"பெரிய சார்... பெரிய சார்...' என பாசத்துடன் அழைத்த பேத்தி வயது பிஞ்சுக் குழந்தையிடம் பாலியல்ரீதியாக குரூரமாக நடந்துகொண்ட பள்ளித் தாளாளரால் தமிழ்நாடே தகிப்பிலுள்ளது! கடலூர் மாவட்டம் விருத்தாச் சலம், சக்தி நகரில், வைத்தியலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை நடத்திவருகிறார் வை.பக்கிரி சாமி. பணி ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், விருத்தாசலம் நகராட்சியில் 30லிஆவது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது பள்ளிக்கு அருகிலுள்ள புதுப்பேட்டை யில் வசிக்கும் ஜேம்ஸ்-சுகந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் 5 வயது குழந்தை ஜெசிகாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வைத்தியலிங்கா பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

Advertisment

dmk

கடந்த 11ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு, சுகந்தியின் நாத்தனாரின் மாமியார், பள்ளியிலிருந்து குழந்தை ஜெசிகாவை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜெசிகா, வழக்கத் திற்கு மாறாக மிரட்சியாகக் காணப்பட்டார். "யூரின் வருகிறது' என பாத்ரூமுக்கு சென்ற குழந்தை தயங்கியபடி அங்கேயே அமர்ந்திருக்க, என்ன ஏதென்று குழந்தையிடம் விசாரிக்க, "யூரின் போக முடியல, வலிக்குது பாட்டி'' என்று அழுதிருக்கிறாள். உடனே குழந்தையின் பிறப்புறுப்பைப் பார்த்ததில், வீக்கமாகவும் ரத்தக்கசிவுகளாகவும் இருந்ததால் அதிர்ச்சியாகி அவளது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். குழந்தைக்கு ஏதோ அடிபட்டு விட்டதென நினைத்து உடனடியாக ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள மருத்துவர்களோ, "உடனே ஜி.ஹெச்.சுக்கு கொண்டு செல்லுங்கள்' என அனுப்பிவைத்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கையில் சந்தேகம் எழ, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்த னர். விருத்தாசலம் நகர காவல் நிலையக் காவ லர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை விசா ரிக்கையில், பாலியல் ரீதியாகக் குழந்தை துன் புறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ரேவதியும், காவலர் சங்கீதாவும் மஃப்டியில் மருத்துவமனைக்கு வந்து குழந்தையிடம் பேசப்பேச, "பெரிய சார் கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தார்'' எனவும், யாரந்த பெரிய சார் என்பது புரிந்ததும், தாளாளர் பக்கிரி சாமியின் படத்தை குழந்தையிடம் காட்டி, "இவரா' என விசாரிக்க... குழந்தை ஆமா மென்று தலையாட்டியதும் பகீரென்றானது.

Advertisment

உடனடியாக பக்கிரிசாமியை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, இன்ஸ்பெக்டர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் விசாரணை நடத்த, இன்னொருபக்கம், பள்ளிக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் இன்னொரு போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. பக்கிரிசாமியின் பாலியல் அத்துமீறல் உறுதியாகவும், பக்கிரிசாமிக்கு ஆதரவாக உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர்கள் சில லட்சங்கள் வரை காவல்துறையிடம் பேரம் பேச, பக்கிரிசாமியை பின்னிரவில் கமுக்கமாக வீட்டுக்கு அனுப்பியநிலையில், பத்திரிகையாளர்களுக்கு விஷயம் கசிந்து, சென்னை காவல்துறை தலைமை யகத்திற்கு புகார்கள் பறந்தது. அங்கிருந்து வந்த உத்தரவில் மீண்டும் விடிகாலையிலேயே பக்கிரி சாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் தாயார் அளித்த புகாரில், "குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதைப் பார்த்து குழந்தையிடம் விசா ரித்தபோது "பள்ளியில் இருந்தபோது டாய்லெட் வருகிறது என்று கிளாஸ் மிஸ்ஸிடம் சொன்னேன். அவங்க சார்கிட்ட கேட்டுட்டு போகச் சொன்னாங்க. நான் போய் சார் கிட்ட டாய்லெட் வருதுன்னு சொன்னேன். சார் என்னை டாய்லெட் போக சொன் னாரு.. நான் டாய்லெட்டுக்கு போனபோது பின்னாடி வந்த சார், டாய்லெட்டுக்கு முன்புறம் உள்ள இடத்தில் என்னை நிக்க வச்சி... ...'' என்று குழந்தை சொன்னதை விவரித்தார். மேலும் "நான் வலிக்குதுன்னு சொன்னேன். "சரி போ'ன்னு சொல்லிட்டு, "நீ இதை யார் கிட்டயும் சொல்லிடாத. சொன்னா உன்ன ஸ்கூலுக்குள்ள வரவிடமாட்டேன்'னு சொன்னாரு'' என்று சிறுமி ஜெசிகா கூறியதாகக் குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் ஜெசிகாவின் பிறப்புறுப்பில் தையல்கள் போடப்பட்டுள்ளதால், இன்னும் மோசமான துன்புறுத்தல் நடந்திருக்குமோவெனப் பலரும் சந்தேகிக்கின்றனர். மேலும், குற்றவாளியைப் பாதுகாப்பதிலேயே விருத்தாசலம் காவல் துறையினர் அக்கறை காட்டியது தெரியவருகிறது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஃப்.ஐ.ஆரிலும் குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது. இவ்விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து மனு கொடுக்கப்பட்ட நிலையில், சட்டசபை தொடங்கு வதற்கு முன்பாகவே பக்கிரிசாமியை தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

Advertisment

இதுகுறித்து வழக்கறிஞர் செல்வபிரியா கூறுகையில் "ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்கும் பள்ளியிலேயே பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. குழந்தை களைப் பாதுகாக்கவே 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. போக்சோ சட்டம் மற்ற சட்டங்கள் போன்று அல்ல. இந்த சட்டத்தில் குற்றவாளிக்கு தண்டனை விதிப் பதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் மட்டுமே போதுமானது. பள்ளியில் பயிலும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலைத் தடுக்க போலீசார் தொடர் சிறப்பு விசாரணையை விரிவுபடுத்தி, பெண் குழந்தை களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்'' என்றார்.