியோ பதிவு செய்து மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்''‘என்று பலவற்றையும் சுட்டிக்காட்டினார் ஆரோக்கியசாமி.

உடுமலை சந்ரோதய கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர், முதல்வர் ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார்களில், "உடுமலை நகரச் செயலாளராக உள்ள மத்தீன், நாங்கள் தற்போது வசிக்கும் விவசாய நிலத்தை வாங்கி வீட்டு மனையாகப் பிரித்து, அப்ரூவல் மனைகள் என பொதுமக்களிடம் விற்பனை செய்தார். நம்பி வாங்கினோம். ஆனால், நகராட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை என பிறகுதான் தெரிந்தது. அவரோ, நடப்பது எங்க ஆட்சிங்கிறதால சீக்கிரமா அப்ரூவல் வாங்கித் தருகிறேன் எனச் சொல்லிச் சொல்லி ஏமாற்றிவருகிறார். அப்ரூவல் இல்லாததால் அடிப்படை வசதிகளைச் செய்ய மறுக்கிறது நகராட்சி நிர்வாகம்.

மேலும், இடத்தின் விலை மதிப்பை குறைத்து கிரையம் செய்திருப்பதால் இந்திய முத்திரை சட்டப் பிரிவு 47ஏ(1)-ன் கீழ் நடவடிக்கையில் இருக்கிறது. அதனால், மத்தீனால் விற்கப்பட்ட 71 மனைப் பிரிவுகளுக்கும் 52 லட்சத்து 7 ஆயிரத்து 185 ரூபாய் முத்திரைத் தீர்வு கட்டணமாக கட்டினால்தான் எங்களுக்கு கிரைய ஆவணம் கிடைக்கும். முத்திரைத் தீர்வில் இப்படி மோசடி செய்ததால் வீட்டுமனை வாங்கிய ஒவ்வொருவரும் 75,000 ரூபாய் கூடுதலாக கட்டவேண்டிய சுமைகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்''’என்று தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் இடத்தை போலி பத்திரம் செய்து விற்றதாக மத்தீன் மற்றும் நகர அவைத்தலைவர் ஆசாத் மீது நகராட்சியில் பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். இது குறித்த நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் துவக்கியுள்ளனர். அதேபோல, கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை மோசடியாக விற்பனை செய்திருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர, சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

Advertisment

dd

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உடுமலை நகர தி.மு.க. செயலாளர் மத்தீனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் சிறியதாக இருந்ததால் மாற்று இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகக் குழுவோடு ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகக் குழுவும் ஒப்புதல் தந்த நிலையில், கட்சித் தலைமையிடம் அனுமதியும் பெற்றோம். அதன் பிறகு மாவட்ட தலைமையகத்தில் முறைப்படி ஏலம் விடப்பட்டுதான் விற்பனை செய்தோம். இதில் எந்தவித தவறும் நடக்கவில்லை. தலைமையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர் நேரில் வந்து, எல்லா தரப்பிலும் விசாரித்து விட்டு, புகாரில் உண்மையில்லை என கண்டறிந்தார். இதெல்லாம் முடிந்துபோன விவகாரம். ஆனால், எனது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இப்போது மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறார்கள். அதேபோல, போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்து நான் தகராறு செய்யவில்லை. மேலும், அன்-அப்ரூவல் லேண்ட் விற்றது உண்மைதான். ஆனால், வரன்முறை செய்யப்படாத நிலத்தை ப்ளாட் போட்டு விற்பது சட்டவிரோதமானது என அரசாணை போடுவதற்கு முன்பு அந்த நிலம் விற்கப்பட்டது. அதனால், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது'' என்கிறார் அழுத்தமாக

நகரச் செயலாளர் மத்தீனுக்கு எதிரான விவகாரங்கள் திருப்பூர் மாவட்ட தி.மு.க.வில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கின்றன!

nkn020222
இதையும் படியுங்கள்
Subscribe